புறப்பரப்பு வேதியியல் - சிறு வினாக்கள் | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry
வேதியியல் : புறப்பரப்பு வேதியியல்
II. சிறு வினாக்கள் :
1. இயற்புறப்பரப்பு கவர்தலின் சிறப்புப் பண்புகள் இரண்டை தருக.
• இயற்புறப்பரப்பு கவர்தலில் அழுத்தம் அதிகரிக்கும் போது பரப்பு கவர்தலின் அளவு அதிகரிக்கிறது.
• வெப்பநிலை அதிகரிக்கும் போது இயற்பரப்புக் கவர்ச்சி குறைகிறது.
2. இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.
வேதிப்புறப்பரப்பு கவர்தல் அல்லது கிளர்வுறுத்தப்பட்ட பரப்பு கவர்தல்
1. இது மிக மெதுவாக நிகழ்கிறது.
2. இது அதிக தேர்ந்த செயல்முறையாகும். பரப்புப் பொருள் மற்றும் பரப்புகவர் பொருள் ஆகியவற்றின் தன்மையை பொருத்தமைகிறது.
3. அழுத்தம் அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேகமாக நிகழ்கிறது. ஆனால், இது பரப்பு கவர்தலின் அளவை மாற்றுவதில்லை .
4. வெப்பநிலையை அதிகரிக்கும்போது வேதிப் - புறப்பரப்பு கவர்தல் முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது.
5. வேதிப்புறப்பரப்பு கவர்தலில் பரப்பு பொருளுக்கும், பரப்புகவர் பொருளுக்கும் இடையே எலக்ட்ரான் இடமாற்றம் நிகழ்கிறது.
6. பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம், அதாவது 40 முதல் 400kJ/ மோல் வரை .
7. பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் ஒற்றை அடுக்கு உருவாகிறது.
8. கிளர்வு மையங்கள் என்றழைக்கப்படும் சில குறிப்பிட்ட அமைவிடங்களில் மட்டும் பரப்பு கவர்தல் நிகழ்கிறது. இது புறப்பரப்பின் பரப்பளவைப் பொருத்து அமைகிறது.
9. வேதிப்புறப்பரப்பு கவர்தலில், குறிப்பிடத்தகுந்த கிளர்வுகொள் ஆற்றல் கொண்ட கிளர்வு அணைவு உருவாதல் நிகழ்கிறது.
இயற்புறப்பரப்பு கவர்தல் அல்லது வாண்டர்வால்ஸ் பரப்பு கவர்தல்
1. இது கணப்பொழுதில் நிகழ்கிறது.
2. இது தேர்ந்த செயல்முறை அல்ல..
3. இயற்புறப்பரப்புக் கவர்ச்சியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, பரப்பு கவர்தலின் அளவும் அதிகரிக்கிறது.
4. வெப்பநிலை அதிகரிக்கும்போது இயற்பரப்புக் கவர்ச்சி குறைகிறது.
5. எலக்ட்ரான்கள். இடமாற்றம் நிகழ்வதில்லை.
6. பரப்புகவர்தல் வெப்பம் குறைவு 40 kJ/ மோல் என்ற அளவிலேயே உள்ளது.
7. பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் பல அடுக்குகள் உருவாகின்றன.
8. இது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது.
9. கிளர்வு கொள் ஆற்றல் முக்கியமற்றது.
3. வேதிப்புறப்பரப்பு கவர்தலில், வெப்பநிலை அதிகரிக்கும்போது பரப்பு கவர்தலானது முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது ஏன்?
• வேதிப்புறப்பரப்பு கவர்தலில் கிளர்வு அணைவு உருவாதலுக்கு ஆற்றல் தேவைப்படுவதால், வெப்பநிலை அதிகரிக்கும்போது முதலில் வேதிப் பரப்பு கவர்தல் அதிகரிக்கிறது.
• உயர் வெப்பநிலையில் பரப்பு கவரப்படும் பொருளின் இயக்க ஆற்றல் அதிகரித்து, அவை பரப்பிலிருந்து வெளியேறுவதால் பின்னர் வேதி பரப்பு கவர்தல் குறைகிறது.
