மின்னணுக்
கழிவுகள் மற்றும் அதன் மேலாண்மை
மின்னணுக் கழிவுகள் என்பது
பயன்படுத்த முடியாத,
பழைய, மீண்டும் சரிப்படுத்தி உபயோகிக்க
முடியாத, மின்சார மற்றும் மின்னணு சாதனங்களைக்
குறிப்பதாகும். இக்கழிவுகளில் நச்சு உலோகங்களான காரீயம், காட்மியம்,
குரோமியம், பாதரசம் , மட்டுமல்லாமல்
பிற உலோகங்களான இரும்பு, தாமிரம், சிலிக்கன்,
அலுமினியம், தங்கம் போன்றவை பிரித்தெடுக்கக்
கூடியவையாக உள்ளன. ஆனால் இவற்றுள் 5% மின் கழிவுகள் மட்டுமே
மறுசுழற்சி செய்யப்படுகிறது.
மின்னணு
சாதனங்கள்:
கணினிகள் மடிக்கணினிகள் தொலைபேசிகள், தொலைக்காட்சி பெட்டிகள், DVD பிளேயர்கள், கால்குலேட்டர்கள், விளையாட்டு சாதனங்கள், பொம்மைகள் போன்றவை,
வீட்டு
உபயோக மின் சாதனங்கள்: குளிர்சாதனப்பெட்டிகள், துணி
துவைக்கும் இயந்திரங்கள், நுண்ணலை சமைப்பான்கள், மிக்ஸி, கிரைண்டர், நீர்
சூடேற்றிகள் போன்றவை.
துணைப்பொருட்கள்: பிரின்டிங் காட்ரிட்ஜஸ், மின்கலன்கள்,
சார்ஜர்கள்.
மின்னணுக் கழிவுகளின்
பாதிப்புகளை அறியாமல் அவற்றினை நிலத்தில் புதைப்பதால் மண் மற்றும் நிலத்தடி நீர்
மாசடைந்து அதனை பயன்படுத்த இயலாமல் போகலாம்.
மேலும் அறிந்து கொள்வோம்
மின்னணுக் கழிவுகளால் ஆரோக்கியத்திற்கு உண்டாகும் பாதிப்புகள்
ஈயம்: மனிதரில் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க
நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
குரோமியம்: மூச்சுத்திணறல் ஆஸ்துமா
கேட்மியம்: சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் படிந்து
அதன் பணிகளை பாதிக்கிறது. நரம்புகளை பாதிக்கின்றது.
பாதரசம்: மூளை மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது
பாலிவினைல் குளோரைடு (PVC) உள்ளிட்ட நெகிழிகள்:
நெகிழிகளை எரிப்பதால் உண்டாகும் டையாக்சின்கள் இனப்பெருக்க மண்டலத்தின்
வளர்ச்சியையும், பணியையும் பாதிக்கிறது.
மின்னணு
சாதனங்களில் உள்ள பல நச்சு கன உலோகங்களான காரீயம் மற்றும் கேட்மியம் போன்றவை நீர்
மாசுபடுவதற்கு மிக முக்கிய காரணிகளாக உள்ளன.
மின்னணுக்
கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் நிலப்பரப்புகள் மற்றும் அருகாமை பகுதிகளில் மாசடைவதோடு, பல உடல் நல பாதிப்புகளையும் உண்டாக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
மின்னணுக் கழிவுகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.
கணினிப்
பொருட்கள் - 66%
தொலைத்
தொடர்பு சாதனங்கள் - 12%
மின்னணு
சாதனங்கள் - 5%
உயிரி
மருத்துவ சாதனங்கள் - 7%
பிற
சாதனங்கள் / உபகரணங்கள் - 6%