அமைவிடம் மற்றும் பரப்பளவு
இந்தியாவின்
28
மாநிலங்களில்
தமிழ்நாடும் ஒன்று. இது இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு
8°4'
வட
அட்சம் முதல் 13°35' வட
அட்சம் வரையிலும், 76°8' கிழக்கு
தீர்க்கம் முதல் 80°20' கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.
தமிழ்நாட்டின்
கடைக்கோடிப் பகுதிகளாக
• கிழக்கில்
கோடியக்கரையும்
• மேற்கில்
ஆனைமலையும்
• வடக்கில்
பழவேற்காடு ஏரியும்
• தெற்கில்
குமரிமுனையும் அமைந்துள்ளன.
தமிழகத்தின்
பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர்களாகும். இது இந்தியாவின்
பதினோராவது பெரிய மாநிலமாகும். இந்தியப் பரப்பில் சுமார் 4 சதவிகிதத்தினைக்
கொண்டுள்ளது.
கிழக்கே
வங்காள விரிகுடாவும், மேற்கே கேரளாவும், வடக்கே
ஆந்திரப்பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும், தெற்கே
இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன. மன்னார் வளைகுடா
மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும் இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள
இலங்கையையும் பிரிக்கின்றன. குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 940 கிலோ
மீட்டர் நீளமுடன் இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு
உருவான காலகட்டத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன என்பதை முன்பே
அறிந்தோம். அதன்பிறகு நிர்வாக வசதிக்காக மாநிலம் பலமுறை மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை
மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றுடன் 37 மாவட்டங்கள் உள்ளன. பின்வரும் அட்டவணையில்
மாநில நிர்வாக பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்கள் : 37 (32+5)
வருவாய்க்
கோட்டங்கள் : 76
வட்டங்கள் : 226
பிர்காக்கள் : 1,127
வருவாய்
கிராமங்கள் : 16,564
மாநகராட்சிகள்
:
15
நகராட்சிகள்
:
125
ஊராட்சி
ஒன்றியங்கள் : 385
பேரூராட்சிகள்
:
561
கிராம
ஊராட்சிகள் : 12,618
மக்களவைத்
தொகுதிகள் : 39
சட்டமன்றத் தொகுதிகள் : 234
தமிழ்நாட்டின்
முக்கிய இயற்கை அமைப்புகளையும் அதன் சிறப்பு அம்சங்களையும் இப்பாடத்தில் காணலாம்.
தீபகற்ப
பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது. இப்பகுதி
கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற
கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும். தமிழ்நாடானது
நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு
தொடர்ச்சி மலை, பீடபூமிகள், கடற்கரைச்
சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கப்படுகிறது.
செயல்பாடுகள்
• நில
வரைபட உதவியுடன் தமிழகக் கடலோர மாவட்டங்களைக் கண்டறிக.
• ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம்
மற்றும் கேரளா மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் தமிழக மாவட்டங்களைத்
தனித்தனியே பட்டியலிடுக.