4. NH3 அல்லது CO2 ஆகிய இரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்பு கவரப்படுகிறது? ஏன்?
• NH3 ஆனது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்பு கவரப்படுகிறது.
• காரணம் : உயர் நிலைமாறு வெப்பநிலையை கொண்டுள்ள வாயுக்கள் எளிதில் பரப்பு கவரப்படுகின்றன.
i) NH, ன் நிலைமாறு வெப்பநிலை (406K) CO2 ஐ விட (340 K) அதிகம்.
ii) NH3 ல் CO2 ஐ விட வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசை அதிகம்.
5. இயற்புறப்பரப்பு கவர்தலை காட்டிலும் வேதிப்புறப் பரப்பு கவர்தலின் பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம் ஏன்?
• இயற்புறப்பரப்பு கவர்தலில் பரப்புப் பொருளுக்கும், பரப்பு கவரப்படும் பொருளுக்கும் இடையே வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை, இருமுனை - இருமுனை இடையீடுகள், சிதைவு விசைகள் செயல்படுவதால் பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு.
• வேதிப்புறப்பரப்பு கவர்தலில், வாயு மூலக்கூறுகள் புறப்பரப்புடன் வேதிப்பிணைப்புகளை ஏற்படுத்துவதால் பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம்.
6. ஒரு திரிதல் சோதனையில், (x) எனும் கூழ்மத்தின் 10ml கரைசலானது வாலைவடிவநீர் மற்றும் 0.1M செறிவுடைய AB எனும் மின்பகுளிக் கரைசல் ஆகியவற்றை சேர்த்து அதன் கன அளவு 20mL ஆக்கப்படுகிறது. 6.6 mL AB கரைசலைக் கொண்டுள்ள அனைத்து கரைசல்களும் 5 நிமிடங் களுக்குள் வீழ்படிவாக்கப்பட்டன என கண்டறியப் பட்டுள்ளது. கூழ்மம் (X)க்கு AB யின் துகள்திரட்டு மதிப்பு என்ன?
• கூழ்மத்தின் வீழ்படிவாக்க தேவையான மிகக் குறைந்த AB யின் அளவு 6.6mL.
• எனவே AB ன் மோல்களின் எண்ணிக்கை
= 6.6 × 0.01 / 20 = 0.0033 மோல்கள்
• 0.0033 மோல்கள் அதாவது 0.0033 × 1000 = 3.3 மிலி மோல்கள் AB 1 லிட்டர் கூழ்மத்தை வீழ்படிவாக்க தேவைப்படுகிறது.
ஃகூழ்மம் X க்கு AB துகள் திரட்டு மதிப்பு = 3.3
7. வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவதற்காக கூழ்மமாக்கி சேர்க்கப்படுகிறது. இக் கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
• தகுந்த மின்பகுளிகளை சேர்ப்பதன் மூலம், வீழ்படிவாக்கப்பட்ட துகள்களை கூழ்ம நிலைக்கு மாற்ற இயலும்.
• இச்செயல்முறை கூழ்மமாக்கல் எனப்படும்.
• சேர்க்கப்பட்ட மின்பகுளி கூழ்மமாக்கும் காரணி அல்லது விரவுதல் காரணி எனப்படும்.
எ.கா:
• பொது அயனி Cl- வீழ்படிவின் மீது பரப்புக் கவரப்படுவதால் கூழ்மமாக மாறுகிறது.
• கூழ்மமாக்கும் காரணி HCI ஆகும்.
8. கூழ்மநிலையிலுள்ள Fe(OH)3 மற்றும் As2O3 ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?
• எதிரெதிரான மின்சுமைகளைக் கொண்ட கூழ்மங் களை ஒன்றாக கலக்கும்போது ஒன்றையொன்று திரிந்து போகச் செய்கின்றன.
• துகள்களின் புறப்பரப்பிலிருந்து அயனிகள் வெளி யேறுவதே இதற்கு காரணம்.
• ஒரு கூழ்மத்தின் நேரயனி மற்றொரு கூழ்மத்தின் எதிரயனியால் ஈர்க்கப்பட்டு திரிதலடைகிறது.
