வேதிவினையின்
வேகம்
இதுவரை நாம்வேதிவினைகளின் பல்வேறு
வகைகளையும், வினைப்படுபொருள்கள், விளைபொருள்களின் இயல்பையும்
பற்றி விவாதித்தோம். நாம் கீழ்க்கண்ட வினைகளைக் கருதுவோம்.
· இரும்பு துருப்பிடித்தல்
· உணவு செரித்தல்
· பெட்ரோல் எரிதல்
· பாறைகள் சிதைவடைதல்
ஒவ்வொரு வினையும் எவ்வளவு வேகமாக
நடைபெறுகிறது? மிக மெதுவான வினையிலிருந்து மிக வேகமான வினை வரை வரிசைப்படுத்து? எது மெதுவானது? எது வேகமானது? என்பதை
எவ்வாறு நீ தீர்மானிப்பாய்? ஒரு வினை எவ்வளவு வேகமாக
நடைபெறுகிறது என்பதைத் தீர்மானிக்கும் வழிகளுள் ஒன்றைப் பற்றி பார்ப்போம். குறித்த
காலத்திற்குப் பிறகு ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்கள், உருவாகும் விளைபொருள்கள் ஆகியவற்றின் அளவைக் கணக்கிடு எடுத்துக்காட்டாக 100 கிராம் வேதிப்பொருள் வினைக்குட்படுகிறது என்று கருதுவோம். ஒரு மணி
நேரத்திற்குப் பிறகு 50 கிராம் ‘A’ மீதமுள்ளது
எனக்கொள்வோம்.
A → விளைபொருள்
மற்றொரு வகையில் 100 கிராம் ‘C’
என்ற வேதிப்பொருள் வினைப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 20 கிராம் ‘C’ எஞ்சியுள்ளது எனக் கொள்வோம்.
C → விளைபொருள்
இப்பொழுது அதிவேகமான வினை எதுவென்று
உன்னால் கூற இயலுமா? முதல் வினையில் 50கி வினைப்பொருள் விளைபொருளாக
மாறியுள்ளது. ஆனால் இரண்டாம் வினையில் 80 கி வினைபடு பொருள் 1 மணி நேரத்தில் விளைபொருளாக மாறியுள்ளது. எனவே இரண்டாவது வினை வேகமாக
நடைபெறுகிறது. இந்த அளவீட்டு முறையே வினைவேக முறை எனப்படும்.
“ஒரு வேதி வினையின்
வேகம் என்பது ஓரலகு நேரத்தில் ஏதாவது ஒரு வினைபடுபொருள் அல்லது விளைபொருள்களின்
அளவு அல்லது செறிவில் ஏற்படும் மாற்றமாகும்."
கீழ்க்கண்ட வினையைக் கருதுவோம்.
A → B
இவ்வினையின் வேகம் பின்வருமாறு
எழுதுப்படுகிறது.
இங்கு [A] என்பது A இன் செறிவாகும்.
[B] என்பது B இன்
செறிவாகும்.
‘எதிர்க்குறி’ நேரத்தைப் பொறுத்து A இன் செறிவு குறைவதைக்
காட்டுகிறது.
நேர்க்குறி நேரத்தைப் பொறுத்து B ன் செறிவு
கூடுவதைக் காட்டுகிறது.
குறிப்பு: ‘[ ]’ குறி செறிவைக் குறிக்கிறது. ‘d’ என்பது காலத்தைப் பொறுத்து செறிவில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றத்தைக்
குறிக்கிறது.
வினையில்
வினையின் வேகம் ஏன் முக்கியத்தும் பெறுகிறது?
வினை வேகம் அதிகமாக இருக்கும்போது
குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு விளைபொருள்கள் கிடைக்கும். எனவே ஒரு
வேதியிலாளர்க்கு அதிக அளவு வினை விளை பொருள் பெருவதற்கு வினைவேகம்
முக்கியமானதாகும். மேலும் வினைவேகமானது உணவு பதப்படுத்தலில் வினையின் வேகத்தை
குறைத்து உணவு கெட்டுபோவதை தவிர்க்க முக்கியமானதாகும்.
