அலை ஒளியியல் | இயற்பியல் - நெடுவினாக்கள் | 12th Physics : UNIT 7 : Wave Optics

   Posted On :  29.11.2023 11:56 pm

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 7 : அலை ஒளியியல்

நெடுவினாக்கள்

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 7 : அலை ஒளியியல் : நெடுவினாக்கள், பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

III. நெடுவினாக்கள் 


1. ஹைகென்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் எதிரொளிப்பு விதிகளை நிரூபி.

இணை ஒளிக்கற்றைகள் விழுகின்றன எனக் கருதுக. படும் சமதள அலைமுகப்பு AB மற்றும் எதிரொளிப்பு அலைமுகப்பு A'B' இவ்விரண்டு அலைமுகப்புகளும் ஒரே ஊடகத்தின் உள்ளன. இந்த அலைமுகப்புகள் படுகதிர்கள் L, M மற்றும் எதிரொளிப்புக் கதிர்கள் L', M' ஆகியவற்றிற்குச் செங்குத்தாக உள்ளன

படும் அலைமுகப்பிலுள்ள A புள்ளி, எதிரொளிப்புப் பரப்பைத் தொடும் நேரத்தில் B புள்ளி BB' தொலைவுபயணம் செய்து, எதிரொளிப்புப் பரப்பிலுள்ள B' புள்ளியை அடைகிறது.

• B புள்ளி எதிரொளிப்புப் பரப்பிலுள்ள B' புள்ளியை அடையும் அந்த நேர இடைவெளியில்; A புள்ளி A' அடைகிறது. அலைமுகப்பிலுள்ள அனைத்துப் புள்ளிகளுக்கும் இது பொருந்தும்

எனவே A'B' என்ற சமதள எதிரொளிப்பு அலைமுகப்பு கிடைக்கும். ஒளிக்கதிர்கள் L மற்றும் M இரண்டும் எதிரொளிப்புப் பரப்பில் விழும் புள்ளிகளில் N மற்றும் N என்ற இரண்டு செங்குத்துக்கோடுகள் வரையப்படுகின்றன

எதிரொளிப்பும் இதே ஊடகத்தில் நடைபெறுவதால் எதிரொளிப்புக்கு முன்பும் மற்றும் எதிரொளிப்புக்குப் பின்பும் ஒளியின் திசைவேகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. எனவே, ஒளிக்கதிர் A விலிருந்து A' வர எடுத்துக்கொள்ளும் நேரமும் B யிலிருந்து B' வர எடுத்துக்கொள்ளும் நேரமும் சமம். இதன்காரணமாகத் தொலைவுகள் AA' மற்றும் BB' இரண்டும் ஒன்றுக்கொன்று சமம் (AA' = BB')


(i) படுகதிர்கள், எதிரொளிப்புக்கதிர்கள் எதிரொளிப்புப் பரப்பு மற்றும் செங்குத்துக்கோடு அனைத்தும் ஒரே தளத்தில் உள்ளன

(ii) படுகோணம்

I = NAL = 900NAB = BAB' 

எதிரொளிப்புக்கோணம்

r = N'B'M' = 900N' B'A' = A'B'A 

செங்கோண முக்கோணங்கள் ∆ABB' மற்றும் ∆B'A'A, இரண்டிலும் செங்கோணங்கள் BAB' மற்றும் A'B'A சமம். B' மற்றும் A' = 900; AA’; மற்றும் BB' இரண்டு பக்கங்களும் சமம் (AA' = BB') 

மேலும் பக்கம் AB' இரண்டு செங்கோண முக்கோணங்களுக்கும் பொதுவானது. எனவே, இவ்விரண்டு முக்கோணங்களும் ஒத்த முக்கோணங்களாகும் (congruent). ஒத்த முக்கோணங்களுக்குக் கோணங்கள் BAB' மற்றும் A'B'A ஆகியவை ஒன்றுக்கொன்று சமமாகும். எனவே,

i = r 

படுகோணம், எதிரொளிப்புக் கோணத்திற்குச் சமமாகும். எனவே. எதிரொளிப்பு விதிகள் நிரூபிக்கப்பட்டன.


2. ஹைகென்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் ஒளிவிலகல் விதிகளை நிரூபி.


ஒளிபுகும் தன்மை கொண்ட கண்ணாடி போன்ற XY பரப்பின் மீது, படத்தில் காட்டியுள்ளவாறு இணை ஒளிக்கற்றைகள் விழுகின்றன எனக் கருதுக

படும் அலைமுகப்பிலுள்ள A புள்ளி ஒளிவிலகு பரப்பைத் தொடும் அந்த நேரத்தில் B புள்ளி, BB' தொலைவைக் கடந்து ஒளிவிலகு பரப்பின் B' என்ற புள்ளியைத் தொடுகிறது. B புள்ளி ஒளிவிலகு பரப்பின் B' புள்ளியைத்தொடும் நேரத்தில் A புள்ளி மற்றோர் ஊடகத்தில் A' தொலைவை கடக்கிறது. அலைமுகப்பிலுள்ள அனைத்துப் புள்ளிகளுக்கும் இது பொருந்தும்

எனவே A'B' என்ற சமதள ஒளிவிலகு அலைமுகப்பு கிடைக்கும். ஒளிவிலகு பரப்பில் L மற்றும் M கதிர்கள் படும் புள்ளியில் N மற்றும் N' என்ற இரண்டு செங்குத்துக் கோடுகள் கருதப்படுகின்றன. அடர்குறை ஊடகத்தில் (1) இருந்து, அடர்மிகு ஊடகத்திற்கு (2) ஒளிவிகல் ஏற்படுவதால், ஒளிவிலகலுக்கு முன்பு ஒளியின் திசைவேகம் V1 மற்றும் ஒளிவிலகலுக்குப் பின்பு ஒளியின் திசைவேகம் V2 ஆகும். இங்கு V1 ஆனது V2, விட அதிகம் (v1 > V2) ஆனால் ஒளிக்கதிர்கள் B யிலிருந்து B' புள்ளிக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரமும், A விலிருந்து A' புள்ளிக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரமும் சமம்.


படுகதிர்கள், விலகுகதிர்கள், ஒளிவிலகு பரப்பு XY மற்றும் செங்குத்துக் கோடுகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைகின்றன

படுகோணம்

i = NAL = 90° − NAB = BAB' 

விலகுகோணம்

r = N'B'M' = 90° – N'B'A' = A'B'A 

செங்கோண முக்கோணங்கள் ABB' மற்றும் B'A'A இரண்டிலுமிருந்து,


இங்கு c என்பது வெற்றிடத்தில் ஒளியின் வேகமாகும். c / v ஒரு மாறிலியாகும். இம்மாறிலிக்கு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் என்ற பெயர். முதல் ஊடகத்தின் (1) ஒளிவிலகல் எண் c / (v1 − n1) மற்றும் இரண்டாவது ஊடகத்தின் (2) ஒளிவிலகல் எண் c / (v2 –n2) ஆகும்


பெருக்கல் வடிவில் 

n1 sin i = n2 sin r −−−−−−−−−−−−−− (2)

முடிவாக ஒளிவிலகல் விதி நிருபிக்கப்பட்டது


3. ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் பெறப்படும் தொகுபயன் ஒளிச் செறிவிற்கான கோவையைப் பெறுக.


