மது
அருந்துபவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள்
கல்வி மற்றும் தகுந்த
ஆலோசனைகள், மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை
எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபடவும், வாழ்க்கையின்
தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் உதவும்.
மறுவாழ்வை மேற்கொள்ளும்
நபர்கள், நூல்கள்
வாசித்தல், இசை, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
சிக்கல் நிறைந்த சூழ்நிலை
ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக
மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். தங்களது பதட்டமான
உணர்வுகள், தவறான செயல்களைக் குறித்துப் பேசுவதன் மூலம்,
மேலும் அத்தவறுகளைச் செய்யாமல் தங்களை தடுத்துக் கொள்ள உதவும்.
உளவியலாளர்கள் மற்றும் மனநல
மருத்துவர்களிடமிருந்து உதவிகள் பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான
நிலையிலிருந்து விடுபட்டு,
நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.
மதுவிலிருந்து மீட்பு (de-addiction) மற்றும்
மறுவாழ்வு திட்டங்கள் தனி நபருக்கு உதவிகரமாக உள்ளன. இதனால் அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து
முழுமையாக விடுபட்டு, இயல்பான மற்றும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.