Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | பண்பேற்றம் (MODULATION)

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

பண்பேற்றம் (MODULATION)

நெடுந்தொலைவு பரப்புகைக்கு குறைந்த அதிர்வெண் கொண்ட அடிக்கற்றை சைகையானது (உள்ளீடு சைகை -baseband signal), பண்பேற்றம் (modulation) எனப்படும்

பண்பேற்றம் (MODULATION)

குறுகிய தொலைவுகளுக்கு தகவலைப் பரப்புவதற்கு சிக்கலான நுட்பங்கள் தேவையில்லை. தகவல் சைகையின் ஆற்றலே நேரடியாக அனுப்புவதற்குப் போதுமானது. எனினும் ஒரு தகவல், எடுத்துக்காட்டாக செவியுணர் அதிர்வெண் (20 முதல் 20,000 Hz), உலகம் முழுவதும் நீண்ட தொலைவுகளுக்கு பரப்பப்பட வேண்டுமாயின், தகவலை எந்த இழப்புமின்றி பரப்புவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகிறது.

நெடுந்தொலைவு பரப்புகைக்கு குறைந்த அதிர்வெண் கொண்ட அடிக்கற்றை சைகையானது (உள்ளீடு சைகை -baseband signal), பண்பேற்றம் (modulation) எனப்படும் செயல்முறைப்படி அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ சைகையின் மீது மேற்பொருத்தப்படுகின்றது. எனவே பண்பேற்றச் செயல்முறையில், அடிக்கற்றை சைகையை சுமந்து செல்ல அதிக அதிர்வெண் சைகை கொண்ட ஊர்தி சைகை (ரேடியோ சைகை -carrier signal) பயன்படுத்தப்படுகிறது.

ஊர்தி சைகையின் அதிர்வெண் மிகவும் அதிகமாதலால், அதனை குறைவான வலுவிழப்புடன் நெடுந்தொலைவுக்கு பரப்பலாம். வழக்கமாக ஊர்தி சைகையானது ஒரு சைன் அலை சைகையாகும். மேலும் ஊர்தி சைகையானது, வெளியைப் போன்ற தகவல் தொடர்பு ஊடகத்துடன் பொருந்தி அமைவதால், அதிக செயல்திறனுடன் பரப்ப இயலும்.

குறிப்பு

ஊர்தி சைகை தகவல் ஏதும் கொண்டிருக்காது.

ஒரு சைன்வடிவ ஊர்தி அலையை eC = EC sin (2πvC t + Ø) என குறிப்பிடலாம். இங்கு EC என்பது வீச்சு, vC என்பது அதிர்வெண் மற்றும் Ø ஆனது t என்ற கணநேரத்தில் ஊர்தி அலையின் தொடக்கக் கட்டம் ஆகும்.

ஊர்தி சைகையின் மூன்று பண்புகள் பண்பேற்றச் செயல்முறையின் போது அடிக்கற்றை சைகையால் மாற்றப்படலாம். அவை ஊர்தி சைகையின் வீச்சு, அதிர்வெண் மற்றும் கட்டம் ஆகும்.

இந்த பண்பளவுகளில் ஏதேனும் ஒன்றில் நிகழும் மாற்றத்தின் அடிப்படையில் பண்பேற்றம் 3 வகைப்படும். அவை 

(i) வீச்சுப் பண்பேற்றம் 

(ii) அதிர்வெண் பண்பேற்றம் மற்றும்

(iii) கட்டப் பண்பேற்றம்
12th Physics : UNIT 10b : Communication Systems : Modulation in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : பண்பேற்றம் (MODULATION) - : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்