Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | வகையீடுகள் (Differentials)

கணிதவியல் - வகையீடுகள் (Differentials) | 12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்

வகையீடுகள் (Differentials)

இங்கு "வகையீடுகள்" பற்றி அறிமுகப்படுத்த மீண்டும் நாம் வகைக்கெழு கருத்துருவைப் பயன்படுத்துவோம்.

வகையீடுகள் (Differentials)

இங்கு "வகையீடுகள்" பற்றி அறிமுகப்படுத்த மீண்டும் நாம் வகைக்கெழு கருத்துருவைப் பயன்படுத்துவோம். இங்கு சமன்பாடு (1) கவனிப்போம்.


இங்கு df/dx என்பது வித்தியாசங்களின் விகிதத்தின் எல்லை மதிப்பைக் குறிக்க லிபினிட்ஸ் பயன்படுத்திய குறியீடு ஆகும். இது x-ஐப் பொருத்து y-ன் வகைக்கெழு எனப்படும். df/dx - df மற்றும் dx இவற்றின் விகிதமாக (வகுத்தலாக) கருதுவது பொருத்தமுள்ளதாகுமா? வேறுவிதமாக வகைக்கெழு என்பது df மற்றும் dx -ன் வகுத்தலாகுமாறு df -க்கும் dx -க்கும் பொருள் கொள்ள முடியுமா? சில நேரங்களில் ஆம் எனலாம். எடுத்துக்காட்டாக, f (x) = mx + c இங்கு m, C என்பன மாறிலிகள், எனில் y = f (x).

எல்லா x R மற்றும்x -க்கு ∆y = f (x + ∆x) - f (x) = m∆x = f'(x)∆x. எனவே சமன்பாடு (2) மற்றும் (3) மெய். இங்கு x மற்றும் y(= f) இவற்றில் ஏற்படும் மாற்றம் நேர்கோட்டின் மீது ஏற்படுகின்றது. இந்நிலையில்

f-ன் மாற்றம் / x-ன் மாற்றம் = ∆y/∆x = f’(x) = df/dx = dy/dx.


இதனால் df = ∆f = dy மற்றும் dx = ∆x என எடுத்துக்கொண்டால் வகைக்கெழு df/dx என்பதுஉண்மையில் df மற்றும் dx -ன் விகிதமாகும். எனவே f -ன் வகையீட்டை பின்வருமாறு வரையறுப்போம்:

வரையறை 8.4

x -ன் அதிகரிப்பு x உடன் மற்றும் எல்லா x (a,b) -க்கும் f : (a,b) → R ஒரு வகையிடத்தக்க சார்பு என்க. f -ன் வகையீடு 

df = f'(x) ∆x .... (8)

என வரையறுக்கப்படுகின்றது.

f(x) = x எனில் சமன்பாடு (8)-ன் படி dx = f'(x) ∆x = 1∆x அதாவது dx = ∆x, இது x -அச்சில் ஏற்படும் மாற்றம். எனவே சமன்பாடு (8)-ன்படி f-ன் வகையீடு df = f (x)dx. அடுத்து ஏதேனும் ஒரு y = f (x) – க்கான வகையீட்டை காண்போம். ∆f = f (x+ dx) - f (x) என்பது y = f (x) என்ற சார்பின் வெளியீட்டில் ஏற்படும் மாற்றத்தைத் தருகின்றது. f'(x) என்பது (x, f (x)) என்ற புள்ளியில் தொடுகோட்டின் சாய்வைத் தருகின்றது. தொடுகோட்டுத் திசையில் f இல் ஏற்படும் மாற்றம் dy அல்லது df என்க. எனவே மேற்கண்டபடி dy = f'(x)dx படம் 8.4 இலிருந்து f ≈ dy = df = f'(x)dx என்பது தெளிவு மற்றும் f’(x) என்பது தோராயமாகf மற்றும்x-ன் விகிதமாகக் காணலாம். எனவே df/dx என்பதை df  மற்றும் dxன் விகிதமாக பொருள் கொள்ளலாம்.


குறிப்புரை

ஒரு சார்பின் வகைக்கெழுவும் ஒரு சார்புதான் என்பது நாம் அறிவோம். ஒரு சார்பு f-ன் வகையீடு சாரா மாறியின் சார்பாக மட்டுமல்லாமல், உள்ளீட்டில் ஏற்படும் மாற்றம் dx = ∆x -ஐயும் சார்ந்துள்ளது. எனவே, df என்பது x மற்றும் dx என்ற இரு மாறும் அளவுகளின் சார்பாக உள்ளது. ∆f ≈ df என்பதை படம் 8.4-இலிருந்து காணலாம்.

