கலவினைகளின் வெப்ப இயக்கவியல் | மின் வேதியியல் - கலவினைகள் | 12th Chemistry : UNIT 9 : Electro Chemistry
கலவினைகள்
Na+ அயனிகள் எதிர்மின்முனையை நோக்கி கவரப்படுகின்றன, அங்கு அவை எலக்ட்ரான்களுடன் இணைந்து, திரவ சோடியமாக ஒடுக்கமடைகின்றன.
எதிர்மின்முனை (ஒடுக்கம்)
Na+ (Ɩ) + e– Na (Ɩ)
E° = -2.71V
இதேபோல Cl- அயனிகள் நேர்மின்முனையை நோக்கி கவரப்படுகின்றன, அங்கு அவை அவற்றின் எலக்ட்ரான்களை இழந்து ஆக்ஸிஜனேற்றமடைந்து குளோரின் வாயுவாக மாறுகின்றன.
நேர்மின்முனை (ஆக்ஸிஜனேற்றம்)
2Cl (Ɩ) → Cl2 (g) + 2e-
E° = -1.36V
ஒட்டுமொத்த வினை,
2Na+ (Ɩ) + 2Cl- (Ɩ) → 2Na(Ɩ) + Cl2(g)
E° = - 4.07V
மேற்காண் வினை தன்னிச்சையற்றது என்பதை எதிர்குறி E° மதிப்பு காட்டுகிறது. எனவே, உருகிய சோடியம் NaClன் மின்னாற்பகுத்தலை நிகழ்த்த 4.07V ஐவிட அதிகமான மின்னழுத்தத்தை நாம் செலுத்த வேண்டும்.
மின்னாற்பகுப்புக் கலனில், கால்வானிக் மின்கலத்தில் நிகழ்வதைப்போலவே நேர்மின்முனை ஆக்ஸிஜனேற்றமும், எதிர்மின்முனையில் ஒடுக்கமும் நிகழ்கின்றன, ஆனால் மின்முனைகளின் குறி எதிரெதிரானது. அதாவது மின்னாற்பகுப்புக் கலனில் எதிர்மின்முனையின் குறி -ve மற்றும் நேர்மின்முனையின் குறி +ve.