மின்னாற்றல்
மேலாண்மை
மின்சாரம் மின் உற்பத்தி
நிலையங்களில் உள்ள மின்னியற்றிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது இம்மின்னியற்றிகள்
இவற்றிலுள்ள டர்பைன்கள் சுழல்வதன் மூலம் இயக்கப்படுகிறது நீராவி, நீர் மற்றும்
காற்று ஆற்றல் ஆகியவை டர்பைன்களை சுழலச் செய்து மின்சார உற்பத்திக்கு காரணமாக
உள்ளன.
உனது வீட்டிலும் பள்ளியிலும்
கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
(i) குறைந்த மின்
ஆற்றலை மேம்படுத்தும் சாதனங்களான சிஎப்எல் (CFL) பல்பு,
எல்இடி பல்புகள் (LED) மற்றும் மின் சாதனங்களை
பயன்படுத்தலாம்.
(ii) உபயோகிக்காத
போது விளக்குகள், மின்விசிறிகள் தொலைக்காட்சிப்பெட்டி,
பிற மின்சாதனங்களில் இணைப்பை துண்டித்து விடலாம்.
(iii) செல்லிடை
பேசி மின் இணைப்பை தேவையில்லாத போது அனைத்து வைக்கலாம்.
(iv) சூரிய
ஒளியினை போதுமான அளவு பயன்படுத்தலாம். மின் நீர் சூடேற்றிகளுக்கு பதிலாக சூரிய ஒளி
நீர் சூடேற்றிகளை பயன்படுத்தலாம்.
(v) குளிர்சாதன
வசதியினை தேவையான போது மட்டும் பயன்படுத்தலாம்.