ஒப்பிட்டுப் பார்க்க சில சார்புகள், அவற்றின் வகைக்கெழுக்கள் மற்றும் வகையீடுகள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.


அடுத்து நாம் வகையீடுகளின் பண்புகளைப் பற்றிக் காண்போம். இந்த முடிவுகள் வகைக்கெழுவின் வரையறை மற்றும் வகைக்கெழுவின் விதிகளைப் பின்பற்றி கிடைப்பன. (5)-ம் பண்பிற்கு மட்டும் கீழே நிரூபணம் தரப்பட்டுள்ளது. மற்றவை பயிற்சிக்காக விடப்பட்டுள்ளது.


வகையீடுகளின் பண்புகள் (Properties of Differentials)

இங்கு நாம் மெய்மாறிகளாலான மெய்மதிப்புச் சார்புகளை மட்டும் கருத்தில் கொள்வோம்

(1) f ஒரு மாறிலிச் சார்பு எனில் df = 0.

(2) சமனிச் சார்பு f (x) = x எனில் df = 1dx

(3) f வகையிடத்தக்கது மற்றும், C R எனில் d(cf) = cf'(x)dx .

(4) f g என்பன வகையிடத்தக்கன எனில் d ( f  + g) = df + dg = f (x)dx + g' (x)dx.

(5) f g என்பன வகையிடத்தக்கன எனில் d(fg) = fdg + gdf = ( f (x)g'(x) + f(x)g (x))dx:

(6) f,g என்பன வகையிடத்தக்கன எனில்


(7) f, g என்பன வகையிடத்தக்கன என்பதுடன் h = f o g வரையறுக்கப்பட்டது எனில்dh = f'(g(x))g'(x)dx

(8) h(x) = ef(x) எனில் dh = ef(x) f'(x)dx

(9) எல்லா x-க்கும் f (x) > 0 மற்றும் g(x) = log( f (x)) எனில் dg = f’(x) / f(x) dx.


எடுத்துக்காட்டு 8.5

f,g:(a,b) → என்பன வகையிடத்தக்க சார்புகள் எனில் d(fg) = fdg + gdf என நிறுவுக

தீர்வு

f,g : (a,b) → என்பன வகையிடத்தக்க சார்புகள் என்பதுடன் h(x) = f (x)g(x) என்க. h என்பது வகையிடத்தக்க சார்புகளின் பெருக்கல் என்பதால் (a, b) இல் h-ம் வகையிடத்தக்கது. எனவே வரையறைப்படி dh = 'h'(x)dx.

தற்போது பெருக்கல் விதியைப் பயன்படுத்தி h'(x) = f(x)g'(x) + f'(x)g(x) . இதனால் dh = h' (x)dx = (f (x)g'(x) + f (x)g(x))dx = f (x)g'(x)dx + f '(x)g(x)dx 

= f (x)dg + g(x)df = fdg + gdf 


எடுத்துக்காட்டு 8.6

g(x) = x2 + sinx எனில் dg -ஐக் காண்க

தீர்வு

சார்பு g வகையிடத்தக்கது என்பதைக் கவனிக்கவும். மேலும் g'(x) = 2x + cos x இதனால் dg = (2x + cos x)dx


எடுத்துக்காட்டு 8.7

10 செமீ ஆரம் உள்ள கோளத்தின் ஆரம் 0.1 செமீ குறைகின்றது எனில் அதன் கன அளவில் தோராயமாக எவ்வளவு குறையும்

தீர்வு

கோளத்தின் கன அளவு V = 4/3 πr3 என நாம் அறிவோம். இங்கு r > 0 என்பது ஆரம். எனவே வகையீடு dV = 4πr2 dr மற்றும்∆V  ≈ dV எனவே

dV = 4 π(10)2 (9.9 -10)cm3

= 4π102 (-0.1)cm

= - 40π cm3

ஆரம் 10-இலிருந்து 9.9 ஆக குறைகின்றதால் dr = (9.9 - 10) செமீ எனப் பயன்படுத்தியுள்ளோம். மறுபடியும் விடையில் வரும் - குறியீடு கோளத்தின் கன அளவு 40π செமீ3 குறைவதைக் குறிக்கின்றது.


Tags : Mathematics கணிதவியல்.
12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives : Differentials Mathematics in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் : வகையீடுகள் (Differentials) - கணிதவியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்