மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி | ஓர் அறிமுகம் - நாட்டு வருமானம் | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
நாட்டு வருமானம்
நாட்டு
வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும்
பணிகளின் மொத்த மதிப்பாகும்.
பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.
மொத்த
நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்)
உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள்
+ பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP
= C + I + G + (X - M) + NFIA
C
- நுகர்வோர்
I
- முதலீட்டாளர்
G
- அரசு செலவுகள்
X
- M- ஏற்றுமதி - இறக்குமதி
NFIA
- வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.
ஒரு
ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட
வெளியீடு (பண்டங்கள்
+ பணிகள்) களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு
உற்பத்தியாகும்.
மொத்த
நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண
மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
நிகர
நாட்டு உற்பத்தி
(NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) - தேய்மானம்.
நிகர
உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து
தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து
பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர
உள்நாட்டு உற்பத்தி
(NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) - தேய்மானம்.
தலா
வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். நாட்டு வருமானத்தை
மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
நாட்டு
வருமானம் = தலா வருமானம் / மக்கள்
தொகை
1867-68இல் முதன் முதலாக தாதாபாய் நௌரோஜி “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத
இந்திய ஆட்சியும்" (Poverty and Un - British Rule in India) என்ற தனது புத்தகத்தில் தனி நபர் வருமானத்தைப் பற்றி கூறியுள்ளார்.
நேர்முக
வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து
ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.
தனி
நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற
வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.
இதனை
இவ்வாறு அழைக்கலாம்.
DPI
= தனிப்பட்ட வருமானம் - நேர்முகவரி (நுகர்வு முறையில் DI = நுகர்வுச் செலவு + சேமிப்பு )