மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள், - மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
நாட்டில்
உற்பத்தி செய்யப்பட்டது
இந்தியாவில்
உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பே இந்தியாவின் GDP என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக
காஷ்மீர் இந்தியாவில் உள்ளதால்,
காஷ்மீரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிளின் அங்காடி மதிப்பு
GDPயில் சேர்க்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில்
உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிளின் அங்காடி மதிப்பு, இந்தியாவின்
அங்காடியில் விற்பனை செய்தாலும், அதை GDPயில் சேர்ப்பதில்லை, ஏனெனில் கலிபோர்னியா அமெரிக்காவில்
உள்ளது.
ஒரு
காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது
ஒரு
குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டம் மற்றும் பணிகளின்
அங்காடி மதிப்பே,
ஒரு நாட்டின் GDP யாகும். முந்தைய காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகளை சேர்த்துக் கொள்வதில்லை.
உங்களுக்குத் தெரியுமா?
1934ஆம் ஆண்டில் சைமன் குஸ்நட் என்பவரால் GDPயின் நவீன கருத்து
முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
இந்த
முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில்
உற்பத்தி செய்த அனைத்து இறுதிப் பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத்
தொகையேயாகும்.
Y = C + T + G + (X - M)
பண்டங்கள்
மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை
கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது. வருமான முறையில்
GDPஐ கணக்கிடும்போது
வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.
"இறுதிப்பண்டம்" என்பது ஹோட்டலில் ஒரு கோப்பை தேனீர்
(Tea) உங்களுக்கு வழங்கப்படுவதாகும். அதை தயாரிக்க
பயன்படுத்தப்படும் டீதூள், பால் மற்றும் சர்க்கரை “இடைநிலை பண்டங்கள்" ஆகும். ஒரு கோப்பை தேனீர் இறுதிப் பண்டமாக மாறுவதற்கு இவைகள் ஒரு பகுதியாக அமைகிறது.
ஒரு கோப்பை தேனீர் தயாரிக்க பயன்படுத்திய ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின்
மதிப்பைக் கூட்டினால், தேனீரின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை
பண்டங்களின்
மதிப்பை சேர்க்கும் பொழுது,
பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு
கிடைக்கிறது.
மதிப்புக்
கூட்டு முறை
டீதூள் + பால் + சர்க்கரை = தேனீர்
இடைநிலை
பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு
1. பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது...
2.
பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
3.
உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு
பயன்படுகிறது.
4.
வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
5.
பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள
பயன்படுகின்றது.
6.
பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.
1. GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை
சந்தையில்
விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு
மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும். பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு செய்யும்
பணிகள் / சேவைகள் மிக முக்கியமானது. ஆனால்,
அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை. ஏனெனில், அது சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை.
இது போலவே, சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது. இதற்கு சந்தை மதிப்பு
இல்லை. ஆகவே, இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
வரம்புக்கு வருவதில்லை.
1970களில் பள்ளிகள் மற்றும் வங்கிகளில் பந்துமுனை பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
ஏனென்றால், இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிக தரமற்ற
பொருளாக இருந்தது. அதன் பின்னர், இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட பந்துமுனை பேனாக்களின் தரம் மேம்படுத்தப்பட்டதால், அவற்றின் உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. எனவே, பண்டத்தினுடைய தரம் என்பது மிக முக்கியமானதாகும்.
ஆனால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுவதில்லை.
ஒரு
நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவாக வளரலாம். ஆனால் வருமானம் சமனற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இதனால் ஒரு சிறிய சதவீத மக்களே பயன் அடைகிறார்கள்.
GDP,
மிகவும் குறைந்த சுகாதார நிலை, மக்கள் ஜனநாயகமற்ற
அரசியல் அமைப்பு, தற்கொலை விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட தனிநபர் வருமானத்துடன் கைகோர்த்து செல்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
GDPயின் மதிப்பீடு புள்ளியியல் துறை அமைச்சரவையின் கீழேயுள்ள மத்திய
புள்ளியியல் அமைப்பு
(CSO), GDP சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாக்கிறது. தொழிற்துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி தொழில்துறை உற்பத்தி
குறியீடு (IIP), நுகர்வோர் விலை குறியீடு (CPI) போன்ற குறியீடுகளை வெளியிடுகிறது.