இரண்டு ஒளி அலைகள் கூடுவதால் அல்லது அவ்வொளி அலைகள் ஒன்றின்மீது மற்றொன்று மேற்பொருந்துவதால்; சில புள்ளிகளில் ஒளிச்செறிவு அதிகரிக்கும். வேறுசில புள்ளிகளில் ஒளிச்செறிவு குறையும் நிகழ்வுக்கு ஒளியின் குறுக்கீட்டு விளைவு என்று பெயர்

• S1 மற்றும் S2 என்ற இரண்டு ஒளி மூலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளைக் கருதுக. அவை P என்ற புள்ளியில் சந்திக்கின்றன

• t நேரத்தில் S1 ஒளிமூலத்தில் இருந்து P புள்ளியை அடையும் அலை,

y1 = a1 sin(ωt) ………………….. (1)

• t நேரத்தில் S2 ஒளிமூலத்தில் இருந்து P புள்ளியை அடையும் அலை

y2 = a2 sin(ωt + ϕ) ………………….. (2)

இவ்விரண்டு அலைகளும், வெவ்வேறு வீச்சுகளையும் (a1 மற்றும் a2) ஒரே கோண அதிர்வெண்ணையும் ω, மற்றும் φ என்ற கட்டவேறுபாட்டையும் பெற்றுள்ளன. இவ்விரண்டு அலைகளினால் ஏற்பட்ட தொகுபயன் இடப்பெயர்ச்சி

y = y1 + y2 = a1 sin ωt + a1 sin2 (ω t + ɸ) --------------- (3)

y = A sin (ωt + θ) --------------- (4)


ɸ = 0, ± 2π, ± 4π என்ற நிபந்தனைகளில் தொகுபயன் வீச்சு பெருமமாகும்.


ɸ = ±π, ± 3π, ± 5π என்ற நிபந்தனைகளில் தொகுபயன் வீச்சு சிறுமமாகும்.


ஒளிச்செறிவு, வீச்சின் இருமடிக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

I ∝ A2 ---------------(9)

இப்பொழுது, சமன்பாடு 5 பின்வருமாறு மாற்றமடையும்.

I ∝ I1 + I2 + 2√[I1I2] cos ɸ ---------------(10) 

கட்ட வேறுபாடு ɸ., = 0, ± 2π, ± 4π என்பது ஒளியின் பெருமச் செறிவிற்கான நிபந்தனையாகும். இதற்கு ஆக்கக்குறுக்கீட்டு விளைவு என்று பெயர்

தொகுபயன் பெரும ஒளிச்செறிவு

Iபெருமம் (a1 + a2)2 ∝ I1 + I2 + 2√[I1I2]  …………………..(11)


கட்ட வேறுபாடு ɸ = 1π, I 3π, I 5π, …………… என்பது ஒளியின் சிறுமச் செறிவிற்கான நிபந்தனையாகும் இதற்கு அழிவுக்குறிக்கீட்டு விளைவு என்று பெயர்

தொகுபயன் சிறும ஒளிச்செறிவு

Iசிறுமம் (a1 − a2)2 ∝ I1 + I2 − 2√[I1I2]  …………………..(12)

சிறப்பு நேர்வாக a1 − a2 = a,


A = 2a cos(ɸ / 2) …………………..(13)

I ∝ 4a2 cos2(ɸ /2)              [ I ∝ A2 ] …………………..(14)

I = 4Io cos2(ɸ / 2)               [ I ∝ a2 ] …………………..(15)

• ɸ = 0, ± 2π, ± 4π …….. எனில் Iபெருமம் = 4Io     …………………..(16)

• ɸ = ±π ± 3π, ± 5π, + …….. எனில் Iசிறுமம் = …………………..(17) 


4. யங் இரட்டைப் பிளவு ஆய்வு அமைப்பை விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான கோவையைப் பெறுக

ஒளிபுகாத் திரையில் S1 மற்றும் S2 என்ற இரண்டு துளைகளை ஏற்படுத்தி அவை S என்ற ஒளி மூலத்திலிருந்து சமதொலைவில் இருக்குமாறு அமைக்க வேண்டும். ஒவ்வொரு துளையின் அகலமும் 0.03 mm இவ்விரண்டு துளைகளும் 0.3 mm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டன. ஒளிமூலம் S இலிருந்து S1 மற்றும் S2 வை அடையும் அலைகள் ஒத்தகட்டத்தில் இருக்கும். எனவே, குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தும் ஓரியல் மூலங்களாக S1 மற்றும் S2 பிளவுகள் செயல்பட்டுக் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தும்

ஆய்வு அமைப்பு:


பிளவுகள் S1 மற்றும் S2 விலிருந்து வரும் அலைமுகப்புகள் இரட்டைப்பிளவின் வலப்பக்கமாக ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துகின்றன. பிளவுகளிலிருந்து சுமார் 1 m தொலைவில் XY என்ற திரையினை வைக்கும்போது, அத்திரையில் சம அகலமுடைய பொலிவு மற்றும் கரும் பட்டைகள் அடுத்தடுத்துத் தோன்றுகின்றன. இதற்கு குறுக்கீட்டுப் பட்டைகள் அல்லது குறுக்கீட்டு வரிகள் என்று பெயர்

• S1, S2 விலிருந்து திரையின்மையப்புள்ளி O வை அடையும் ஒளி அலைகள், சமதொலைவைக் கடந்து வந்துள்ளதால் அவை படத்தில் காட்டியுள்ளவாறு ஒத்த கட்டத்தில் இருக்கும். இவ்விரண்டு அலைகளும் ஆக்கக்குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தி, மையப்புள்ளி O வில் பொலிவுப்பட்டையை உருவாக்கும். இதற்கு மையப் பொலிவுப்பட்டை என்று பெயர்

ஏதேனும் ஒரு பிளவை மூடிவிட்டால் குறுக்கீட்டுப் பட்டைகள் மறைந்து திரை சீராக ஒளியூட்டப்பட்டிருக்கும். இதிலிருந்து, திரையில் தோன்றும் பொலிவு மற்றும் கரும் பட்டைகள் ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் ஏற்பட்டவை என்பதை அறியலாம்

பாதை வேறுபாட்டிற்கான சமன்பாடு

ஓரியல் மூலங்களாகச் செயல்படும் S1 மற்றும் S2 பிளவுகளுக்கிடையே உள்ள தொலைவு d என்க. இவை λ அலைநீளமுடைய ஒளிஅலைகளை உருவாக்கும்.

