மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி | பொருளியல் | - பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction
பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர் அம்சமாகும். ‘பொருளாதார வளர்ச்சி மனிதனின் பொருள்சார் தேவைக்கு மட்டும் கவனம்
செலுத்துகிறது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த
வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்”.
ஒரு பொருளாதாரத்தில் அல்லது நாட்டின் உற்பத்தியில்
அதன் குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உயர்வு பணமதிப்பினால்
அளவிடப்பட்ட அளவு கோல் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), மொத்த தேசிய உற்பத்தி (GNP) ஆகிய இரண்டும் பொருளாதார
வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவுகோல், மேலும் ஒரு
பொருளாதாரத்தின் உண்மையான அளவை கணக்கிட இது உதவுகிறது.
ஒரு பொருளாதாரத்தின் பரந்த முறையில் தெளிவான
உருவத்தை பொருளாதார முன்னேற்றம் காண்பிக்கிறது. உற்பத்தி நிலையை அல்லது
பொருளாதாரத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவது, மக்களின்
வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது ஆகியவை இதில் அடங்கும். இது உற்பத்தி அளவு
அதிகரிப்பதை மட்டுமில்லாமல், சமூக பொருளாதார காரணிகளுக்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தொழில் நுட்ப மேம்பாடு, தொழிலாளர்
சீர்திருத்தம், வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவது, பொருளாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய தரமான அளவுகளை
அளப்பதே பொருளாதார முன்னேற்றமாகும்.
ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை
அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (HDI) சரியானதாகும்.