தமிழ்நாடு - மேற்கு தொடர்ச்சி மலை | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
மேற்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி
மலை வடக்கே நீலகிரி முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்ட சுவாமிதோப்பில் உள்ள மருதமலை
வரை நீண்டுள்ளது. இம்மலைத்தொடரின் உயரம் 2,000 மீட்டர்
முதல் 3,000 மீட்டர் வரை வேறுபட்டுள்ளது. இது 2,500 சதுர
கிலோ மீட்டர் பரப்பளவை உடையது. இம்மலைத்தொடர் தொடர்ச்சியாக இருந்தாலும் சில
கணவாய்கள் காணப்படுகின்றன.
உங்களுக்குத்
தெரியுமா?
சென்னை, நீலகிரி
மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில்
பிரித்தமைக்கப்பட்டன.
உமது பள்ளி எந்த அட்ச மற்றும் தீர்க்கரேகைக்கு இடையே அமைந்துள்ளது?
பாலக்காட்டு
கணவாய், செங்கோட்டைக் கணவாய், ஆரல்வாய்மொழி
கணவாய் மற்றும் அச்சன்கோவில் கணவாய் ஆகியன இத்தொடரின் முக்கிய கணவாய்களாகும்.
நீலகிரி, ஆனைமலை, பழனிமலை, ஏலக்காய்
மலை,
வருசநாடு, ஆண்டிப்பட்டி
மற்றும் அகத்தியர் மலைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய
மலைகளாகும்.
நீலகிரி
மலை தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையில் 2,000 மீட்டருக்கு
மேல் உயரம் கொண்ட 24 சிகரங்கள் காணப்படுகின்றன. இம்மலையின் உயரமான
சிகரம் தொட்டபெட்டா (2,637 மீட்டர்) ஆகும். முக்குருத்தி 2,554 மீட்டர்
உயரம் கொண்ட மற்றுமொறு சிகரமாகும். ஊட்டி, குன்னூர்
ஆகியவை இம்மலையில் அமைந்துள்ள முக்கிய மலை வாழிடங்களாகும். 2,700 க்கும்
அதிகமான பூக்கும் தாவர வகைகள் மற்றும் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இங்கு
காணப்படுகின்றன.
ஆனைமலை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப்பகுதியில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியாறு பாதுகாக்கப்பட்ட காடுகள், வால்பாறை மலைவாழிடம், காடம்பாறை நீர்மின் நிலையம் போன்றவை இம்மலைப்பகுதியில் அமைந்துள்ளன. ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் இம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன.
பழனி மலை, மேற்கு
தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியாகும். மற்றவை திண்டுக்கல் மாவட்டத்தில்
அமைந்துள்ளன. பழனி மலையின் மிக உயரமான சிகரம் வந்தராவ் (2,533 மீ)
ஆகும். வேம்படிசோலை (2,505 மீ) இதன் இரண்டாவது உயர்ந்த சிகரமாகும்.
மலைவாழிடமான கொடைக்கானல் (2,150 மீ) பழனிமலையின் தென் மத்தியப் பகுதியில்
அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சிகரங்கள் : உயரம் (மீட்டரில்)
தொட்டபெட்டா : 2,637
முக்குருத்தி : 2,554
வேம்படி சோலை : 2,505
பெருமாள் மலை : 2,234
கோட்டை மலை :2,019
பகாசுரா :1,918
ஏலக்காய்
மலை
தமிழ்நாட்டின்
தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இம்மலைகள் ஏலமலைக் குன்றுகள் எனவும்
அழைக்கப்படுகின்றன. இங்கு அதிகமான ஏலக்காய் பயிரிடப்படுவதால் இப்பெயர் பெற்றது.
மிளகு மற்றும் காபி ஆகியன இம்மலைப்பகுதியில் பயிரிடப்படும் முக்கிய பயிர்களாகும்.
இவை வடமேற்கில் ஆனைமலையோடும் வடகிழக்கில் பழனி மலையோடும், தென்கிழக்கில்
ஆண்டிப்பட்டி மற்றும் வருசநாடு குன்றுகளோடும் இணைகின்றன.
மேற்கு
தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி
குன்றுகள் ஆகும். மேகமலை, கழுகுமலை, குரங்கனி
மலை,
சுருளி
மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இம்மலைகளில் காணப்படுகின்றன.
இம்மலையின் தெற்கு சரிவுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ‘மலை
அணில் சரணாலயம்' விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை
மற்றும் அதன் துணை ஆறுகள் இப்பகுதியில் உருவாகின்றன.
இம்மலையின்
பெரும்பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும் இதன் தென்சரிவு கன்னியாகுமரி
மாவட்டத்திலும் அமைந்துள்ளது. சிவஜோதி பர்வத், அகத்தியர்
மலைகள் மற்றும் தெற்கு கைலாயம் என பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகிறது.
மேற்கு
தொடர்ச்சி மலை உயிர்ப்பன்மை செறிந்த ஒன்றாகத் திகழ்கிறது. இப்பகுதி வளமான பசுமை
மாறாக் காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பழமையான கோயில்கள்
ஆகியவற்றுக்கு புகழ்பெற்றதாகும். களக்காடு - முண்டந்துறை ‘புலிகள்
காப்பகம்' இப்பகுதியில் அமைந்துள்ளது.
இம்
மலைத்தொடர் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லை பகுதிகளாகவும்
மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியாகவும் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 1,645 மீ
ஆகும்.
மலைகளின்
உயரம் கடல் மட்டத்திலிருந்து அளக்கப்படுவது ஏன்? ஏன்
நிலப்பகுதியில் இருந்து அளவிடப்படவில்லை ?