இரட்டைப் பிளவுகளுக்கு இணையாக D தொலைவில் திரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. S1 மற்றும் S2 க்கு நடுவே உள்ள புள்ளியை C என்க.மேலும் திரையின் மையப்புள்ளி O. 

• S1 மற்றும் S2 விலிருந்து சமதொலைவில் உள்ளது. திரையில் மையப்புள்ளி O விலிருந்து Y தொலைவில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியை P என்க

• S1, S2 விலிருந்து P புள்ளியை அடையும் ஒளி அலைகள், அவற்றிற்கு இடையே உள்ள பாதை வேறுபாட்டைப் பொருத்து, ஒத்த கட்டத்திலோ அல்லது வேறுபட்ட கட்டத்திலோ இருக்கும். .


• S1 மற்றும் S2 விலிருந்து P புள்ளியை அடையும் ஒளி அலைகளுக்கு இடையேயுள்ள பாதை வேறுபாட்டை δ என்க. δ = S2P − SIP

• S1 இல் இருந்து, S2P கோட்டிலுள்ள M புள்ளிக்கு வரையப்பட்ட செங்குத்துக் கோட்டிலிருந்து பாதை வேறுபாட்டைத் துல்லியமாகக் கணக்கிடலாம்.

δ = S2P – MP = S2

• C புள்ளியிலிருந்து P புள்ளி அமைந்துள்ள கோண நிலையை θ என்க. OCP = θ வடிவியல் விதிகளின் படி 

கோணங்கள் OCP மற்றும் S2S1M ஆகியவை சமம்.

OCP = S2S1M = θ

செங்கோண முக்கோணம் ∆ S1S2M இல், பாதைவேறுபாடு S2M = d sin θ

δ = d sin θ

கோணம் θ சிறியது, எனவே θ ≈ tan θ ≈ θ 

செங்கோண முக்கோணம் ∆OCP

tan θ = y / D

பாதை வேறுபாடு δ = dy / D

பாதை வேறுபாட்டின் நிபந்தனையைப் பொருத்து புள்ளி P யில் பொலிவுப் பட்டையோ அல்லது கரும் பட்டையோ தோன்றும்


5. யங் இரட்டைப் பிளவு ஆய்வில் பெறப்படும் பட்டை அகலத்திற்கான கோவையைப் பெறுக.

இரண்டு அடுத்தடுத்த பொலிவுப்பட்டை (அல்லது) கரும்பட்டைகளுக்கு இடையே உள்ள தொலைவு பட்டை அகலம் எனப்படும்

பொலிவுப் பட்டை அல்லது பெருமத்திற்கான நிபந்தனை

ஆக்ககுறுக்கீட்டு விளைவு அல்லது P புள்ளியில் பொலிவுப்பட்டை தோன்ற நிபந்தனை பின்வருமாறு

பாதை வேறுபாடு δ = n λ 

இங்கு n = 0, 1, 2, …          dy / D = n λ


• P புள்ளியில் பொலிவுப்பட்டை தோன்ற இதுவே நிபந்தனையாகும். இங்கு Yn என்பது O விலிருந்து n வது பொலிவுப்பட்டையின் தொலைவைக் குறிக்கிறது

கரும்பட்டை அல்லது சிறுமத்திற்கான நிபந்தனை

அழிவுக்குறுக்கீட்டு விளைவு அல்லது P புள்ளியில் கருமபட்டை தோன்றுவதற்கான நிபந்தனை பின்வருமாறு


• Yn புள்ளியில் கரும்பட்டைத் தோன்ற இதுவே நிபந்தனையாகும். இங்கு Yn என்பது, O விலிருந்து n வது கரும்பட்டையின் தொலைவைக் குறிக்கிறது

பட்டை அகலத்திற்கான கோவை

இரண்டு அடுத்தடுத்த பொலிவுப்பட்டை அல்லது கரும்பட்டைகளுக்கு இடையே உள்ள தொலைவு பட்டை அகலம் என அழைக்கப்படுகிறது.


தெளிவான மற்றும் அகலமான குறுக்கீட்டுப் பட்டைகளைப் பெறுவதற்கான நிபந்தனைகள் 

ஒளிமூலத்திற்கும் திரைக்கும் இடையேயுள்ள தொலைவு மிக அதிகமாக இருக்க வேண்டும்.

பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளம் மிக அதிகமாக இருக்க வேண்டும்

இரண்டு ஓரியல் மூலங்களுக்கு (இங்கே S1 மற்றும் S2) க்கு இடையேயுள்ள தொலைவு மிகக் குறைவாக இருக்க வேண்டும்


6. மெல்லேடுகளில் எதிரொளிப்பு அடைந்த மற்றும் ஒளிவிலகல் அடைந்த கதிர்களினால் ஏற்படும் ஆக்கக் குறுகிகீட்டு விளைவிற்கான சமன்பாடுகளைப் பெறுக.


மெல்லேடுகளில் ஏற்படும் குறுக்கீட்டு விளைவு 

ஒளிஅலை மெல்லேட்டின் மேற்பரப்பில் இரண்டாகப் பிரிந்து ஒன்று ஒளி எதிரொளிப்பும் மற்றொன்று ஒளிவிலகலும் அடைகிறது

மெல்லேட்டினால் எதிரொளிப்பு மற்றும் ஊடுருவல் அடைந்த ஒளி அலைகள் தனித்தனியே குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன

1) மெல்லேட்டின் வழியே ஊடுருவிச்சென்ற அலையினால் ஏற்படும் குறுக்கீட்டு விளைவு

ஒளி அலைகள் இரண்டாகப் பிரிகை அடையும் B புள்ளிவரை இரண்டு ஒளி அலைகளும் ஒன்றாகவே செல்லும். எனவே, இரண்டு அலைகளும் ஒத்தகட்டத்தில் இருக்கும். D புள்ளி வழியாக ஊடுருவிச் செல்லும் ஒளி அலை மெல்லேட்டின் உள்ளே கடந்து சென்ற கூடுதல் பாதை BC + CD ஆகும். ஒளி அலை மெல்லேட்டின் உள்ளே செங்குத்துப் படுகதிர் நிலையில் மோதுகிறது எனக் கருதினால் (i = 0), B மற்றும் D புள்ளிகள் இரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக அமைந்துள்ளது எனலாம். எனவே, ஒளி அலை கடந்து சென்ற கூடுதல் பாதை தோராயமாக BC + CD = 2d. 

• μ ஒளிவிலகல் எண் கொண்ட ஊடகத்தின் உள்ளே இக்கூடுதல் பாதை உள்ளதால், ஒளியியல் பாதைவேறுபாடு δ = 2μd. 

ஊடுருவிச்சென்ற அலைகளினால் ஏற்படும் ஆக்கக்குறுக்கீட்டு விளைவிற்கான நிபந்தனை

2μd = nλ

இதேபோன்று ஊடுருவிச் சென்ற அலைகளினால் ஏற்படும் அழிவுக்குறுக்கீட்டு விளைவிற்கான நிபந்தனை.