• Fe(OH)3 (நேர்மின் கூழ்மம்) மற்றும் As203 (எதிர்மின் கூழ்மம்) ஒன்றையொன்று ஈர்த்து திரிதலடைகின்றன.
9. கூழ்மம் மற்றும் களி ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
கூழ்மம்
1. கூழ்ம கரைசலில் நீர்மநிலை
2. பாகியல் தன்மை குறைவு.
3. வரையறுக்கப்பட்ட வடிவம் கிடையாது
களி
1. கூழ்ம கரைசலின் திண்ம (அ) பகுதியளவு திண்ம நிலையாகும்.
2. அதிக பாகியல் தன்மை
3. வரையறுக்கப்பட்ட வடிவம் உடையது.
9. கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள், கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களை விட அதிக நிலைப்புத்தன்மை வாய்ந்தவை. ஏன்?
கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள்
1. பிரிகை நிலைமைக்கும், பிரிகை ஊடகத்திற்கும் இடையே வலுவான கவர்ச்சி விசை நிலவுகிறது.
2. எனவே அதிக நிலைப்புத் தன்மையுடையவை.
கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்கள்
1. பிரிகை நிலைமைக்கும், பிரிகை ஊடகத்திற்கம் இடையே கவர்ச்சி விசைகள் ஏதுமில்லை .
எனவே குறைந்த நிலைப்புத் தன்மையுடையவை.
11. படிகாரங்கள் சேர்ப்பதால் நீர் சுத்திகரிக்கப்படுகிறது ஏன்?
• இயற்கை நீர் நிலைகளில் கிடைக்கும் களிமண் கலந்த நீர் எதிர்மின் சுமையுடைய கூழ்மக்கரைசல் ஆகும்.
• படிகாரம் நேர்மின் அயனி A13+ ஐ வழங்குவதால், களிமண்ணை வீழ்படிவாக்கி தெளிந்த நீர் கிடைக்கிறது.
• இவ்வாறு படிகாரங்களால் நீர் சுத்திகரிக்கப் படுகிறது.
12. ஒரு திண்மத்தின் மீது ஒரு வாயு மூலக்கூறுகள் பரப்பு கவரப்படுதலை பாதிக்கும் காரணிகள் யாவை?
• பரப்புப் பொருளின் தன்மை
• பரப்புக் கவர் பொருளின் தன்மை
• அழுத்தம்
• செறிவு
• வெப்பநிலை.
13. நொதிகள் என்றால் என்ன? நொதிவினைவேக மாற்றத்தின் வினைவழிமுறை பற்றி குறிப்பு வரைக.
• நொதிகள் என்பவை முப்பரிமாண அமைப்பு வினைபொருள் கொண்ட சிக்கலான புரத மூலக்கூறுகளாகும்.
• உயிரினங்களில் நிகழும் வேதிவினைகளுக்கு வினையூக்கிகளாக செயல்படுகின்றன.
• அநேகமாக கூழ்ம நிலையில் காணப்படுகின்றன
• தேர்ந்து செயலாற்றும் தன்மையுடையன.
• நொதிவினைவேக மாற்றத்தின் வினை வழிமுறை
• பின் வரும் வினைவழிமுறை முன்மொழியப் பட்டது.
நொதிவினைவேகமாற்ற வினை வழிமுறை
E + S ⇌ ES → P + E
E= நொதி S= வினைபொருள்
ES = கிளர்வு அணைவு
P = விளைபொருள்
14. வினைவேக மாற்றியின் செயல்பாடு மற்றும் தெரிவுத்திறன் பற்றி நீவிர் அறிவது என்ன?
வினைவேக மாற்றியின் செயல்பாடு
1. குறிப்பிட்ட வினையின் வேகத்தை அதிகரிக்கும் தன்மை
2. வேதிப்பரப்புக் கவர்தலை சார்ந்தது.
வினைவேக மாற்றியின் தெரிவுத்திறன்
1. பல விளைபொருள்கள் உருவாக சாத்தியமுள்ள ஒரு வினையில் குறிப்பிட்ட ஒரு விளைபொருளை உருவாக்கும் தன்மை.
15. ஜியோலைட்டுகள் வினைவேக மாற்றத்தின் சில சிறப்புப் பண்புகளை விவரி.
