தமிழ்நாடு - வன உயிரினங்கள் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
வன உயிரினங்கள்
காடுகளில்
வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளை வனவிலங்குகள் என்கிறோம். பல்வேறு வகையான வன
விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியன தமிழ்நாட்டில் உள்ளன. யானைகள், காட்டு எருமைகள், புலிகள், மான்கள் மற்றும்
குரங்குகளுக்கு இக்காடுகள் ஒரு சிறந்த அடைக்கலமாக உள்ளன.
வன விலங்குகளைப்
பாதுகாக்க பல்வேறு வன விலங்குகள் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள்
மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோளப் பெட்டகங்கள்
1. நீலகிரி
உயிர்க்கோளப் பெட்டகம்
2. மன்னார் வளைகுடா
உயிர்க்கோளப் பெட்டகம்
3. அகத்தியர் மலை
உயிர்க்கோளப் பெட்டகம்
மாறுபட்ட
காலநிலைகள், நில அமைப்புக்கள் மற்றும் பல்வேறு வளங்கள் ஆகியவற்றைக் கொண்ட
மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு தனித்துவம் பெற்ற
மாநிலமாக திகழ்கிறது. இருக்கின்ற வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தினால், இந்திய
மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானதாகத் திகழும். எனவே இவ்விலக்கை அடைய முயற்சி
செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.