2μd = (2n − 1) λ/2 

2) எதிரொளிப்பு அடைந்த அலைகளினால் ஏற்படும் குறுக்கீட்டு விளைவு

அடர்குறை ஊடகத்தின் வழியாகச் சென்று, அடர்மிகு ஊடகப்பரப்பினால் எதிரொளிப்பு அடைந்த ஒளிஅலைகள் π என்ற கட்டவேறுபாட்டை அடையும். எனவே கூடுதல் பாதைவேறுபாடு λ/2 வைக் கருத வேண்டும்

• C புள்ளியிலிருந்து வெளியேறும் அலை மெல்லேட்டின் உள்ளே கூடுதலாகக் கடந்து வந்த பாதை AB + BC செங்குத்துப் படுகோண நிலையில் இக்கூடுதல் பாதையின் தொலைவு தோராயமாக AB + BC = 2d. ஒளியின் பாதை வேறுபாடு δ = 2μd ஆகும்

எதிரொளிப்பு அலைகளினால் ஏற்படும் ஆக்கக் குறுக்கீட்டு விளைவிற்கான நிபந்தனை,

2μd + λ/2 = nλ (or) 2μd = (2n−1) λ/2

அடர்குறை ஊடகத்தில் சென்ற ஒளி அலை, A புள்ளியில் அடர்மிகு மெல்லேட்டிப் பரப்பினால் எதிரொளிப்பு அடைந்தால் p கட்டவேறுபாட்டை அடைகிறது. எனவே இக்கூடுதல் பாதை வேறுபாடு λ/2 இங்கு ஏற்படுகின்றது

எதிரொளிப்பு அலைகளினால் ஏற்படும் அழிவுக் குறுக்கீட்டு விளைவிற்கான நிபந்தனை

2μd + λ/2 = (2n+1) λ/2 (or) 2μd = n λ


7. ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்பு விளைவினை விவரித்து, n வது சிறுமத்திற்கான நிபந்தனையைப் பெறுக.

• AB அகலம் கொண்ட ஒற்றைப் பிளவு ஒன்றின் மீது செங்குத்தாக விழும் இணை ஒளிக்கற்றை விளிம்பு விளைவடைந்து தொலைவில் வைக்கப்பட்டுள்ள திரையில் விழுகிறது பிளவின் மையத்தை O என்க. பிளவின் தளத்திற்குச் செங்குத்தாக C புள்ளி வழியே செல்லும் நேர்கோடு திரையில் O என்ற புள்ளியை அடைகிறது.


பிளவின் வெவ்வேறு புள்ளிகளிலிருந்து வரும் இணை ஒளி அலைகள் திரையில் P புள்ளி மற்றும் இதர புள்ளிகளில் ஒன்றை ஒன்று குறுக்கிட்டுத் தொகுபயன் ஒளிச்செறிவைக் கொடுக்கின்றன

• P புள்ளியில் முதல் சிறுமம் ஏற்படுவதற்கான நிபந்தனை 

பிளவு AB AC மற்றும் CB என்ற இரண்டு அரைப்பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். தற்போது AC யின் அகலம் (a/2) ஆகும். பிளவில் (a/2) அகலமுடைய வெவ்வேறு புள்ளிகளுக்கு ஒத்தபுள்ளிகள் (Corresponding points) என்று பெயர்

வெவ்வேறு ஒத்தபுள்ளிகளிலிருந்து வரும் ஒளி அலைகள் P புள்ளியில் ஒன்றுடன் ஒன்று மேற்பொருத்தி அழிவுக் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தி முதல் சிறுமத்தை ஏற்படுத்துகிறது. ஒத்த புள்ளியிலிருந்து வரும் ஒளி அலைகளின் பாதை வேறுபாடு δ = a/2 sin θ


• P புள்ளியின் முதல் சிறுமம் தோன்றுவதற்கான நிபந்தனை a/2 sin θ = λ/2

a sin θ = λ (முதல் சிறுமம்

P புள்ளியில் n வது சிறுமம் ஏற்பட நிபந்தனை

பிளவை, 2n எண்ணிக்கையுடைய (இரண்டை இலக்க எண்ணிக்கை) சமபகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஓர் ஒத்த புள்ளியிலிருந்து வரும் ஒளி அலையை மற்றோர் ஒத்த புள்ளியிலிருந்து வரும் ஒளி அலை அழிக்கும் நிலையில் n வது சிறுமம் ஏற்பட நிபந்தனை


a sin θ = n λ (nவது சிறுமம் )


8. கீற்றணி ஒன்றில் நடைபெறும் விளிம்பு விளைவை விளக்கி, mவது பெறுமத்திற்கான நிபந்தனையைப் பெறுக.


சமதள விளிம்பு விளைவுக் கீற்றணி AB யை கருதுக.

• λ அலைநீளமுடைய ஒற்றை நிறச் சமதள அலைமுகப்பு கீற்றணி மீது செங்குத்தாக விழுகிறது. அவ்வொளி விளிம்பு விளைவு அடைகிறது

குவிலென்ஸை பயன்படுத்தி திரை மீது குவித்தால் விளிம்பு விளைவு பட்டை அமைப்பு கிடைக்கும்

ஒரு ஜோடி ஒத்த புள்ளியிலிருந்து சென்ற விளிம்பு விளைவடைந்த அலைகளுக்கிடையான பாதை வேறுபாடு

δ = (a + b) sin θ ...................... (1) 

• P புள்ளி பொலிவுடன் இருக்க

 δ = m λ ...................... (2)                 m = 0, 1, 2, 3 

(1) மற்றும் (2) ஒப்பிட

(a + b) sin θ = m λ ...................... (3) 

• m − விளிம்பு விளைவு வரிசை.

கழி வரிசைப் பெருமத்தின் நிபந்தனை

(a + b) sinθ = 0 எனில், θ = 0. sinθ = 0 மற்றும் m = 0 இது சுழி வரிசைப் பெருமம் அல்லது மையப் பெருமம் எனப்படும்.

முதல் வரிசைப் பெருமத்திற்கான நிபந்தனை: m=1 

(a + b) sin θ1 = λ எனில், விளிம்பு விளைவடைந்த ஒளிபடும் ஒளியுடன் θ1 கோணத்தை ஏற்படுத்தும்

இரண்டாம் வரிசைப் பெருமத்திற்கான நிபந்தனை: m=2 

(a + b) sinθ2 = 2λ எனில், விளிம்பு விளைவடைந்த ஒளி θ2 கோணத்தை ஏற்படுத்தும்

உயர் வரிசைப் பெருமம் கிடைக்க நிபந்தனை 

மையப் பெருமத்தின் இரண்டு பக்கங்களிலும் வெவ்வேறு கோண நிலைகளில் உயர்வரிசைப் பெருமங்கள் கிடைக்கும்.