• ஜியோலைட்டுகள் நுண்துளைகளையுடைய, படிக வடிவமுடைய, நீரேறிய அலுமினோ சிலிக்கேட்டுகளாகும். இவை சிலிக்கான், அலுமினியம் நான்முகிகளால் ஆனவை. இயற்கையில் 50 வெவ்வேறு வகை ஜியோலைட்டுகளும், 150 தொகுப்பு ஜியோலைட்டுகளும் காணப்படுகிறது.
• எதிர்மின் சுமையை நடுநிலையாக்க H+ அல்லது Na+ போன்ற கட்டமைப்பு சாரா அயனிகள் காணப்படுகின்றன.
• பெட்ரோலிய தொழிற்சாலைகளில் உயர் ஹைட்ரோகார்பன்களை சிதைத்து பெட்ரோல், டீசல் போன்றவற்றை பெறுவதிலும் அதிகமாக பயன்படுகின்றன.
• Na+ அயனிகளைக் கொண்ட ஜியோலைட்டுகள் கார வினைவேக மாற்றிகளாக செயல்படுகின்றன.
• ஜியோலைட்டுகளின் முக்கிய பயன்களில் ஒன்று அவற்றின் வடிவ தெரிவுத் திறனாகும். ஜியோலைட்டுகளின் நுண் துளை களுக்குள் மட்டுமே வினைகள் நிகழ்கின்றன.
வினைபொருள் தெரிவுத்திறன் ;
• வினைபொருள் கலவையிலுள்ள பெரிய மூலக் கூறுகள் ஜியோலைட்கள் படிகத்தின் கிளர்வு மையங்களை சென்றடையாமல் தடுக்கப்படு கின்றன.
• இது வினைபொருள் தெரிவுத்திறன்.
இடைநிலைச் சேர்ம தெரிவுத்திறன் :
• வினையில் உருவாகும் இடைநிலைச் சேர்மம் ஜியோலைட்டுகளின் நுண்துளை அளவைவிட பெரியதாக இருந்தால் விளைபொருள் உருவாகாது.
விளைபொருள் தெரிவுத்திறன் :
• சில விளைபொருள் மூலக் கூறுகள் ஜியோ லைட்டுகள் நுண்துளைகளிலிருந்து வெளியேற இயலாத அளவிற்கு மிகப்பெரியதாக இருக்கும்போது, இந்த சிக்கல் உருவாகிறது.
16. பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.
• பால் என்பது கொழுப்பு (எண்ணெய்) நீரில் விரவியுள்ள பால்மம், கேசின் என்ற புரதம் பால்மக் காரணியாகும்.
• சருமத்தில் பூசப்படும் அநேக களிம்புகள் உயிரியல் செயல்பாடுகள் கொண்ட பொருள்கள் கலந்த எண்ணெய் நீரில் விரவுயுள்ள பால்மங்கள் ஆகும்.
• மருந்து தயாரிப்பில் பயன்படுகிறது.
• சோப்பின் தூய்மையாக்கும் செயலில் அழுக்கு அல்லது எண்ணெயுடன் சோப்பு மூலக்கூறுகள் பால்மத்தை உருவாக்குகின்றன.
17. நனைக்கப்பட்ட படிகாரத்தை தேய்க்கும்போது - இரத்தக் கசிவு நிறுத்தப்படுவது ஏன்?
• இரத்தம் என்பது அல்புமினாய்டு பொருளின் கூழ்மம் ஆகும்.
• நனைக்கப்பட்ட படிகாரம் வீழ்படிவாக்கும் காரணியாக செயல்படுகிறது.
• நனைக்கப்பட்ட படிகாரத்தை தேய்க்கும்போது கூழ்ம நிலையில் உள்ள இரத்தம் திரிதல் அடை வதால் இரத்தக்கசிவு நிறுத்தப்படுகிறது.
• நனைக்கப்பட்ட படிகாரத்தில் உள்ள அயனிகள், இரத்தத்தில் உள்ள புரத கூழ்மங்களை நடுநிலை யாக்கி திரிதலடையச் செய்வதால் இரத்தக்கசிவு நிறுத்தப்படுகிறது.
