நீரின் அயனிப்
பெருக்கம்
தூய நீர் ஒரு மின்கடத்தாப் பொருள்
என்று பெரும்பாலும் கருதப்பட்டாலும் துல்லியமான அளவீடுகள் தூய நீர் சிறிதளவு
மின்சாரத்தைக் கடத்துகிறது என்பதைக் காட்டுவது. கண்டறியப்பட்டுள்ளது. இது நீரின்
தன் அயனியாதல் விளைவால் நடைபெறுகிறது. நீரின் சுய அல்லது சுய அயனியாதல் என்பது இரு
நீர் மூலக்கூறுகள் இணைந்து அயனிகளைச் தோற்றுவிக்கும் நிகழ்வதாகும். இந்நிகழ்வின்
போது ஒரு நீர் மூலக்கூறிலிருந்து ஒரு புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறுக்கு
மாற்றப்பட்டு, ஹைட்ராக்ஸைடு அயனிகள் உருவாகின்றன. புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறுடன்
சேர்ந்து ஹைட்ரோனியம் அயனியாக கீழ்க்கண்டவாறு உருவாகிறது.
இவ்வாறு உருவாகும் ஹைட்ரோனியம் அயனி
ஒரு வலிமையான அமிலம் ஆகும். ஹைட்ராக்சில் அயனி ஒரு வலிமையான காரம் ஆகும். எனவே அவை
உருவானவுடன் மீண்டும் இணைந்து நீரைத் தருகின்றன. இது ஒரு மீள் வினையாகும். மேலும்
இவ்வினை விரைவில் சமநிலையை அடைகிறது. எனவே உருவான அயனிகளின் செறிவு மிகக்
குறைவாகும். இந்த ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரோனியம் அயனியின் செறிவுகளின்
பெருக்குத் தொகையே நீரின் அயனிப்பெருக்கம் எனப்படுகிறது. இது Kw என்றழைக்கப்படுகிறது. இது கணிதச்
சமன்பாடாக கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
Kw = [H3O+]
[OH−]
[H3O+] ஐ எளிமையாக [H+] என எழுதலாம். எனவே நீரின் அயனிப்பெருக்கத்தை Kw = [H+] [OH−] என எழுதலாம்.
இதன் அலகு மோல் டெசிமீ-6 25 °C இதன் மதிப்பு 1.00 × 10-14