 N = 1 / (a+b)    ...................... (4)

கீற்றணியில் N மதிப்பு எழுதப்பட்டிருக்கும்

• 1/N sin θ = mλ அல்லது

sin θ = Nm λ ...................... 5) 


9. விளம்புவிளைவுக் கீற்றணியைப் பயன்படுத்தி, ஒற்றை நிற ஒளியின் அலை நீளத்தைக் காணும் சோதனையை விவரி.

விளிம்பு விளைவுக் கீற்றணி மற்றும் நிறமாலைமானியைக் கொண்டு நிறமாலைவரியின் அலைநீளத்தைத் துல்லியமாகக் கண்டறியலாம்

நிறமாலைமானியின் தொடக்க சீரமைப்புகளை சரி செய்ய வேண்டும். அலைநீளம் காண வேண்டிய ஒற்றை நிற ஒளியினால் இணையாக்கியின் பிளவினை ஒளியூட்ட வேண்டும். தொலைநோக்கியினை இணையாக்கிக்கு நேராக அமைத்துப் பிளவின் நேரடி பிம்பத்தினைக் காண வேண்டும். இணையாக்கியிலிருந்து படும் ஒளி அலைக்குச் செங்குத்தாக உள்ளவாறு விளிம்பு விளைவுக் கீற்றணியை முப்பட்டக மேடை மீது அமைக்கவேண்டும்.

முதல் வரிசை விளிம்பு விளைவு பிம்பம், தொலைநோக்கியில் உள்ள கண்ணருகு வில்லையின் செங்குத்துக் குறுக்குக்கம்பியுடன் ஒன்றிணையும் வகையில் தொலை நோக்கியினை ஒரு பக்கமாகச் சுழற்ற வேண்டும். தொலைநோக்கி அமைந்துள்ள நிலைக்கான அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.


இதே போன்று மற்றொரு பக்கமாக தொலைநோக்கியைச் சுற்றி முதல் வரிசை விளிம்பு விளைவு பிம்பம் செங்குத்துக் குறுக்குக்கம்பியுடன் ஒன்றினையும் வகையில் அமைத்து அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். இரண்டு நிலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு θ வைக் கொடுக்கும். இதன் மதிப்பில் பாதி, முதல் வரிசை பெருமத்திற்கான விளிம்பு விளைவுக் கோணத்தைக் கொடுக்கும் (θ)

λ = sin θ / Nm

இங்கு N என்பது ஒரு மீட்டர் நீளத்தில் வரையப்பட்ட கோடுகளின் எண்ணிக்கையாகும். மேலும் m என்பது விளிம்பு விளைவு பிம்பத்தின் வரிசையாகும்


10. விளிம்பு விளைவுக் கீற்றணியைப் பயன்படுத்திக் கூட்டு ஒளியின் (வெவ்வேறு வண்ணங்களின்) அலைநீளங்களைக் காணும் சோதனையை விவரி

i) வெள்ளை ஒளியைப் பயன்படுத்தும் போது, மையப் பொலிவின் இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான வண்ண விளிம்பு விளைவுப் பட்டைகள் தோன்றும்

ii) மையப் பெருமம் வெண்மை நிறத்திலும், அனைத்து வண்ணங்களும் எவ்வித பாதை வேறுபாடும் இன்றி, ஒன்றை ஒன்று வலுவூட்டும் வகையில் ஒன்றிணையும்

iii) θ அதிகரிக்கும் போது, பாதை வேறுபாடு (a + b) sin θ ஊதா முதல் சிவப்பு வரை உள்ள அனைத்து வண்ணங்களின் பெரும் விளிம்பு விளைவு நிபந்தனைகளின் வழியே கடந்து செல்லும்

iv) மையப் பொலிவின் இரண்டுப் பக்கங்களிலும் ஊதா முதல் சிவப்பு வரையுள்ள நிறமாலை. அமைப்பை உருவாக்கும். வெவ்வேறு வரிசைகளைக் கொண்ட விளிம்பு விளைவுக் கோணங்களைக் கண்டறிந்து, வண்ணங்களின் அலைநீளங்களைப் பின்வரும் சமன்பாட்டினைப் பயன்படுத்திக் கணக்கிடலாம்.

λ = sinθ / Nm


இங்கு N என்பது கீற்றணியில் ஒரு மீட்டர் நீளத்தில் வரையப்பட்ட கோடுகளின் எண்ணிக்கையையும், m என்பது விளிம்பு விளைவு பிம்பத்தின் வரிசையையும் குறிக்கும்.

11. ஒளியியல் கருவி ஒன்றின் பிரிதிறனுக்கான கோவையைப் பெறுக.

நுண்ணோக்கி மற்றும் தொலைநோக்கி போன்ற ஒளியியல் கருவிகளில் தோன்றும் பிம்பங்களில் ஏற்படும் விளிம்பு விளைவு விரும்பத்தகாத ஒன்றாகும். ஒற்றைப் பிளவில் மையப்பொலிவு ஏற்படுத்தும் அரைக்கோணம் θ (அல்லது முதல் சிறுமத்தின் நிலை) பின்வரும் சமன்பாட்டினால் வழங்கப்படுகிறது.

 a sin θ = λ

ஒற்றைப்பிளவு போன்றே, வட்டவடிவத்துளை ஒன்று (லென்ஸ் அல்லது கருவிழி போன்றவை) புள்ளிப்பொருளின் பிம்பத்தை ஏற்படுத்தும்போது, அப்பிம்பம் புள்ளிப்பொருள் போன்று மையத்தை விட்டு விலகிச்செல்லும் போது ஒரு மைய வளையங்களுடன் மங்கலாகத் தெரியும். இவற்றுக்கு அயிரிஸ் தட்டுகள் (Airy's discs) என்று பெயர். மையப் பெரும வட்டத்தின் அரைக் கோணப்பரவல் பின்வரும் சமன்பாட்டினால் வழங்கப்படுகிறது.

a sin θ = 1.22 λ

இங்கு 1.22 என்ற எண் மதிப்பு வட்டத்துளை ஏற்படுத்திய மையப் பெருமத்தினால் ஏற்படுகிறது.


சிறிய கோணங்களுக்கு, sin θ ≈ θ

 a θ = 1.22 λ

சமன்பாட்டினை மேலும் மாற்றியமைக்கும் போது


.• அருகருகே அமைந்துள்ள புள்ளி ஒளி மூலங்களினால் ஏற்படும் பிம்பங்களின் விளிம்பு விளைவு அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தி, மங்கலான பிம்பத்தைத் திரையில் தோற்றுவிக்கும். இரண்டு ஒளிமூலங்களின் பிம்பங்களைச் சிறப்பாகப் பெறுவதற்கு, இரண்டு புள்ளி ஒளிமூலங்களும் நன்கு பிரித்தறியப் பட்டிருக்க வேண்டும். இராலேயின் (Rayleigh's) நிபந்தனையின்படி இரண்டு புள்ளி ஒளி மூலங்கள் நன்கு பிரித்தறியப்பட வேண்டுமெனில், அவ்விரண்டு ஒளி மூலங்களின் விளிம்பு விளைவு பின்வருமாறு அமைய வேண்டும்.