18. ஒரு பொருள் நல்ல வினைவேக மாற்றியாக திகழ பரப்பு நீக்கம் அவசியம் ஏன்?
• வினை முடிவடைந்தபின் உருவான விளை பொருள்கள் பரப்ப, நீக்கம் செய்யப்பட வேண்டும்.
• இதனால் வினைவேக மாற்றியின் பரப்பில் மேலும் வினைபடு பொருள்கள் பரப்புக் கவரப் பட இடம் உருவாகிறது.
• பரப்பு நீக்கம் நடைபெறவில்லையெனில் வினை படுபொருள்கள் பரப்புக் கவரப்பட இடம் இல்லாத காரணத்தால் வினை நடைபெறுவது தடைபடும். வினைவேகம் குறைந்துவிடும்.
• எனவே ஒரு பொருள் நல்ல வினைவேக மாற்றி யாக திகழ பரப்பு நீக்கம் அவசியம்.
19. கூற்றை பற்றி கருத்துரைக்க : கூழ்மம் என்பது ஒரு
• சேர் மமல்ல, ஆனால் அது சேர்மத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையாகும். சாதாரண உப்பு (NaCl) நீரில் கரைக்கப்பட்டால் அது ஒரு உண்மைக் கரைசல் ஆகும். (படிகப் போலிகள்)
• ஆனால் சாதாரண உப்பு பென்சீனில் கரைக்கப் பட்டால் அது ஒரு கூழ்மக் கரைசல் ஆகும். (கூழ்மம்)
• ஒரே பொருளானது துகளின் அளவைப் பொறுத்து படிகப்போலியாகவும், கூழ்மமாகவும் செயல் படுகிறது.
• ஒரு கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் துகளின் அளவு 1nm - 200nm என்ற அளவில் இருந்தால் அது ஒரு கூழ்மம் ஆகும்.
• கூழ்மம் என்பது உண்மைக் கரைசலுக்கும், தொங்கலுக்கும் இடைப்பட்ட நிலைமை ஆகும்.
• எனவே கூழ்மம் என்பது ஒரு சேர்மமல்ல, ஆனால் அது சேர்மத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையாகும்.
20. ஏதேனும் ஒரு திரிதல் முறையை விளக்குக.
• கூழ்மத் துகள்களின் துகள் திரட்டல் மற்றும் அடியில் தங்குதல் நிகழ்வானது திரிந்து போதல் எனப்படும்.
• திரிதல் மின்பகுளிகளை சேர்த்தல் மூலம் நடை பெறுகிறது.
• ஒரு எதிர்மின் அயனியானது, நேர்மின்சுமை கொண்ட கூழ்மத்தினை வீழ்படிவாக்குகிறது. இதன் நேர்மாறும் உண்மை .
• அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ளபோது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகரிக்கிறது.
• சில நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளின் வீழ்படிவாக்கும் திறனின் இறங்கு வரிசை.
A13+ > Ba2+ >Na+
[Fe(CN)6]3- > SO42- >Cl-
• 2மணி நேரத்தில், ஒரு கூழ்மக் கரைசலை வீழ்படிவாக்குவதற்கு தேவைப்படும் குறைந்த பட்ச செறிவு.
• துகள்திரட்டு மதிப்பு குறைவு எனில் வீழ்படி வாக்கும் திறன் அதிகம்.
21. மின்னாற் சவ்வூடு பரவல் பற்றி குறிப்பு வரைக.
• ஒரு கூழ்மக் கரைசல் நடுநிலைத் தன்மை கொண்டது.
• எனவே கரைசலிலுள்ள பிரிகை துகள்களின் மின் சுமைக்கு சமமான ஆனால் எதிரான மின்சுமையை ஊடகம் பெற்றிருக்கும்.
• கூழ்மத் துகள்களின் இயக்கம் தடை செய்யப் பட்டுள்ளபோது, மின்புலத்தில் கூழ்மத்துகள்கள் நகரும் திசைக்கு எதிர் திசையில் ஊடகம் நகருகிறது.
• மின்புலத்தில் பிரிகை ஊடகம் நகரும் இச்செயல் பாடு மின்னாற் சவ்வூடு பரவல் எனப்படும்.
22. வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.
• வினைவேக மாற்ற வினைகளில் சில சேர்மங்களை சேர்க்கும்போது, அவை வினைவேக மாற்றிகளின் செயல் திறனை குறைக்கவோ அல்லது முழுவதுமாக இழக்கவோ செய்கின்றன.
• இத்தகைய சேர்மங்கள் வினைவேக மாற்ற நச்சுகள் எனப்படுகின்றன.
எ.கா:
23. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கை:
• வினைவேக மாற்றிகள், குறைந்த கிளர்வு ஆற்றலைக் கொண்ட புதிய பாதையை உருவாக்குகின்றன.
• ஒரு படித்தான வினைவேக மாற்றத்தினை இக்கொள்கை விளக்குகிறது. ஒரு வினைவேகமாற்றி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்களுடன் இணைந்து ஒரு இடைநிலைச் சேர்மத்தை உருவாக்குகிறது.
• இந்த இடைநிலைச் சேர்மமானது மற்றொரு வினைபடு பொருளுடன் வினைபட்டோ அல்லது தாமாக சிதைந்தோ விளைபொருட்களை உருவாக்குகின்றன.
• மேலும் வினைவேகமாற்றியானது மீள் உருவாக்கம் பெறுகிறது.
எ.கா : பிரீடல் கிராஃப்ட் வினை .
A + B → AB → (1)
A + C → AC → (2)
24. ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
ஒருபடித்தான வினைவேக மாற்றம்
1. வினைபடு பொருட்கள், விளைபொருட்கள் மற்றும் வினைவேகமாற்றி ஆகியவை ஒரே நிலையில் காணப்படுகின்றன.
2. (எ.கா)லெட் சாம்பர் முறை
2SO2 + O2 + [NO] → 2SO3 + [NO]
SO2, O2, SO3, NO ஆகியன வாயு நிலையில் உள்ளன.
பலபடித்தான வினைவேக மாற்றம்
1. வினைபடுபொருட்கள் அல்லது விளைபொருட்கள் உள்ள அதே நிலைமையில் இல்லாமல் வினைவேக மாற்றி வேறு நிலைமையில் இருக்கும்.
• இது தொடர்பு வினைவேக மாற்றம் எனப்படும்.
• வினைவேக மாற்றியானது நன்கு தூளாக்கப்பட்ட உலோக நிலையிலோ அல்லது கம்பிவலை வடிவிலோ பயன்படுத்தப்படுகிறது.
2. (எ.கா) தொடுமுறை
SO2 + O2 (Pt அல்லது / V2O5 )2SO3
SO2 O2 SO3 வாயு நிலையில் உள்ளன. Pt அல்லது V2O5 திடநிலையில் உள்ளன.
25. வினைவேக மாற்றம் பற்றிய பரப்பு கவர்தல் கொள்கையை விவரி,
• லாங்மியூர் என்பவர் பலபடித்தான வினைவேகமாற்றத்தினை பரப்பு கவர்தல் கொள்கை மூலம் விளக்கினார்.
• வினைபடு மூலக்கூறுகள், வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்படுவதால் இதை தொடர்பு வினைவேக மாற்றம் எனலாம்.
• வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்பட்டு கிளர்வு அணைவை உருவாக்குகின்றன.
• இவை உடனே சிதைந்து விளைபொருட்களை தருகின்றன.
• பலபடித்தான வினைவேக மாற்றத்தின் படிநிலைகள்.
1. வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பை நோக்கி நகருகின்றன.
2. வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பில பரப்பு கவரப்படுகின்றன.
3. பரப்பு கவரப்பட்ட வினைபடு மூலக்கூறுகள் கிளர்வுற்று "கிளர்வு அணைவு” உருவாகிறது. இந்த கிளர்வு அணைவு சிதைவடைந்து,
4. விளைபொருட்களை உருவாக்குகின்றன. விளைபொருள் மூலக்கூறுகள் பரப்பு நீக்கம் அடைகின்றன.
5. விளை பொருளானது வினைவேக மாற்றியின் புறப்பரப்பை விட்டு விலகிச் செல்கின்றன.