தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
பாடச்சுருக்கம்
•
இயற்கை
புவியியல் என்பது பல்வேறு இயற்கை அம்சங்களான நிலத்தோற்றம், வடிகாலமைப்பு, காலநிலை, மண்
மற்றும் இயற்கை தாவரங்களைப் பற்றிய புவியியலின் ஒரு பகுதியாகும்.
•
தமிழ்நாட்டின்
இயற்கை பிரிவுகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை மலைகள் (மேற்கு
மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்), பீடபூமிகள் (பாரமஹால், கோயம்புத்தூர்
மற்றும் மதுரை சமவெளிகள் (உள்நாட்டுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளி).
•
காவிரி, பாலாறு, தென்பெண்ணை
ஆறு மற்றும் தாமிரபரணி ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளாகும்.
•
தமிழ்நாட்டில்
காணப்படும் மண் வகைகள் அதன் பண்புகளின் அடிப்படையில் 5 பிரிவுகளாகப்
பிரிக்கப்படுகிறது. அவை வண்டல், கரிசல், சிவப்பு, சரளை
மற்றும் உவர் மண்ணாகும்.
•
தமிழ்நாட்டின்
பரப்பில் 20.21 சதவிதத்தினை காடுகள் கொண்டுள்ளது. பசுமை
மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், சதுப்புநிலக்
காடுகள், முட்புதர்க் காடுகள் மற்றும் வெப்ப மண்டல மலைக்
காடுகள் ஆகியன முக்கிய காடுகளாகும்.
•
பேரிடர்
அபாய நேர்வு குறைப்பு என்பது முறையான நடவடிக்கைகளின் மூலம் அபாயத்தின் தன்மையைக்
குறைப்பதாகும்.
•
நிலஅதிர்வு, எரிமலை, நிலச்சரிவு, சூறாவளி, வறட்சி
மற்றும் காட்டுத்தீ ஆகியன இயற்கைப் பேரிடர்களாகும்.