தமிழ்நாடு | புவியியல் - சமவெளிகள் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
சமவெளிகள்
தமிழ்நாட்டில்
காணப்படும் சமவெளிகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:
1.
உள்நாட்டு
சமவெளிகள்
2.
கடற்கரை
சமவெளிகள்
பாலாறு, பெண்ணையாறு, காவிரி
மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்நாட்டு சமவெளிகளை உருவாக்கியுள்ளது.
காவிரியாற்றுச் சமவெளி தமிழ்நாட்டிலுள்ள வளமான சமவெளிகளுள் ஒன்றாகும். காவிரி
சமவெளியானது சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்
மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது.
தமிழ்நாட்டின்
கடற்கரைச் சமவெளியானது கோரமண்டல் அல்லது சோழமண்டல சமவெளி (சோழர்கள் நிலம்) எனவும்
அழைக்கப்படுகிறது. இச்சமவெளி சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது.
இச்சமவெளி கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால்
உருவாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இவை 80 கிலோ
மீட்டருக்கும் அதிகமான அகலத்துடன் காணப்படுகிறது.
இது ஒரு
உயரமான கடற்கரை என்றாலும் சில பகுதிகள் கடலில் மூழ்கி உள்ளன. இராமநாதபுரம் மற்றும்
தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ‘தேரி' என்று
அழைக்கப்படுகிறது. கிழக்குக் கடற்கரைச் சமவெளிப் பகுதியில் உள்ள
மன்னார்வளைகுடாவில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன.
வங்காள
விரிகுடாக் கடலையொட்டிய சோழமண்டலக் கடற்கரை பல அழகான மற்றும் சிறப்பு வாய்ந்த
கடற்கரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தங்க மணல் கடற்கரை பகுதியில் பனை
மரங்களும், சவுக்குத் தோப்புகளும் பரவலாகக்
காணப்படுகின்றன. சென்னையின் மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளும் கோவளம் (காஞ்சிபுரம்)
மற்றும் வெள்ளி கடற்கரை (கடலூர்) ஆகியவை புகழ்பெற்ற தமிழக கடற்கரைகளாகும்.
தமிழ்நாட்டின் இயற்கையமைப்பு