முதல் பிம்பத்தின் மையப் பெருமம், இரண்டாவது பிம்பத்தின் முதல் சிறுமத்துடன் ஒன்றிணைய வேண்டும்

இதே போன்று, இரண்டாவது பிம்பத்தின் மையப் பெருமம், முதல் பிம்பத்தின் முதல் சிறுமத்துடன் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு ஏற்படும் பிம்பங்கள், பொருளின் பிரித்தறியப்பட்ட பிம்பங்கள் என அழைக்கப்படும். இராலேயின் நிபந்தனையைப்பிரித்தறிதலின் எல்லை ' என்றும் அழைக்கலாம்.

இராலேயின் நிபந்தனையின்படி, இரண்டு புள்ளி ஒளி மூலங்கள் பிரித்தறியப்பட வேண்டுமெனில், அவற்றின் பிம்பங்களுக்கிடைப்பட்ட தொலைவு குறைந்தப்பட்சம் சம தொலைவு இருக்க வேண்டும். கோணப் பிரித்தறிதலின் அலகு ரேடியன் (rad). மேலும், இது பின்வரும் சமன்பாட்டால் வழங்கப்படுகிறது

θ = 1.22λ / a

பிம்பங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் மிகச்சிறிய அல்லது அருகருகே உள்ள பொருள்களைப் பிரித்துப் பார்க்கும் அல்லது வேறுபடுத்திப் பார்க்கும் திறமைக்கு ஒளியியல் கருவியின் பிரிதிறன் எனப்படும்


12. எளிய நுண்ணோக்கி ஒன்றினை விவரித்து, அண்மைப்புள்ளி குவியப்படுத்தல் மற்றும் இயல்புநிலைக் குவியப்படுத்துதலில் ஏற்படும் உருப்பெருக்கங்களுக்கான சமன்பாடுகளைப் பெறுக.

ஒரு எளிய நுண்ணோக்கி என்பது, குறைந்த குவியத் தூரம் கொண்ட ஒரு உருப்பெருக்கும் (குவிக்கும்) லென்ஸ் ஆகும். பொருளின் நேரான, உருப்பெருக்கப்பட்ட மாய பிம்பத்தைப் பெறுவதே இதன் அடிப்படை நோக்கமாகும்

அண்மைப்புள்ளி குவியப்படுத்தலுக்கான உருப்பெருக்கம்

அண்மைப்புள்ளி குவியப்படுத்தல் லென்சின் குவியத் தூரத்திற்கு f குறைவான தொலைவில் பொருள் உள்ளது. அதன் தொலைவு u ஆகும். பிம்பம், மீச்சிறுதொலைவில் D அதாவது, அண்மைப் புள்ளியில் தோன்றுகிறது.

உருப்பெருக்கத்திற்கான சமன்பாடு,

m = v/u ----------------------(1)

லென்ஸ் சமன்பாட்டினைப் பயன்படுத்தி

உருப்பெருக்கத்தைப் பின்வருமாறு எழுதலாம்.


குறியீட்டு மரபினைப் பயன்படுத்தி


இயல்புநிலை குவியப்படுத்தலுக்கான உருப்பெருக்கம்:


பிம்பம் ஈரில்லாத் தொலைவில் உள்ள போது ஏற்படும் உருப்பெருக்கத்தைத் தற்போது காணலாம். பிம்பத்திற்கும், பொருளுக்கும் உள்ள விகிதம் உருப்பெருக்கத்தைக் கொடுக்கும்.

ஈரில்லாத் தொலைவில் மற்றும் ஈரில்லா அளவில் ஏற்படும் பிம்பத்திற்கான நடைமுறைத் தொடர்பினை பெற இயலாது. எனவே, நாம் கோண உருப்பெருக்கத்தை இங்குப் பயன்படுத்தலாம்

லென்சின் உதவியால் பார்க்கப்படும் பிம்பம் எற்படுத்தியக் கோணத்திற்கும் θi லென்சின் உதவியின்றி வெறும் கண்களினால் பார்க்கப்படும் பொருள் ஏற்படுத்தியக் கோணத்திற்கும் θ0 உள்ள விகிதத்திற்கு, கோண உருப்பெருக்கம் என்று பெயர்.




13. கூட்டு நுண்ணோக்கி ஒன்றினை விவரித்து, அதன் உருப்பெருக்கத்திற்கான கோவையைப் பெறுக.

பொருளுக்கு அருகே உள்ள லென்சுக்குப் பொருளருகு லென்ஸ் என்று பெயர்

இந்த லென்ஸ் பொருளின் மெய்யான. தலைகீழாக்கப்பட்ட மற்றும் உருப்பெருக்கப்பட்ட பிம்பத்தைத் தோற்றுவிக்கும். இப்பிம்பம், இரண்டாவது லென்சாக கண்ணருகு லென்சுக்கு பொருளாகச் செயல்படுகிறது

கண்ணருகு லென்ஸ் ஓர் எளிய நுண்ணோக்கி போன்று செயல்பட்டு இறுதியாகப் பெரிதாக்கப்பட்ட மாயபிம்பத்தைத் தோற்றுவிக்கிறது, பொருளருகு லென்சினால் தோற்றுவிக்கப்பட்ட தலைகீழான முதல் பிம்பம், கண்ணருகு லென்சுக்கு நெருக்கமாக, ஆனால் அதன் குவியப்பரப்பிற்குள் இருக்கும்படி சரிசெய்யும் போது, இறுதி பிம்பம் கிட்டத்தட்ட ஈரில்லாத் தொலைவில் அல்லது அண்மைப் புள்ளியில் தோன்றும், இறுதிபிம்பம் உண்மையான பொருளைப் பொருத்துத் தலைகீழாகக் கிடைக்கும்.


இங்கு, L என்பது கண்ணருகு லென்சின் முதல் குவியப்புள்ளிக்கும், பொருளருகு லென்சின் இரண்டாம் குவியப்புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவாகும். இதற்குக் கூட்டு நுண்ணோக்கியின் குழலின் நீளம் (L) என்று பெயர். மேலும் f0 மற்றும் fe இரண்டும் (L) விடக் குறைவாகத்தான் இருக்கும்.

கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கம்

இறுதி பிம்பம், அண்மைப்புள்ளியில் அமைந்தால், கண்ணருகு லென்சின் உருப்பெருக்கம் me பின்வருமாறு


அண்மைப்புள்ளி குவியப்படுத்தலின் மொத்த உருப்பெருக்கம் (m) பின்வருமாறு.


கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கம்

இறுதிபிம்பம் ஈரில்லாத் தொலைவில் அமைந்தால் (இயல்புநிலை குவியப்படுத்துதல்), கண்ணருகு லென்சின் உருப்பருக்கம் me பின்வருமாறு


இயல்புநிலை குவியப்படுத்துதலில் ஏற்படும் மொத்த உருப்பெருக்கம் m பின்வருமாறு கிடைக்கும்,



14. நுண்ணோக்கி ஒன்றின் பிரிதிறனுக்கான கோவையைப் பெறுக.

நுண்ணோக்கியின் பிரிதிறன் 

நுண்ணோக்கியின் திறன் உருப்பெருக்கத்தை மட்டும் சார்ந்ததல்ல. மிகக் குறைந்த தொலைவில் (dmin) அமைந்துள்ள இரண்டு புள்ளிகளை பிரித்துக் காட்டுவதையும் சார்ந்தது. நுண்ணோக்கியின் பிரிதிறன் சிறப்பாக அமைய, புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு (dmin) குறைவாக இருக்க வேண்டும்.



இச்சமன்பாட்டில் f இருந்த இடத்தில், பிம்பத்தின் தொலைவு v காணப்படுகிறது. பிரித்தறிய வேண்டிய இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள சிறுமத்தொலைவு (dmin) எனில், உருப்பெருக்கம் m பின்வருமாறு எழுதலாம்.


சிறுமத் தொலைவு (dmin) த்தின் மதிப்பை மேலும் குறைப்பதற்கு, நுண்ணோக்கியின் பொருளருகு லென்ஸை அதிக ஒளிவிலகல் எண் n கொண்ட எண்ணெய் நிரப்பப்பட்ட கொள்கலனில் மூழ்கவைத்து, ஒளியின் பாதையை அதிகரிக்க வேண்டும்.


இது போன்ற பொருளருகு லென்ஸகளுக்கு எண்ணெய்யில் மூழ்கவைக்கப்பட்ட பொருளருகு லென்ஸ் என்று பெயர். m sin β பதத்திற்கு எண்ணியல் துளை என்று பெயர்,



15. வானியல் தொலைநோக்கி ஒன்றினைப் பற்றி விளக்குக

விண்மீன்கள், கோள்கள், நிலவு போன்ற தொலைவிலுள்ள வான்பொருள்களை உருப் பெருக்கம் செய்து காண்பதற்குப் பயன்படும் தொலைநோக்கியே வானியல் தொலை நோக்கி. இதில் தோன்றும் பிம்பம் தலைகீழானதாகும். கண்ணருகு லென்சைவிட அதிக குவியத்தூரமும் பெரிய துளையும் கொண்ட பொருளருகு லென்ஸ் இதில் உள்ளது

மிகத் தொலைவிலுள்ள பொருளிலிருந்து வரும் ஒளி, பொருளருகு லென்சின் வழியே நுழைந்து வானியல் தொலைநோக்கிக் குழலின் இரண்டாம் குவியப்புள்ளியில் ஒரு மெய் பிம்பத்தைத் தோற்றுவிக்கும். கண்ணருகு லென்ஸ், இந்த பிம்பத்தை உருப்பெருக்கம் செய்து, பெரிதான தலைகீழான இறுதி பிம்பத்தைத் தோற்றுவிக்கும்.


இறுதி பிம்பம் விழியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கும் β பொருள் லென்ஸ் அல்லது விழியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கு α உள்ள விகிதமே வானியல் தொலைநோக்கியின் உருப்பெருக்கம் (m) ஆகும்.



16. நிறமாலைமானி ஒன்றின் வெவ்வேறு பாகங்களைக் கூறி, நிறமாலைமானியின் தொடக்கச் சீரமைவுகளைப் பற்றி விளக்குக.

நிறமாலைமானி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முறையே இணையாக்கி, முப்பட்டக மேடை மற்றும் தொலைநோக்கி ஆகும்.


1) இணையாக்கி 

இணை ஒளிக்கற்றையை உருவாக்கும் அமைப்பே இணையாக்கி ஆகும்.

நீண்ட உருளை வடிவ குழலின் உள்முனையில் குவிலென்சும், வெளி முனையில் செங்குத்துப் பிளவும் கொண்ட அமைப்பே இணையாக்கி ஆகும்

லென்ஸ் மற்றும் செங்குத்துப் பிளவுக்கு இடையே உள்ள தொலைவினைச் சரிசெய்து பிளவினை லென்சின் குவியத்தில் நிலை நிறுத்தும்படி இணையாக்கி அமைக்கப்பட்டுள்ளது

பிளவு ஒளி மூலத்தை நோக்கி உள்ளவாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளது, பிளவின் அகலத்தைத் தேவைக்கு ஏற்றவாறு சரிசெய்து கொள்ளலாம்

முப்பட்டகத்தின் அடிப்பாகத்துடன் இணையாக்கி உறுதியாகப் பொருத்தப்பட்டுள்ளது

ii) முப்பட்டக மேடை

முப்பட்டகம், கீற்றணி போன்றவற்றைப் பொருத்துவதற்கு முப்பட்டக மேடை பயன்படுகிறது

மூன்று சரி செய்யும் திருகுகளுடன் அமைந்த இரண்டு இணையான வட்டவடிவத் தட்டுகள் முப்பட்டக மேடையில் உள்ளன

நிறமாலைமானியின் மையத்தின் வழியே செல்லும் செங்குத்து அச்சைப் பொருத்து சுழலும் வகையில் முப்பட்டக மேடை பொருத்தப்பட்டுள்ளது. இதன் நிலையை வெர்னியர் V1 மற்றும் V2 ஆகியவற்றைக் கொண்டு அறியலாம்

iii) தொலைநோக்கி 

இது வானியல் தொலைநோக்கி வகையைச் சார்ந்ததாகும், குழல் ஒன்றின் ஒரு முனையில் குறுக்குக் கம்பிகளுடன் அமைந்த கண்ணருகு லென்சும், அதன் மறுமுனையில் பொருளருகு லென்சும் ஒரே அச்சில் அமைந்துள்ளன

இணையாக்கியிலிருந்து வரும் இணைகதிர்களைக் கொண்டு கண்ணருகு லென்சுக்கும் பொருளருகு லென்சுக்கும் இடையே உள்ள தொலைவினைச் சரிசெய்து, தெளிவான பிம்பத்தைக் குறுக்குக் கம்பியில் தோன்ற செய்யலாம்

நிறமாலைமானியின் மையம் வழியே செல்லும் செங்குத்து அச்சைப் பொருத்து, சுழலும் வகையில் தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது

தொலைநோக்கியுடன் அரை டிகிரியாகப் பிரிக்கப்பட்ட அளவீடுகள் கொண்ட வட்டவடிவ அளவு கோல் ஒன்று தொலைநோக்கியுடன் சேர்ந்து சுழலும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது

நிறமாலைமானியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள்

() கண்ணருகு லென்சைச் சீரமைத்தல் :

தொலைநோக்கியை, ஒளியூட்டப்பட்ட பரப்பினை நோக்கிச் சுழற்றி, குறுக்குக் கம்பியை முன்னும் பின்னும் நகர்த்தித் தெளிவான பிம்பம் கண்களுக்குத் தெரியும் இடத்தில் அதனை நிலைநிறுத்த வேண்டும்.

