பொருளியல் - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
மொத்த
உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
• மொத்த உள்நாட்டு உற்பத்தியை பற்றி தெரிந்துகொள்ளுதல்
• நாட்டு வருமானத்தின் பல்வேறு நடவடிக்கைகளை புரிந்துகொள்ளுதல்
• மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அமைப்பை புரிந்துகொள்ளுதல்
• மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளின்
பங்களிப்பை தெரிந்துகொள்ளுதல்
• பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் அதன் வேறுபாடுகள் பற்றி அறிந்து கொள்ளுதல்
• மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு
அடிப்படையில் வளர்ச்சி பாதைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்
• மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார கொள்கைகளின் வளர்ச்சிப் பற்றி புரிந்து கொள்ளுதல்
இந்தியா
எவ்வாறு செயல்படுகிறது என்பதனை
GDP விளக்குகிறது அதனால், GDP என்றால் என்ன என்பதைப்
பற்றி முதலில் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு
ஹோட்டலில் என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்க. இரண்டு இட்லி மற்றும் ஒரு கோப்பை தேனீருக்கு நீங்கள்
உத்தரவு இடுகிறீர்கள். இட்லி மற்றும் தேனீரை யாரோ ஒருவர் உற்பத்தி
செய்யலாம் மற்றும் யாராவது கூட அதை உங்களுக்கு சேவையாக செய்யலாம்.
வெளிப்படையாக
இட்லி மற்றும் தேனீர் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. அவைகளை நீங்கள் தொடக்கூடியவை,
பார்க்கக்கூடியவை மற்றும் தொட்டு உணரக்கூடியவைகளாகும் தொடக்கூடிய பொருள்களை
“பண்டங்கள்" என்று பொருளியல் அறிஞர்கள்
அழைக்கின்றனர். இந்த பண்டங்கள் இலவசம் அல்ல, ஏனெனில் அதற்கு பணம் செலுத்த வேண்டும்.
தொடக்கூடிய
பொருள்களை, பண்டங்கள் என்று அழைத்தாலும், சமையல்காரர்கள் செய்து
முடித்த வேலை மற்றும் அந்த உணவைப் பரிமாறும் மக்கள், சமையல் மற்றும் சேவை
நடவடிக்கைகளை பண்டங்கள் போல் யாரும் தொட்டு உணரக் கூடியது அல்ல. ஆனால், நீங்கள் உணவினை உண்டு அனுபவிக்கலாம். பொருளியல் வல்லுநர்கள் இந்த நடவடிக்கையை "பணிகள்"
என்று அழைக்கின்றனர்.
ஒவ்வொரு
நாளும் ஹோட்டலில் என்ன நடக்கிறதோ அதே போல் நாடு முழுவதும் நடக்கிறது. பண்டங்கள் மற்றும்
பணிகள் உற்பத்தி செய்யப்பட்டு அதனை நாம் பணம் செலுத்தி பெறுகின்றோம். இவற்றையே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவிடுகிறது.
ஒரு
குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும்
பணிகளின் அங்காடி மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்கிறோம்.
GDP
= C + I + G + (X - M)
C-
நுகர்வோர் I - முதலீட்டாளர்
G
- அரசு செலவுகள் (X-M) ஏற்றுமதி - இறக்குமதி
இந்த
வரையறையில் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதாகும்.
பண்டங்கள்
மற்றும் பணிகள்: பண்டங்கள் என்பது தொடக்
கூடிய பொருளும், பணிகள் என்பது தொட்டு உணர முடியாததுமான நடவடிக்கைகள்
என்று இப்போது உங்களுக்கு தெரியும்.
அங்காடி மதிப்பு:
அங்காடியில் விற்கக்
கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை.
இறுதி நிலை பண்டங்கள் மற்றும் பணிகள்
"இறுதி நிலை பண்டங்கள் மற்றும் பணிகள்" என்பது நுகர்வுக்காக
அல்லது பயன்பாட்டுக்காக உள்ள பண்டங்கள் மற்றும் பணிகள் ஆகும். எந்த பண்டங்கள் மற்றும் பணிகள் மற்றொரு பண்ட பணிகளை உற்பத்தி செய்ய பயன்படுகிறதோ
மற்றும் மற்ற பண்ட பணிகளை உற்பத்தி செய்ய ஒரு பகுதியாகிறதோ அதை “இடை நிலை பண்டங்கள்" என்று டைலர் கோவன் மற்றும்
அலெக்ஸ் டாபர்ராக் போன்ற பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் இறுதி நிலை பண்டங்கள் மட்டும் சேர்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி
கணக்கிட இடைநிலை பண்டங்களை கணக்கில் எடுப்பதில்லை. ஏனெனில் அவற்றின்
மதிப்பு இறுதி நிலை பண்டத்தில் சேர்க்கப்படுகிறது. ஆகவே இடை நிலை
பண்டத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால், அதன் விளைவு “இரு முறை கணக்கிடுதல்” எனப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஹோட்டலில் வாங்கும்
ஒரு கோப்பை தேனீர் (Tea) இறுதி நிலை பண்டமாகும். ஏனெனில் இது நுகரப்படக்கூடியது. வேறு எந்த பொருளின் பகுதியாக
இருக்காது. ஆகவே ஒரு கோப்பை தேனீரின் அங்காடி மதிப்பு இறுதிப் பண்டமாக இருப்பதால் அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துள்ளனர். தேனீரில் கலக்கப்பட்ட சர்க்கரை ஒரு இடைநிலை பண்டம். இது
தேனீர் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டு தேனீரின் ஒரு பகுதியாக இருக்கிறது.
ஒரு கோப்பை தேனீரின் விலை ₹10/- என்றால் அதில்
சர்க்கரையின் மதிப்பு ₹2/-. ஆகவே ஒரு கோப்பை தேனீரின் விலையில்,
ஒரு தேக்கரண்டி சர்க்கரையின் விலை ₹2/- சேர்க்கப்பட்டுள்ளது.
சர்க்கரையின் மதிப்பை GDPயில் கூட்டினால் ஒரு தேக்கரண்டி
சர்க்கரை, மீண்டும் ஒரு கோப்பை தேனீர் என இருமுறை கணக்கிடப்படும்.
இதை “இரு முறை கணக்கிடுதல்” என்பர். இதை தவிர்ப்பதற்கு இடைநிலை பண்டமான சர்க்கரையை
GDPயில் சேர்ப்பதில்லை.