வேதிவினைகளின் வகைகள் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 10 : Types of Chemical Reactions
வேதிவினைகளின் வகைகள்
நினைவில் கொள்க
• வேதி மாற்றம் என்பது ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட புதிய பொருள்கள் உருவாகும் ஒரு மாற்றமாகும்.
• பெரும்பாலான சேர்க்கை வினைகள் வெப்ப
உமிழ் வினைகளே ஆகும்.
• எல்லா ஒளிச்சிதைவு வினைகள் வெப்பக்
கொள்வினைகள் ஆகும்.
• இரட்டை இடப்பெயர்ச்சி பரஸ்பர
அயனிகள் பரிமாற்றத்தினால் நிகழ்கின்றன.
• வீழ்படிவு வினைகள் கரையாத உப்பினை
விளைபொருளாக தருகின்றன.
• நடுநிலையாக்க வினை என்பது ஒரு
அமிலமும், காரமும் சேர்ந்து
உப்பையும், நீரையும் தரும் வினையாகும்.
• நடுநிலையாக்கல் வினையால் பற்சிதைவு
தடுக்கப்படுகிறது.
• பெரும்பாலான வேதிவினைகள் மீளா வினைகளாகும்.
• வேதிச் சமநிலை - முன்னோக்கு
வினையின் வேகமும் பின்னோக்கு வினையின் வேகமும் சமமாக உள்ள நிலை.
• வெப்ப நிலை, வேதி வினையின்
வேகத்தை அதிகரிக்கிறது.
• ஒரு மூடிய அமைப்பில் சமநிலை நடைபெற
இயலும்
• அழுத்தம் ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கிறது.
• நம் அன்றாட வாழ்க்கையில் pH முக்கிய பங்கு வகிக்கிறது.
• மனிதர்களில் அனைத்து உயிரி வேதிவினைகளுக்கு
pH மதிப்பு 7
- 7.8 க்கு இடையே நடைபெறும்
• மழைநீரின் pH மதிப்பு 5.6 க்கு கீழ் செல்லும்போது அது அமில மழை எனப்படும்.
• தூய நீர் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியாகும்.