Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | சரியான விடையைத் தேர்வு செய்க

புறப்பரப்பு வேதியியல் - சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry

   Posted On :  17.08.2022 04:42 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்

சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : புறப்பரப்பு வேதியியல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : சரியான விடையைத் தேர்வு செய்க
வேதியியல் : புறப்பரப்பு வேதியியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்க


1. log (x/m)  திப்புகளை மதிப்புகளுக்கு எதிராக கொண்டு வரைபடத்தில் பிரண்ட்லிச் சமவெப்பக் கோடு வரையப்பட்டுள்ளது. கோட்டின் சாய்வு மற்றும் அதன் y-அச்சு வெட்டுத்துண்டு மதிப்புகள் முறையே குறிப்பிடுவது

) 1/n , k

) log 1/n , k

) 1/n , log k

) log 1/n , log k

விடை : ) 1/n , log k

காரணம் :

x/m =k.p1/n

 log(x/m )=log k+ 1/ n log p

y=c+mx

சாய்வு m 1/n

வெட்டுத்துண்டு C = log K 


2. இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது

) மீள்தன்மை கொண்டது

) வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது 

) பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு 

) புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது

விடை : ) வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது 


3. பின்வரும் பண்புகளில் பரப்பு கவர்தலுடன் தொடர்புடையது எது? (NEET) 

) ΔG மற்றும் ΔH எதிர்குறி மதிப்பையும் ஆனால் ΔS நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன

) ΔG மற்றும் ΔS எதிர்குறி மதிப்பையும் ஆனால் ΔH நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன

) ΔG எதிர்குறி மதிப்பையும் ஆனால் ΔH மற்றும் ΔS நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.

) ΔG, ΔH மற்றும் ΔS அனைத்தும் எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளன

விடை : ) ΔG, ΔH மற்றும் ΔS அனைத்தும் எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளன


4. மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்

) வாயுவில் திண்மம் 

) வாயுவில் வாயு 

) வாயுவில் நீர்மம் 

) நீர்மத்தில் வாயு

விடை : ) வாயுவில் நீர்மம் 


5. கூற்று : A13+ அயனியின் வீழ்படிவாக்கும் திறன் Na+அயனியை விட அதிகம்

காரணம் : சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ளபோது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை : ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்க மாகும்


6. கூற்று : காயத்தால் உண்டாகும் இரத்தக் கசிவை தடுக்க ஃபெர்ரிக் குளோரைடை பயன்படுத்த முடியும். இக்கூற்றை நியாயப்படுத்தும் சரியான விளக்கம் எது

) இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு நச்சுத்தன்மை கொண்டது

) இது உண்மை , இரத்தம் என்பது ஒரு எதிர்மின் சுமை கொண்ட கூழ்மமாகும். Fe3+ அயனிகள் இரத்தத்தை திரியச் செய்கின்றன

) இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு ஒரு அயனிச்சேர்மமாகும், இது இரத்த ஓட்டத்தில் கலக்கிறது

) இது உண்மை, Cl- அயனியுடன் சேர்த்து எதிர்மின் கூழ்மம் உருவாவதால் திரிதல் நிகழ்கிறது

விடை : ) இது உண்மை , இரத்தம் என்பது ஒரு எதிர்மின் சுமை கொண்ட கூழ்மமாகும். Fe3+ அயனிகள் இரத்தத்தை திரியச் செய்கின்றன.


7. தலைமுடி கிரீம் என்பது ஒரு 

) களி

) பால்மம் 

) திண்மக் கூழ்மம் 

) கூழ்மக் கரைசல்

விடை : ) பால்மம் 


8. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது

) பால்மம்-புகை 

) களி-வெண்ணெய் 

) நுரைப்பு-பனிமூட்டம் 

) கலக்கப்பட்ட கிரீம் - கூழ்ம கரைசல்

விடை : ) களி - வெண்ணெய் 


9. As2S3 கூழ்மத்தை திரியச் செய்ய மிகவும் பயனுள்ள மின்பகுளி 

) NaCl

) Ba(NO3)2 

) Kg[Fe(CN)6

) Al2(SO4)3

விடை : ) ) Al2(SO4)3


10. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பரப்பு இழுவிசை குறைப்பி அல்ல?

