Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: பாடச்சுருக்கம்

இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: பாடச்சுருக்கம் | 12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current

   Posted On :  16.10.2022 07:55 pm

12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: பாடச்சுருக்கம்

புவி அச்சின் வழியேச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கு புவி துருவத்தளம் என்று பெயர்.

பாடச்சுருக்கம்

• புவி அச்சின் வழியேச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கு புவி துருவத்தளம் என்று பெயர்.

• காந்த அச்சின் வழியேச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கு காந்த துருவத்தளம் என்று பெயர்.

• புள்ளி ஒன்றில் காந்தத்துருவத்தளத்திற்கும், புவிதுருவத்தளத்திற்கும் இடையே உள்ள கோணத்திற்கு சரிவு அல்லது காந்தச் சரிவு என்று பெயர்.

• புள்ளி ஒன்றில் புவியின் மொத்த காந்தப்புலம்  கோந்த துருவத்தளத்தின் கிடைத்தள திசையுடன் ஏற்படும் கோணத்திற்கு, ஒதுக்கம் அல்லது காந்த ஒதுக்கம் என்று பெயர்.

• ஒரு காந்தத்தின் முனைவலிமை மற்றும் காந்த நீளத்தின் பெருக்கல் பலனுக்கு , காந்தத்திருப்புத்திறன் என்று பெயர். இது ஒரு வெக்டர் அளவாகும் இதனை  எனக் குறிப்பிடலாம்.

• ஒரு காந்தத்தைச் சுற்றியுள்ள வெளியில் ஓரலகு வலிமை கொண்ட காந்த முனை உணரக்கூடிய விசைக்கு காந்தப்புலம் என்று பெயர். இது ஒரு வெக்டர் அளவாகும். இதனை  எனக் குறிப்பிடலாம். இதன் அலகு N A-1m-1 ஆகும்.

• ஓரலகு பரப்பின் வழியே செங்குத்தாகக் கடந்து செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கைக்கு காந்தப்பாயம்  என்று பெயர். இது ஒரு ஸ்கேலர் அளவாகும். காந்தப்பாயத்தின் SI அலகு வெபர். குறியீடு Wb.

• காந்தவியலின் கூலூம் விதியின்படி இருகாந்த முனைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அல்லது விலக்கு விசையானது, அவற்றின் முனைவலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்த்தகவிலும், அக்காந்த முனைகளுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

• சீரான காந்தப்புலத்தில் உள்ள காந்த இருமுனை, திருப்புவிசையை உணரும்.

• மிகக்குறைந்த மின்னோட்டங்களை அளக்கப்பயன்படும் ஒரு கருவி டேஞ்சன்ட் கால்வனோ மீட்டராகும். இது ஒரு இயங்கு காந்தவகை கால்வனோ மீட்டராகும். இது டேஞ்சன்ட் விதியின் அடிப்படையில் இயங்குகிறது. B = BH tan θ.

• பொருள் அல்லது மாதிரி ஒன்றினை காந்தமாக்கப் பயன்படும் காந்தப்புலத்திற்கு காந்தமாக்குப்புலம் என்று பெயர். இது ஒரு வெக்டர் அளவாகும். இதனை  என குறிப்பிடலாம். இதன் அலகு Am-1 ஆகும்.

• காந்தப்புலக் கோடுகளை அல்லது காந்தவிசை கோடுகளை தன்வழியே பாய அனுமதிக்கும் பொருளின் திறமையை அளவிடுவதற்கு காந்த உட்புகுதிறன் என்றுபெயர்.

• பொருளின் ஓரலகு பருமனுக்கான நிகர காந்தத்திருப்புத்திறனே, காந்தமாகும் செறிவு அல்லது காந்தமாகும் வெக்டர் அல்லது காந்தமாகுதல் என்று பெயர்.

• பொருளின் காந்தமாக்குப்புலத்திற்கும்  அக்காந்தமாக்குப்புலத்தினால் பொருளில் தூண்டப்பட்ட காந்தமாகும் செறிவிற்கும்  உள்ள தகவு பொருளின் காந்த ஏற்புத்திறன் எனப்படும்.

• காந்தப்பொருட்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன அவை: டயாகாந்தப்பொருட்கள், பாரா காந்தப்பொருட்கள் மற்றும் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் ஆகும்.

• பொருளொன்றை காந்தமாக்கும் சுற்றில், காந்தமாக்கு புலத்தில்  ஏற்படும் மாறுபாட்டிற்கு காந்தப்புலம்  பின்தங்கும் நிகழ்ச்சிக்கு காந்தத் தயக்கம் என்று பெயர்.

• வலதுகை பெருவிரல் விதி : வலதுகையின் பெருவிரல் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தின் திசையைக் காட்டும் வகையில் பிடிக்கும் போது, கடத்தியைச் சுற்றி பிடித்திருக்கும் மற்ற விரல்கள் கடத்தியைச் சுற்றி உருவாகும் காந்தப்புலக் கோடுகளின் திசையைக் காட்டும்.

• மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகுவிதி : வலதுகை திருகு ஒன்றினை திருகு சுழற்றியால் சுழற்றும் போது, திருகு முன்னேறும் திசையில் மின்னோட்டத்தின் திசையும், திருகு சுழலும் திசை கடத்தியைச் சுற்றி உருவாகும் காந்தப்புலத்தின் திசையையும் காட்டும்.

• ஆம்பியரின் சுற்றுவிதி 

• வரிச்சுருள் ஒன்றின் உட்புறம் ஏற்படும் காந்தப்புலம் B = μ0 nl, இங்கு n என்பது வரிச்சுருளின் ஓரலகு நீளத்திலுள்ள சுற்றுகளின் எண்ணிக்கையாகும்.

• வட்ட வரிச்சுருள் ஒன்றின் உள்ளே ஏற்படும் காந்தப்புலம் B = μ0 nl,இங்கு n என்பது வட்ட வரிச்சுருளின் ஓரலகு நீளத்திலுள்ள சுற்றுகளின் எண்ணிக்கையாகும்.

• லாரன்ஸ் விசை: 

• சீரான காந்தப்புலத்தில் செல்லும் மின்துகள் வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும்.

• பிளெமிங்கின் இடதுகை விதி : இடது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் பெருவிரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்ததாக நீட்டும் போது, ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டினால் பெருவிரல் கடத்தியின் மீது செயல்படும் விசையின் திசையைக் காட்டும்.

• வெற்றிடத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்டுள்ள முடிவிலா நீளம் கொண்ட இரு இணைகடத்திகள் ஒவ்வொன்றின் வழியாகப்பாயும் மின்னோட்டத்தினால், ஒவ்வொரு கடத்தியும் ஓரலகு நீளத்திற்கு 2 x 10-7N விசையை உணர்ந்தால், ஒவ்வொரு கடத்தியின் வழியாகவும் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியராகும்.

• மின்னோட்டம் பாயும் கம்பிச்சுருள் ஒன்றை சீரான காந்தப்புலத்தில் வைக்கும் போது அக்கம்பிச் சுருளின் மீது செயல்படும் நிகரவிசை சுழி. ஆனால் நிகர திருப்புவிசை சுழியல்ல. நிகரத்திருப்பு விசையின் எண்மதிப்பு  = NABI sinθ ஆகும்.

• இயங்கு சுருள் கால்வனோ மீட்டரைக் கொண்டு சிறிய மின்னோட்டங்களைக் கண்டறியவும், அளக்கவும் முடியும்.

• இயங்கு சுருள் கால்வனோ மீட்டரில், கம்பிச்சுருள் வழியே பாயும் மின்னோட்டம். விலகலுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். கணிதவியல்படி I = Gθ. இங்கு G = K/NAB ஆகும். இதற்கு கால்வனோமீட்டர் மாறிலி அல்லது மின்னோட்ட சுருக்கக் கூற்றெண் என்று பெயர்.

• ஓரலகு மின்னோட்டத்திற்கு ஏற்படும் விலகலே மின்னோட்ட உணர்திறன் எனப்படும்.


• கால்வனோமீட்டர் முனைகளுக்கு இடையே அளிக்கப்படும் ஓரலகு மின்னழுத்த வேறுபாட்டிற்கானவிலகலே, மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் எனப்படும்.  இங்கு Rg என்பது கால்வனோ மீட்டரின் மின்தடையாகும்.

• மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க பயன்படும் கருவிக்கு அம்மீட்டர் என்று பெயர்.

• ஒரு கால்வனோ மீட்டரை தகுந்த நெடுக்கமுள்ள அம்மீட்டராக மாற்ற, கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் குறைந்த மின்தடை S ஒன்றை அதன் நெடுக்கத்திற்கு ஏற்ப இணைக்க வேண்டும். இக்குறைந்த மின்தடைக்கு இணைதடம் என்று பெயர்.

• ஒரு நல்லியல்பு அம்மீட்டர் சுழி மின்தடையைப் பெற்றிருக்கும்.

• ஒரு மின்சுற்றில் உள்ள எந்த ஒரு பகுதியின் மின்னழுத்தத்தையும் அளக்கப்பயன்படும் கருவியே வோல்ட் மீட்டராகும்.

• வோல்ட் மீட்டராக மாற்ற அதனுடன் உயர் மின்தடை R ஒன்றை நெடுக்கத்திற்கு ஏற்ப தொடராக இணைக்க வேண்டும்.

•  ஒரு நல்லியல்பு வோல்ட் மீட்டர் முடிவிலா மின்தடையைப் பெற்றிருக்கும்.



Tags : Physics இயற்பியல்.
12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current : Magnetism and Magnetic Effects of Electric Current: Summary Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள் : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: பாடச்சுருக்கம் - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்