கலவினைகளின் வெப்ப இயக்கவியல் | மின் வேதியியல் - நெர்ன்ஸ்ட் சமன்பாடு | 12th Chemistry : UNIT 9 : Electro Chemistry
நெர்ன்ஸ்ட் சமன்பாடு
நெர்ன்ஸ்ட் சமன்பாடு என்பது மின்கல மின்னழுத்தம் மற்றும் மின்வேதி வினையில் ஈடுபடும் கூறுகளின் செறிவு ஆகியவற்றை தொடர்புபடுத்தும் சமன்பாடாகும். பின்வரும் ஒட்டுமொத்த ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை நிகழும் ஒரு மின்வேதிக் கலனை கருதுவோம்,
xA + yB ↔ lC + mD
மேற்காண் வினைக்கான வினைக்குணகம் (Q) மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Q = [C]Ɩ [D]m / [A]x [B]y ......(9.28)
நாம் முன்னரே கற்றறிந்தபடி,
∆G = ∆G° + RT lnQ .....(9.29)
கிப்ஸ் கட்டிலா ஆற்றலை மின்கல emf உடன் பின்வருமாறு தொடர்பு படுத்த முடியும். (சமன்பாடுகள் (9.24) மற்றும் (9.25)]
∆G = - nFEcell ; ∆G° = - nFE°cell
இந்த மதிப்புகளையும், சமன்பாடு (9.28) லிருந்து Q மதிப்பையும் சமன்பாடு (9.29) ல் பிரதியிட
(9.29) ⇒ - nFEcell = - nFEocell + RT ln [C]Ɩ [D]m / [A]x [B]y ......(9.30)
சமன்பாடு (9.30) முழுவதையும் (-nF) ஆல் வகுக்க
(9.25) ⇒ Ecell = Eocell - RT / nF ln [C]Ɩ [D]m / [A]x [B]y
(or) Ecell = Eocell – 2.303RT/nF log [C]Ɩ [D]m / [A]x [B]y ......(9.31)
மேற்காண் சமன்பாடு (9.31) ஆனது நெர்ன்ஸ்ட் சமன்பாடு என்றழைக்கப்படுகிறது. 25°C (298K), வெப்பநிலையில் சமன்பாடு (9.31) ஐ பின்வருமாறு எழுதலாம்,
25°C வெப்பநிலையில் நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை பயன்படுத்தி பின்வரும் மின்கலத்தின் emf மதிப்பை நாம் கணக்கிடுவோம்.
Cu (s) | Cu2+ (0.25 aq, M) | | Fe3+ (0.005 aq M) | Fe2+ (0.1 aq M) | Pt (s)
Given : (Eo) Fe3+│Fe2+ = 0.77V and (Eo) Cu2+ │Cu = 0.34 V
நிகழும் அரைகல வினைகள்
Cu (s) → Cu2+ (aq) + 2e- ..... (1)
2 Fe3+ → (aq) + 2e- → 2Fe2+ (aq) ..... (2)
ஒட்டுமொத்த வினை
Cu (s) + 2 Fe3+ (aq) → Cu2+ (aq) + 2Fe2+ (aq), and n = 2
25°C வெப்பநிலையில் நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை பயன்படுத்த
Cu2+ │ Cu பின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்பு 0.34 V
∙ (Eoox) Cu│Cu3+ = -0.34V
(Eored) Fe3+ │ Fe2+ = 0.77V
∙ Eocell = - 0.34 + 0.77
Eocell = 0.43V
∙ Ecell =0.43 - 0.0591 / 2 × log (0.25) (0.1)2/ (0.005)2
=0.43 - 0.0591 / 2 × 2
=0.43 - 0.0591
= 0.3709V.
= log (0.25) (0.1)2 / (0.005)2
= log 25 × 10-2 × 1 × 10-2 / 25 × 10-6
= log 10-2
= 2 log10 10
= 2.
தன் மதிப்பீடு
டேனியல் மின்கலத்தில் நிகழும் மின்வேதிக் கலவினை
Zn (s) + Cu2+ (aq) → Zn2+ (aq)+Cu (s)
நேர்மின்முனைப் பகுதியில் அயனிச் செறிவை 10 மடங்கு அதிகரிக்கும்போது மின்கல மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?