மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
V. விரிவான விடை தருக.
1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு
கருத்துக்களை விவரி.
நாட்டு வருமானத்தை அளவிட தொடர்புடைய பல்வேறு கருத்துக்கள்:
1. மொத்த நாட்டு உற்பத்தி (GNP):
• மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில்
(ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட
வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்)
மதிப்பைக் குறிக்கும்.
• வெளிநாட்டு முதலீடு மூலம்
ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
2. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால்
உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள்
+ பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு
உற்பத்தியாகும்.
3. நிகர நாட்டு உற்பத்தி (NNP):
• மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய
பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
• நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) - தேய்மானம்.
4. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):
• நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு
பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து
தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து
பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
• நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.
5. தலா வருமானம் (PCI):
• தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
• நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம்
பெறப்படுகிறது.
• தலா வருமானம் = நாட்டு வருமானம்
/ மக்கள் தொகை
6. தனிப்பட்ட வருமானம் (PI)
• நேர்முக வரிவிதிப்பிற்கு தனி நபர்கள் மற்றும்
ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த
பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.
7. செலவிடத் தகுதியான வருமானம் (DI):
• தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு
செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.
• DPI = தனிப்பட்ட வருமானம்
- நேர்முக வரி
(நுகர்வு முறையில் DI= நுகர்வுச்
செலவு + சேமிப்பு)
2. GDP கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
1. செலவின முறை:
• இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில்
ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப் பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின்
கூட்டுத்தொகையேயாகும்.
• Y = C + I + G + ( X – M )
2. வருமான முறை:
• பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள்
மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.
• வருமானமுறையில் GDP ஐக் கணக்கிடும்போது
வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்
3. மதிப்பு கூட்டு முறை:
• மதிப்புக் கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால்
இறுதிப் பண்டத்தின் மதிப்பை அளவிடலாம்.
• உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை
சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி
செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.
மதிப்புக் கூட்டு முறை:
டீத்தூள் + பால் + சர்க்கரை = தேனீர்
இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு
3. இந்தியாவில் GDPயில் பல்வேறு துறைகளின்
பங்கினை விவரி.
1. முதன்மைத் துறை (விவசாயத்துறை):
• வேளாண்மைத் துறையை முதன்மைத்துறை எனவும் அழைக்கலாம்.
• இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் காடுகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும்.
• இவை, கால்நடை பண்ணைகள்,
மீன் பிடித்தல், சுரங்கங்கள், காடுகள் வளர்த்தல், நிலக்கரி போன்ற மூலப்பொருட்களை உற்பத்தி
செய்கிறது.
2. இரண்டாம் துறை (தொழில் துறை)
• தொழில்துறையை இரண்டாம் துறை எனவும் அழைக்கலாம். மூலப்பொருட்களை மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும்
பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
• இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித்
தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட், காகிதம் பெட்ரோலியம், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பிற சிறுதொழில்கள் ஆகும்.
3. மூன்றாம் துறை (பணிகள் துறை):
பணிகள் துறையை மூன்றாம் துறை எனவும் அழைக்கலாம். அவைகள் அரசு, அறிவியல் ஆராய்ச்சி,
போக்குவரத்து, தபால் மற்றும் தந்தி, வங்கி, கல்வி, பொழுதுபோக்கு,
சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவைகளாகும்.
4. பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள
ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.
பொருளாதார வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் ஒப்பீடு
பொருளாதார வளர்ச்சி
கருத்து : பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து.
அணுகுமுறை இயல்பு : அளவின் இயல்பு.
காலவரம்பு : இயற்கையில் குறுகிய காலத்தை உடையது.
பொருந்தும் தன்மை : வளர்ந்த நாடுகள்.
நிகழ்வின் அதிர்வெண் : ஒரு குறிப்பிட்ட காலம்.
பொருளாதார முன்னேற்றம்
கருத்து : பொருளாதார முன்னேற்றம் ஒரு "பரந்த கருத்து”.
அணுகுமுறை இயல்பு : தரத்தின் இயல்பு.
காலவரம்பு : இயற்கையில் நீண்ட காலத்தை உடையது.
பொருந்தும் தன்மை : வளர்ந்து வருகின்ற நாடுகள்.
நிகழ்வின் அதிர்வெண் : தொடர்ச்சியான செயல்முறை.
5. கீழ்க்கண்ட பொருளாதார கொள்கைகளை விவரி.
1) வேளாண் கொள்கை
2) தொழிற் கொள்கை
3) புதிய பொருளாதார கொள்கை
1. வேளாண் கொள்கை
• உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருட்கள்
பற்றிய அரசின் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும்.
• சில பரவலான கருப்பொருள்கள் இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
உள்நாட்டு பொருட்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை
வேளாண் கொள்கையில் அடங்கும்.
2. தொழிற்கொள்கை:
• தொழில் துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான
அச்சமாகும். இது வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
• ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில்
பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது.
• உண்மையில், தொழில்துறை வளர்ச்சி,
விவசாயத்துறை மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன.
• இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
3. புதிய பொருளாதார கொள்கை:
• 1990 களின் ஆரம்பத்தில்
இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது.
• இந்த புதிய பொருளாதார சீர்திருத்தம் பொதுவாக LPG அல்லது தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல்
மற்றும் உலகமயமாக்கல் மாதிரி என அழைக்கப்படுகிறது.
• இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஓர் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றமடையச்
செய்கிறது.