 ) CH3 --- (CH2)15 --- +N –(--CH3)2 CH2 Br

) CH3 – (CH2)15 – NH2 

) CH3 -- (CH2)16 –CH2 OSO-2 Na+

) OHC - (CH2)14-CH2) --COO - -Na+

விடை : ) CH3 – (CH2)15 – NH2 


11. ஒரு கூழ் மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு 

) எதிர்மின்வாய் தொங்கலசைவு 

) மின்முனைக்கவர்ச்சி 

) திரிதல்

) டிண்டால் விளைவு

விடை : ) டிண்டால் விளைவு 


12. மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்மநிலை அமைப்பிலுள்ள துகள்கள் எதிர்மின்முனையை நோக்கி நகருகின்றன. அதே கூழ்மக்கரைசலின் திரிதல் நிகழ்வானது. K2SO4 

(i), Na3PO4 

(ii) K4[Fe(CN)6

(iii) மற்றும் Nacl 

(iv) ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் வீழ்படிவாகும் திறன் 

) II > I > IV > III 

) III > II > I > IV 

) I > II > III >IV 

) இவற்றில் எதுவுமில்லை

விடை : ) III > ll > I > IV 

காரணம் : கூழ்ம துகள்கள் எதிர்மின் முனை நோக்கி நகர்வதால் அவை நேர்மின் சுமை உடையவை. அவற்றின் திரிதல் எதிர்மின் அயனி களால் நடைபெறும்

(i) SO42- 

(ii) PO43- 

(iii) [Fe(CN)6]4-

(iv) CI- எதிரயனியின் மின் சுமை அதிகரிக்கும்போது அவற்றின் வீழ்படிவாக்கும் திறனும் அதிகரிக்கும். எனவே III >II>I>IV


13. கொல்லோடியன் என்பது பின்வருவனவற்றுள் எதன் ஆல்கஹால் - ஈதர் கலவையில் 4% கரைசலாகும்

) நைட்ரோகிளிசரின் 

) செல்லுலோஸ் அசிட்டேட் 

) கிளைக்கால் டைநைட்ரேட் 

) நைட்ரோசெல்லுலோஸ்

விடை : ) நைட்ரோசெல்லுலோஸ்


14. பின்வருவனவற்றுள் எது ஒருபடித்தான வினைவேக மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு

) ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தல் 

) தொடு முறையில் கந்தக அமிலம் தயாரித்தல் 

) எண்ணெய்யின் ஹைட்ரஜனேற்றம் 

) நீர்த்த HCl முன்னிலையில் சுக்ரோஸின் நீராற் பகுத்தல் 

விடை : ) நீர்த்த HCl முன்னிலையில் சுக்ரோஸின் நீராற்பகுத்தல் 


15. பின்வருவனவற்றை பொருத்துக

A)V2O5 - i)  -  உயர் அடர்த்த பாலிஎத்திலீன்

B) சீக்லர் - நட்டா - ii) PAN

C) பெராக்சைடு - iii) NH3

D) தூளாக்கப்பட்ட Fe - iv) H2SO4

A B C D 

a) (iv) (i) (ii) (iii) 

b) (i) (ii) (iv) (iii) 

c) (ii) (iii) (iv) (i) 

d) (iii) (iv) (ii) (i) 

விடை : a) (iv) (i) (ii) (iii) 


16. AS2S3 கூழ்மத்தை வீழ்படிவாக்கும் மின்பகுளி களின் வீழ்படிவாக்கும் திறன் மதிப்புகள் மில்லி மோல்கள்/லிட்டர் அலகில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன

(1) (NaCl) = 52 

(II) (BaCl2) = 0.69 

(II) (MgSO4) = 0.22 வீழ்படிவாக்கும் திறன் களின் சரியான வரிசை 

) III>II>I 

) I>ll>III 

)I>III >II 

) II>lll>I

விடை : ) III>II>I 


17. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் 

) ΔH அதிகரிக்கிறது 

) ΔS அதிகரிக்கிறது

) ΔG அதிகரிக்கிறது 

) ΔS குறைகிறது

விடை : ) ΔS குறைகிறது 


18. x என்பது பரப்புகவர் பொருளின் அளவு, m என்பது பரப்புப் பொருளின் அளவு எனக்கொண்டால். பின்வரும் தொடர்களில் பரப்பு கவர்தல் செயல் முறையுடன் தொடர்பில்லாதது எது

) மாறாத T யில் x/m = f(P)

) மாறாத P யில் x/m = f(T)

) மாறாத x/m  யில் P = f(T)

) x/m = PT 


விடை : ) x/m = PT


19. ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது? (NEET-2018) 

அயனியின் மின் சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி

) அயனியின் உருவளவை மட்டும் 

) அயனியின் மின்சுமையளவை மட்டும்

) அயனியின் மின்சுமையின் குறியை மட்டும்

விடை : ) அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி


20. பொருத்துக.

A) தூய நைட்ரஜன் - (i) குளோரின்

B) ஹேபர் முறை – (ii)  கந்தக அமிலம்

C) தொடு முறை -  (iii) அம்மோனியா

D) டெக்கான் முறை -  iv) சோடியம் அசைடு அல்லது பேரீயம் அசைடு

 A B C D 

) (i) (ii) (iii) (iv) 

) (ii) (iv) (i) (iii) 

) (iii) (iv) (ii) (i) 

) (iv) (iii) (ii) (i) 

விடை : ) (iv) (iii) (ii) (i)


Tags : Surface Chemistry புறப்பரப்பு வேதியியல்.
12th Chemistry : UNIT 10 : Surface Chemistry : Choose the correct answer Surface Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல் : சரியான விடையைத் தேர்வு செய்க - புறப்பரப்பு வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்