Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | வேதிவினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள்
   Posted On :  30.07.2022 06:50 am

10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்

வேதிவினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள்

1. வினைபடு பொருள்களின் தன்மை 2. வினைபடு பொருளின் செறிவு 3. வெப்பநிலை 4. வினையூக்கி 5. அழுத்தம் 6. வினைபடு பொருளின் புறப்பரப்பளவு

வேதிவினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள்

ஒரு வினையின் வேகத்தை மாற்ற இயலுமாவினையின் வேகத்தை மாற்ற இயலும். எ.கா இரும்பானது துருப்பிடித்தல் நீரில் நடைபெறுவதை விட அமிலத்தில் வேகமாக நடைபெறும்வினையின் வேகத்தை பாதிக்கக் கூடிய முக்கிய காரணிகள்

1. வினைபடு பொருள்களின் தன்மை

2. வினைபடு பொருளின் செறிவு

3. வெப்பநிலை

4. வினையூக்கி

5. அழுத்தம்

6. வினைபடு பொருளின் புறப்பரப்பளவு

 

i. வினைபடு பொருள்களின் தன்மை

சோடியம்ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால்அசிட்டிக் அமிலத்துடன் மெதுவாக வினை புரிகிறது. ஏன் என்பது உனக்கு தெரியுமாஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம்அசிடிக் அமிலத்தை விட வினைதிறன் மிக்கது. எனவே வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தை பாதிக்கிறது.

2Na(s) + 2HCl(aq) → 2NaCl(aq) + H2 (g) (வேகமாக)

2Na(s) + 2CH3COOH(aq) → 2CH3COONa(aq) + H2(g) (மெதுவாக)

 

ii. வினைபடு பொருளின் செறிவு

வினைபடு பொருள்களின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட கன அளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவே செறிவு ஆகும். செறிவு அதிகமாக இருக்கும் போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும்.

துத்தநாக துகள்கள், 1 M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைவிட 2M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வேகமாக வினை புரிகின்றது.

 

iii. வெப்பநிலை

வெப்பநிலை உயரும்போது வினையின் வேகமும் அதிகரிக்கும். ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது. அறை வெப்பநிலையில் கால்சியம் கார்பனேட் மெதுவாக வினைபுரியும் ஆனால் வெப்பப்படுத்தும்போது வினையின் வேகம் அதிகரிக்கும்.


iv. அழுத்தம்

வாயுநிலையிலுள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கும். ஏனெனில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.

 

vவினையூக்கி

வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடாதுஆனால் அவ்வினையின் வேகத்தை அதிகரிக்கும்.

பொட்டாசியம் குளோரேட்டை சூடுபடுத்தும் போது ஆக்சிஜன் மிகக் குறைவான வேகத்தில் வெளியேறுகிறது. ஆனால் மாங்கனீசு டை ஆக்ஸைடை வினைபடு பொருளுடன் சேர்த்த பிறகு ஆக்சிஜன் வெளியேறும் வேகம் அதிகரிக்கிறது.

 

vi. வினைபடு பொருள்களின் புறப்பரப்பளவு

வேதிவினையில் கட்டியான வினைபடு பொருள்களை விடதூளாக்கப்பட்ட வினைபடு பொருள்கள் விரைவாக வினைபுரியும்

எகா கட்டியான கால்சியம் கார்பனேட்டை விட துளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக விரைவாக வினைபுரியும்ஏனெனில் தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் புறப்பரப்பளவு அதிகளவு இருப்பதால் வினை வேகமாக நிகழ்கிறது.

 

10th Science : Chapter 10 : Types of Chemical Reactions : Factors influencing the rate of a reaction in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள் : வேதிவினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்