வேதிவினைகளின்
வேகத்தை பாதிக்கும் காரணிகள்
ஒரு வினையின் வேகத்தை மாற்ற இயலுமா? வினையின் வேகத்தை
மாற்ற இயலும். எ.கா இரும்பானது துருப்பிடித்தல் நீரில் நடைபெறுவதை விட அமிலத்தில்
வேகமாக நடைபெறும், வினையின் வேகத்தை பாதிக்கக் கூடிய முக்கிய
காரணிகள்
1. வினைபடு
பொருள்களின் தன்மை
2. வினைபடு பொருளின் செறிவு
3. வெப்பநிலை
4. வினையூக்கி
5. அழுத்தம்
6. வினைபடு பொருளின்
புறப்பரப்பளவு
சோடியம், ஹைட்ரோகுளோரிக்
அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால், அசிட்டிக்
அமிலத்துடன் மெதுவாக வினை புரிகிறது. ஏன் என்பது உனக்கு தெரியுமா? ஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிடிக் அமிலத்தை
விட வினைதிறன் மிக்கது. எனவே வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தை பாதிக்கிறது.
2Na(s) + 2HCl(aq) → 2NaCl(aq) +
H2 (g) (வேகமாக)
2Na(s) + 2CH3COOH(aq) → 2CH3COONa(aq) +
H2(g) (மெதுவாக)
வினைபடு பொருள்களின் செறிவு
அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட கன அளவு கொண்ட கரைசலில்
கரைந்துள்ள கரைபொருளின் அளவே செறிவு ஆகும். செறிவு அதிகமாக இருக்கும் போது
குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின்
வேகமும் அதிகரிக்கும்.
துத்தநாக துகள்கள், 1 M ஹைட்ரோகுளோரிக்
அமிலத்தைவிட 2M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வேகமாக வினை
புரிகின்றது.
வெப்பநிலை உயரும்போது வினையின்
வேகமும் அதிகரிக்கும். ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடுபொருள்களின்
பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது. அறை வெப்பநிலையில்
கால்சியம் கார்பனேட் மெதுவாக வினைபுரியும் ஆனால் வெப்பப்படுத்தும்போது வினையின்
வேகம் அதிகரிக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
அறை
வெப்பநிலையில் வைக்கப்படும் உணவு பொருளானது குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்படும்
உணவை விட விரைவாக கெட்டுப்போகிறது. குளிர்சாதன பெட்டிகள் வெப்பநிலையானது அறை
வெப்பநிலை விட குறைவாக இருக்கும். வினையின் வேகம் குறைவாக இருப்பதால் உணவு
கெட்டுப்போகும் வேகமும் குறைவாக இருக்கும்.
வாயுநிலையிலுள்ள வினைபடு
பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கும். ஏனெனில்
அழுத்தத்தை அதிகரிக்கும்போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து
அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.
வினையூக்கி என்பது வினையில்
நேரடியாக ஈடுபடாது, ஆனால் அவ்வினையின் வேகத்தை அதிகரிக்கும்.
பொட்டாசியம் குளோரேட்டை
சூடுபடுத்தும் போது ஆக்சிஜன் மிகக் குறைவான வேகத்தில் வெளியேறுகிறது. ஆனால்
மாங்கனீசு டை ஆக்ஸைடை வினைபடு பொருளுடன் சேர்த்த பிறகு ஆக்சிஜன் வெளியேறும் வேகம்
அதிகரிக்கிறது.
வேதிவினையில் கட்டியான வினைபடு
பொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைபடு பொருள்கள் விரைவாக வினைபுரியும்
எகா கட்டியான கால்சியம் கார்பனேட்டை
விட துளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக விரைவாக
வினைபுரியும், ஏனெனில் தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் புறப்பரப்பளவு அதிகளவு
இருப்பதால் வினை வேகமாக நிகழ்கிறது.