மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி | ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
மொத்த
உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
• ஓர் ஆண்டில் ஒரு
நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பே
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
• இந்திய பொருளாதாரத்தை
மூன்று துறைகளாக வகைப்படுத்தலாம். அவை வேளாண்துறை தொழில்கள் துறை மற்றும் பணிகள்
துறை.
• தேய்மானம் : அதிக
பயன்பாட்டின் காரணமாக பொருள்கள் தேய்மானம் அடைதல் அல்லது பழமையாதல் போன்றவைகளால்
சொத்தின் பணமதிப்பு குறைதலாகும்.
• வருமானம் : ஒரு
குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பாதித்த அல்லது சம்பாதிக்காத பணம் அல்லது பிற
வருவாய்களாகும்.
• மொத்த மதிப்பு கூடுதல் (GVA): ஒரு
பொருளாதாரத்தில் தொழில் அல்லது சேவைத் துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்
மற்றும் பணிகளின் மதிப்பாகும்.
தேய்மானம் : Depreciation மதிப்பு
இழக்கும் முறை
இடைநிலை : Intermediate இரண்டு
சார்பு விஷயங்களின் இடையே இருப்பு
சந்தை விலை : Market Price ஒரு
பொருளை வாங்க கொடுக்கும் விலை
இறுதி பொருள்கள் : Final Goods எந்த
பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வோருக்கு விருப்பம் அல்லது தேவை
திருப்தியளிக்கிதோ அதை நுகர்வு பண்டம் அல்லது இறுதி நிலை பண்டம் என்பர்.
கலவை : Composition ஏதாவது
பொருள்களின் தன்மை அல்லது அமைப்பின் தன்மை ஒரு முழு அல்லது கலவையை உருவாக்கிய வழி.
பங்களிப்பு : Contribution பொதுவான
நிதிக்கு பரிசு அல்லது கட்டணம் செலுத்துதல் அல்லது சேகரித்தல்.
தடுமாற்றத்தினை : Staggering தொடர்ந்து
இருப்பது அல்லது நிச்சயமற்ற அல்லது ஆபத்தான முறையில் தொடர.