புவியியல் | சமூக அறிவியல் - தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
தமிழ்நாடு
– இயற்கைப் பிரிவுகள்
• நமது
மாநிலத்தின் உருவாக்கம் பற்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்ளல்
• தமிழ்நாட்டின் இயற்கைப் பிரிவுகள் பற்றி
கற்றறிதல்
• தமிழ்நாட்டின் காலநிலை, மண் வகைகள் மற்றும்
இயற்கை தாவரங்களின் தன்மைகளைப் புரிந்துகொள்ளல்
• மாணவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில்
சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் கூறுகள் பற்றி அறிந்துகொள்ளல்
• தமிழ்நாட்டில் நிகழும் பேரிடர்கள் மற்றும் அதன்
தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு பெறுதல்
புவியில்
சிறந்த குடிமகனாக விளங்குவதற்கான முதல் படி, தான்
வசிக்கும் பகுதியைப் பற்றி கற்றறிவதேயாகும். நாம் உள்ளூர் சூழலைப் பற்றி கற்பதன்
நோக்கம், நம்முடைய சுற்றுச்சூழலில் வாழ்க்கை முறையைப்
புரிந்து கொள்வதாகும். முதல் 5 பாடங்களில் நம் நாட்டின் பல்வேறு புவியியல்
தன்மைகளைப் பற்றி கற்றறிந்தீர்கள். இப்பாடத்திலும் பின்வரும் பாடத்திலும்
தமிழ்நாட்டின் புவியியலைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ்மொழி பிறப்பியல், மாநில
உருவாக்க வரலாறு, அமைவிடம், பரப்பளவு, இயற்கைப்
பிரிவுகள், ஆறுகள், காலநிலை, மண்
வகைகள் மற்றும் இயற்கை தாவரங்கள் பற்றி இப்பாடத்தில் காண்போம்.
இதன் நேர்த்தியான நில அமைப்பு மற்றும் காலநிலை நம் மாநிலத்தை இந்தியாவில் தனித்துவம் கொண்டதாக உருவாக்கியுள்ளது. இது வெப்ப மண்டல கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், காடுகள், பல்வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டது.
உங்களுக்குத்
தெரியுமா?
1956ஆம்
ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மொழியியல்
அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
• இந்தியாவில்
மொழி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
• தமிழக தலைநகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஏன்?