உடல் நலம் மற்றும் நோய்கள் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 21 : Health and Diseases
உடல் நலம் மற்றும்
நோய்கள் (அறிவியல்)
நினைவில்
கொள்க
* மருந்துகளை தொடர்ச்சியாகப்
பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இதுவே
மருந்துக்கு அடிமையாதல் அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்றழைக்கப்படுகிறது.
* புகைபிடித்தல், மெல்லுதல்
மற்றும் உறிஞ்சுதல் போன்றவற்றிற்காக புகையிலை பயன்படுத்தப்படுகிறது. புகையிலையின்
புகையை சுவாசித்தல் புகை பிடித்தலாகும்.
* ஆல்கஹாலைச் சார்ந்திருத்தல், மதுப் பழக்கம்
எனவும், அடிமையாதல், மதுவுக்கு
அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது.
* நீண்ட காலமாக மது அருந்துவதால், அது ஒரு மயக்க
மருந்தாகவும் மற்றும் வலி நிவாரணி போன்றும் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை நலிவடையச்
செய்வதுடன், கல்லீரலில் அதிக கொழுப்பு சேமிக்கப்பட்டு
சிர்ரோஸிஸ் நோயையும் ஏற்படுத்துகிறது.
* டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு
நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும் இன்சுலினின் பற்றாக்குறையான செயல்பாடு, குறைவான
இன்சுலின் சுரத்தல் அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும் இரத்த
குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும்.
* அதிகப்படியான கொழுப்பு
சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிப்பது உடல் பருமன் எனப்படும்.
* பரவலாகக் காணப்படும் இதயக்
குழல் நோய் (கரோனரி இதய நோய்) இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது.
* கட்டுப்பாடற்ற, அபரிமிதமான
செல் பிரிதல் புற்று நோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது.
* மனித நோய்த் தடைகாப்பு குறைவு
வைரஸ் ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும்.