Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | குறுகிய விடை தருக.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction

   Posted On :  25.07.2022 02:05 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

குறுகிய விடை தருக.

சமூக அறிவியல் : பொருளியல் : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: குறுகிய விடை தருக.

IV. குறுகிய விடை தருக.

 

1. நாட்டு வருமானம் - வரையறு.

• நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.

• பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

 

2. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்) களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

 

3. GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.

• பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.

• பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.

• உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.

• வாங்கும் திறன் மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.

• பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.

• பொருளாதார திட்டமிட வழிகாட்டியாகவும் பயன்படுகிறது.

 

4. தனி நபர் வருமானம் என்றால் என்ன?

• தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.

• நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.

• தலா வருமானம் = நாட்டு வருமானம் / மக்கள் தொகை

 

5. மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு.

• மதிப்பு கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால், இறுதிப் பண்டத்தின் மதிப்பை அளவிடலாம்.

• உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

டீத்தூள் + பால் + சர்க்கரை = தேனீர்

இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு

 

6. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.

• வேளாண் கொள்கை

• தொழில் துறை கொள்கை 

• புதிய பொருளாதாரக் கொள்கை

• இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

• உள்நாட்டு வர்த்தகக் கொள்கை

• வேலைவாய்ப்புக் கொள்கை

• நாணய மற்றும் வங்கிக் கொள்கை

• நிதி மற்றும் பணவியல் செய்தது.

• கூலிக் கொள்கை

 

7. சிறு குறிப்பு வரைக.

1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

• ‘GNH’ என்ற வார்த்தையை 1972 இல் உருவாக்கியவர் ஜிகமே சிங்கயே வாங்ணுக் என்ற பூட்டான் அரசர்.

• உளவியல் நலன், உடல்நலம், நேரப் பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத்தன்மை, நல்ல ஆட்சித்திறன், சமூகத்தின் உயர்வு, சுற்றுச் சூழல் பன்முகத்தன்மை, வாழ்க்கைத்தரம் ஆகியவை GNH இன் 9 களங்களாகக் கருதப்படுகிறது.

2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

• மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப்-உல். ஹிக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது

• பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம் GDP யின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.

 

Tags : Gross Domestic Product and its Growth: an Introduction | Economics | Social Science மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction : Give short answer Gross Domestic Product and its Growth: an Introduction | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் : குறுகிய விடை தருக. - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்