Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசை: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
   Posted On :  07.10.2022 08:55 pm

12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்

மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசை: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

இயற்பியல் : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசை: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் உடன் பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

இயங்கு சுருள் கால்வனோமீட்டர்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 3.25

ஒரு இயங்கு சுருள் கால்வனோமீட்டர் ஒன்றின் கம்பிச்சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கை ஐந்து. ஒவ்வொரு சுற்றின் நிகர பரப்பும் 2 x 10-2 m2. இக்கம்பிச்சுருள் 4 × 10-2Wb m-2 வலிமை கொண்ட காந்தப்புலம் ஒன்றினுள் 4 x 10-9 Nm deg-1 முறுக்கு மாறிலி K கொண்ட இழையினால் தொங்கவிடப்பட்டுள்ளது.

(அ) கால்வனோமீட்டரின் மின்னோட்ட உணர்திறன் டிகிரி /மைக்ரோ-ஆம்பியரில்காண்க.

(ஆ) 50 பிரிவுகள் கொண்ட அளவுகோலின் முழு விலக்கத்திற்கான மின்னழுத்தம் 25 mV என்ற நிபந்தனையில் அதன் மின்னழுத்த உணர்திறனைக் காண்க.

(இ) கால்வனோமீட்டரின் மின்தடையைக் காண்க.

தீர்வு

கம்பிச் சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கை = 5

ஒவ்வொரு சுற்றும் 2 x 10-2 m2 பரப்பு கொண்டது.

காந்தப்புலத்தின் வலிமை = 4 x 10-2 Wb m-2

கம்பிச்சுருளைத் தொங்கவிடப் பயன்படும் இழையின் முறுக்கு மாறிலி K = 4 x 10-9 N m deg-1

(அ) மின்னோட்ட உணர்திறன்


பிரிவுகள் /ஆம்பியர் அல்லது ஆம்பியர் ஒன்றுக்கு 106 பிரிவுகள்

1μA = 1 மைக்ரோ ஆம்பியர் = 10-6 ஆம்பியர்

எனவே,

Is = 106

Is = 1பிரிவு  (μA)-1

(ஆ) மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன்


(இ) கால்வனோ மீட்டரின் மின்தடை


 

எடுத்துக்காட்டு 3.26

கால்வனோமீட்டரின் மின்னோட்ட உணர்திறனை 50% அதிகரிக்கும்போது, அதன் மின்தடை, தொடக்க மின்தடையைப் போன்று இருமடங்காகிறது. இந்த நிபந்தனையில் கால்வனோமீட்டரின் மின்னழுத்த உணர்திறன் மாறுமா? அவ்வாறு மாற்றமடைந்தால் எவ்வளவு மாற்றமடையும்?

தீர்வு

ஆம், மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் மாற்றமடையும். மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன்

Vs=Is/R கால்வனோ மீட்டரின் மின்தடைஇருமடங்காக்கப்பட்டால், புதிய மின்தடை R' = 2R மின்னோட்ட உணர்திறனில் ஏற்பட்ட அதிகரிப்பு


புதிய மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன்


எனவே, மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் குறையும். மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறனின் சதவிகிதக் குறைவு

 

12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current : Torque on a current loop: Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள் : மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசை: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்