() தொலைநோக்கியைச் சீரமைத்தல்:

தொலைவில் உள்ள பொருள் ஒன்றைக் காணும் வகையில் நிலை நிறுத்த வேண்டும். பின்னர், கண்ணருகு லென்சுக்கும் பொருளருகு லென்சுக்கும் உள்ள தொலைவினைச் சரிசெய்து, தெளிவான பிம்பம் கண்ணருகு லென்சின் குறுக்குக் கம்பியில் விழும்படி அமைக்க வேண்டும்

() இணையாக்கியைச் சீரமைத்தல்

இணையாக்கியின் பிளவினைச் சரி செய்து, ஒளி மூலம் ஒன்றினால் அதனை ஒளியூட்ட வேண்டும். பின்னர், இணையாக்கியின் அச்சுக் கோட்டில் நிற்கும் வகையில் தொலைநோக்கியைச் சுற்றி நிலைநிறுத்த வேண்டும்

தொலை நோக்கியின் கண்ணருகு லென்சின் குறுக்குக் கம்பியில் தெளிவான பிம்பம் கிடைக்கும் வரை. இணையாக்கியின் பிளவிற்கும் லென்சுக்கும் இடையே உள்ள தொலைவை சரிசெய்ய வேண்டும். இணையாக்கியிலிருந்து வரும் கதிர்கள் இணையாக இருந்தால் மட்டுமே, தெளிவான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட பிம்பம் கிடைக்கும்

() முப்பட்டக மேடையைச் சீரமைத்தல்: 

இரசமட்டம் மற்றும் சரிசெய்யும் திருகாணிகளைப் பயன்படுத்தி, முப்பட்டக மேடையின் இணை வட்டத்தகடுகளை சரிசெய்யலாம்


17. நிறமாலைமானியைக் கொண்டு, முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் காணும் சோதனையை விவரி.

நிறமாலைமானியின் தொலைநோக்கி, இணையாக்கி மற்றும் முப்பட்டக மேடை போன்றவற்றின் தொடக்கச் சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். முப்பட்டக கோணம் மற்றும் சிறும திசைமாற்றக் கோணம் ஆகியவற்றைச் கண்டறிந்து முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடலாம்

i) முப்பட்டகக் கோணம் (A)


இணையாக்கியிலிருந்து வரும் இணைகதிர்கள் முப்பட்டகத்தின் AB மற்றும் AC பக்கங்களில் விழும்படி முப்பட்டகம் சரிசெய்யப்படுகிறது.

• AB பக்கத்தில் பட்டு எதிரொளித்த பிளவின் பிம்பம், தொலை நேர்க்கியின் குறுக்குக்கம்பியுடன் பொருந்தும் வகையில் தொலைநோக்கியைச் சுற்றி T1 நிலையில் பொருத்தி வெர்னியர் அளவீடுகளை குறித்துக்கொள்ள வேண்டும்

மீண்டும் தொலைநோக்கியைச் சுழற்றி, முப்பட்டகத்தின் AC பட்டகத்தில் பட்டு எதிரொளித்த பிளவின் பிம்பம் தொலைநோக்கியின் குறுக்குக் கம்பியுடன் பொருந்தும் வகையில் T2 நிலையில் நிலைநிறுத்த வேண்டும். இதற்கான வெர்னியர் அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்

இவ்விரண்டு அளவீடுகளின் வேறுபாடு, தொலைநோக்கி சுழற்றப்பட்டக் கோணத்தைக் கொடுக்கும். இக்கோணம் முப்பட்டகக் கோணத்தின் இரண்டு மடங்கிற்குச் சமமாகும். இம்மதிப்பில் பாதி முப்பட்டகக் கோணம் (A) ஆகும்

ii) சிறுமதிசைமாற்றக் கோணம் (A)


இணையாக்கியிலிருந்து வரும் ஒளி முப்பட்டகத்தின் ஓர் ஒளிவிலகு பக்கத்தின் மீது விழுந்து, மறுபக்கத்தின் வழியே ஒளிவிலகல் அடைந்த ஒளியைத் தொலைநோக்கியின் வழியே பார்க்கும் வகையில் முப்பட்டகத்தை மேடைமீது பொருத்த வேண்டும். தற்போது திசைமாற்றக்கோணத்தின் மதிப்பு குறையும் வகையில் முப்பட்டக மேடையைச் சுழற்ற வேண்டும்

ஒரு கட்டத்தில் தொலை நோக்கியின் வழியே பார்க்கும் பிம்பம் ஓர் இடத்தில் நின்று, முப்பட்டக மேடையை ஏற்கெனவே சுழற்றிய திசையிலேயே தொடர்ந்து சுழற்றும்போது பின்வாங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் திசைமாற்றக் கோணத்தின் மதிப்பு அதிகரிக்கும். பிம்பம் எந்த இடத்தில் பின்வாங்க ஆரம்பிக்கிறதோ, அதே இடத்தில் தொலைநோக்கியின் செங்குத்துக் குறுக்குக் கம்பி பொருந்தும்படி தொலைநோக்கியை நிலைநிறுத்த வேண்டும். இது சிறுமதிசைமாற்ற நிலையைக் கொடுக்கும். இந்நிலைக்கான வெர்னியர் அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

முப்பட்டகத்தை நீக்கிவிட்டு, இணையாக்கியிலிருந்து வரும் பிம்பத்தை நேரடியாக தொலைநோக்கியின் வழியே பார்க்கும் வகையில் தொலை நோக்கியைச் சுழற்ற வேண்டும். நேரடி பிம்பத்துடன் செங்குத்துக் குறுக்குக்கம்பி பொருந்தும் வகையில் அமைத்து அதற்கான வெர்னியர் அளவீடுகளைக் குறித்துக்கொள்ள வேண்டும்

இவ்விரண்டு அளவீடுகளின் வேறுபாடு சிறுமதிசைமாற்றக் கோணத்தை கொடுக்கும். முப்பட்டகம் செய்யப்பட்ட பொருளின் ஒளிவிலகல் எண்ணைப் பின்வரும் . சமன்பாட்டினைப் பயன்படுத்திக் கணக்கிடலாம்.



Tags : Wave Optics | Physics அலை ஒளியியல் | இயற்பியல்.
12th Physics : UNIT 7 : Wave Optics : Long Answer Questions Wave Optics | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 7 : அலை ஒளியியல் : நெடுவினாக்கள் - அலை ஒளியியல் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 7 : அலை ஒளியியல்