மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
அலகு 1
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
பயிற்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. GNP யின் சமம்
அ)
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
ஆ)
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட
நிகர சொத்து வருமானம்
ஈ)
NNP
மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
[விடை: (இ)
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்]
2. நாட்டு வருமானம் அளவிடுவது
அ)
பணத்தின் மொத்த மதிப்பு
ஆ)
உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
[விடை: (ஈ)
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு]
3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது
அ) வேளாண்மை
ஆ) தானியங்கள்
இ)
வர்த்தகம்
ஈ) வங்கி
[விடை: (அ)
வேளாண்மை]
4. ------------------ முறையில் ஒவ்வொரு இடைநிலை
பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
அ)
செலவு முறை
ஆ) மதிப்பு கூட்டு முறை
இ)
வருமான முறை
ஈ) நாட்டு வருமானம்
[விடை: (ஆ)
மதிப்பு கூட்டு முறை]
5. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?
அ)
வேளாண் துறை
ஆ) தொழில் துறை
இ) பணிகள் துறை
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
[விடை: (இ)
பணிகள் துறை]
6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல்
2018-19 இல் ------------------ லட்சம்
கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அ)
91.06
ஆ) 92.26
இ)
80.07
ஈ)
98.29
[விடை : (ஆ) 92.26]
7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ------------------ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.
அ) 1 வது
ஆ) 3 வது
இ) 4 வது
ஈ) 2 வது
[விடை : (ஈ) 2 வது]
8. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ------------------ ஆண்டுகள் ஆகும்.
அ) 65
ஆ) 60
இ) 70
ஈ) 55
[விடை : (அ) 65]
9. கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?
அ) நீர்பாசன கொள்கை
ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
கொள்கை
இ) நில சீர்திருத்தக் கொள்கை
ஈ) கூலிக் கொள்கை
[விடை: (ஆ)
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை]
10. இந்திய பொருளாதாரம் என்பது
அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்
ஆ) தோன்றும் பொருளாதாரம்
இ) இணை பொருளாதாரம்
ஈ) அனைத்தும் சரி
[விடை: (ஈ)
அனைத்தும் சரி]
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.
இந்தியாவில் வேளாண் துறை முதன்மை துறையாகும்.
2.
தலா வருமானம்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
3.
இரண்டாம் துறையை வேறுவிதமான தொழில் துறை என அழைக்கலாம்.
III. பொருத்துக.
1.
மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர் - நாட்டு வருமானம் / மக்கள் தொகை
2.
விலைக் கொள்கை - மொத்த நாட்டு உற்பத்தி
3.
GST
- தொழில் துறை
4.
தலா வருமானம் - வேளாண்மை
5.
C
+ I +G + ( X - M ) - பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி
விடை:
1. மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர்
- தொழில் துறை
2. விலைக் கொள்கை - வேளாண்மை
3. GST - பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி
4. தலா வருமானம் - நாட்டு வருமானம்
/ மக்கள் தொகை
5. C + I +G + ( X - M ) - மொத்த நாட்டு உற்பத்தி