புறப்பரப்பு வேதியியல் - கூழ்மகரைசல்களின் வகைப்பாடு | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry
கூழ்மகரைசல்களின் வகைப்பாடு
அநேக கூழ்ம அமைப்புகளில் பிரிகைநிலைமைகள் திண்மங்களாகவும், பிரிகை ஊடகம் நீர்மங்களாகவும் காணப்படுகின்றன.
நீரைபிரிகை ஊடகமாக கொண்டிருக்கும் கூழ்மங்கள் "நீர்மக்கூழ்மங்கள்" என குறிப்பிடப்படுகின்றன.
ஆல்கஹாலை பிரிகை ஊடகமாக கொண்டிருக்கும் கூழ்மங்கள் ஆல்கஹால் கூழ்மங்கள் எனவும், பென்சீனை பிரிகை ஊடகமாக கொண்டிருக்கும் கூழ்மங்கள் பென்சோ கூழ்மங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.
பிரிகை நிலைமை மற்றும் பிரிகை ஊடகத்திற்கிடையே நிலவும் விசைகளின் அடிப்படையில் மற்றொரு வகையில் கூழ்மங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
கரைப்பான் விரும்பும் கூழ்மங்களில், பிரிகை நிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே வலுவான கவர்ச்சி விசை நிலவுகிறது. எடுத்துக்காட்டுகள்: புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றின் கூழ்ம கரைசல்கள். இவை அதிக நிலைப்புத் தன்மை கொண்டவை, எளிதில் வீழ்படிவாவதில்லை.அவை வீழ்படிவான பின்னரும் கூட, பிரிகை ஊடகத்தை சேர்த்து மீளவும் கூழ்மநிலைக்கு கொண்டுவர இயலும்.
கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களில், பிரிகைநிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே கவர்ச்சி விசைகள் ஏதுமில்லை. இவை குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டவைகளாகும், மேலும் எளிதில் வீழ்படிவாகின்றன. ஆனால், பிரிகை ஊடகத்தை சேர்ப்பதன் மூலம் மீண்டும் இவற்றை உருவாக்க இயலாது.அவை, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தாமாகவே திரிந்துவிடுகின்றன. இவை மீளாக் கூழ்மங்கள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்: கோல்டு, சில்வர், பிளாட்டினம் மற்றும் காப்பர் கூழ்மங்கள். பிரிகைநிலைமை மற்றும் பிரிகை ஊடகத்தின் இயற்நிலைமைகளின் அடிப்படையில்
கூழ்மங்களின் வகைகள் பின்வரும் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பிரிகைநிலைமை மற்றும் பிரிகை ஊடகத்தின் இயற்நிலைமைகளின் அடிப்படையில் கூழ்மங்களின் வகைப்பாடு.