பொருளியல் - மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயைபு | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயைபு
இந்திய
பொருளாதாரம் பரவலாக மூன்று துறைகளாகப் பிரிக்கப்படுகிறது.
வேளாண்மைத் துறையை முதன்மைத் துறை எனவும் அழைக்கலாம்.
இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும். எ.கா.
கால்நடை பண்ணைகள், மீன் பிடித்தல், சுரங்கங்கள், காடுகள் வளர்த்தல், நிலக்கரி போன்ற மூலப் பொருள்களை உற்பத்தி செய்தல்.
தொழில் துறையை இரண்டாம் துறை எனவும் அழைக்கலாம். மூலப்பொருள்களை
மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எ.கா.
இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித் தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட்,
காகிதம், பெட்ரோலியம், ஆட்டோமொபைல்ஸ்
மற்றும் பிற சிறுதொழில்கள் ஆகும்.
பணிகள் துறையை மூன்றாம் துறை எனவும் அழைக்கலாம்.
அவைகள் அரசு, அறிவியல் ஆராய்ச்சி, போக்குவரத்து,
வர்த்தகம், தபால் மற்றும் தந்தி, வங்கி, கல்வி, பொழுதுபோக்கு,
சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவைகளாகும். 20 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நிபுணர்கள் பாரம்பரிய மூன்றாம் நிலை பணிகளை
“நான்காம் நிலை” மற்றும் “ஐந்தாம் நிலை” பணிகள் துறைகளிலிருந்து மேலும்
வேறுபடுத்திட முடியும் என்றனர்.