Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல் - வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction

   Posted On :  27.07.2022 05:36 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு

இந்தியா தன் வளர்ச்சி பாதையில் முதலாவதாக நெருக்கமான வர்த்தகக் கொள்கையை எடுத்துக் கொண்டது. இது உள்நாட்டு தொழில்களுக்கு ஒரு உந்துதலையும், வெளிநாட்டு பொருள்களையும், நிறுவனங்களையும் சார்ந்திருத்தலைக் குறைக்கும் நிலையையும் ஏற்படுத்தியது.

வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு 

இந்தியா தன் வளர்ச்சி பாதையில் முதலாவதாக நெருக்கமான வர்த்தகக் கொள்கையை எடுத்துக் கொண்டது. இது உள்நாட்டு தொழில்களுக்கு ஒரு உந்துதலையும், வெளிநாட்டு பொருள்களையும், நிறுவனங்களையும் சார்ந்திருத்தலைக் குறைக்கும் நிலையையும் ஏற்படுத்தியது. இந்தியா எல்லைகளைத் திறந்த வர்த்தகத்தை ஏற்க முடிவு செய்து, அதன் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய பொருளாதாரத்திற்குள் அனுமதிப்பதன் மூலம் 1991 ஆம் ஆண்டு வரை இந்த பார்வை தொடர்ந்து.

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டது. இவை அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வேலைவாய்ப்பினை அதிகரித்து அதன் மூலம் வேலை வாய்ப்பு பற்றாக்குறையை நீக்குதல் ஆகியவற்றை மேற்கொண்டது.

வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவை இந்திய வளர்ச்சிப் பாதையின் ஒரு பகுதியாகும்.

பொதுத் துறைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கடுமையான ஒழுங்குமுறை மற்றும் தரநிலைக்கு உட்பட்டவை ஆயின. அரசாங்கமானது மக்களின் ஒரே பாதுகாப்பாளராகவும் சமூக நலத்திற்காகவும் செயல்படும் என்றும் நம்பப்பட்டது.

இந்தியாவில் கடந்த இரண்டு சகாப்தங்களாக GDP யின் நிலையான அதிக வளர்ச்சியால் தனிநபர் வருமானம் அதிகரித்தும், முழு வறுமை குறைந்தும் காணப்படுகின்றன. 12 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா தனி நபர் வருமானத்தில் நடுத்தர வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது.

பிறப்பின் போது எதிர்ப்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் 65 ஆண்டுகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட 44% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். 15 வயதும் அதற்கு மேலும் உள்ள மக்கள் தொகையில் 63 % பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இது ஒப்பீட்டளவில் குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளில் 71% ஆகும்.

மற்ற பிற நாடுகளை விட, இந்தியா வெவ்வேறான வளர்ச்சி பாதையை பின்பற்றுகிறது.


இந்திய முன்னேற்றத்தை ஆதாரிக்கும் காரணிகள்

இந்தியாவில் 35 வயதிற்கு உட்பட்ட உழைக்கும் வயதில் வேகமாக வளரும் மக்கள் தொகையில் 700 மில்லியன் பேர் உள்ளனர். அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான மக்கள் தொகை குறைவாக உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை மாற்றத்தில், கடந்த இரண்டு சகாப்தங்களாக உழைக்கும் வயது மக்களின் பங்கு 58% லிருந்து 64% ஆக உயர்ந்துள்ளது.


மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)


மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப் உல் ஹக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDPயின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு, வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.

UNDPயில் வெளியிடப்பட்ட சமீபத்தில் மனித வளர்ச்சி மதிப்பீடுகளில் இந்தியா 189 நாடுகளில் 130 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என வெளியிட்டுள்ளது. 1990 – 2017 ன் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் HDI யின் மதிப்பு 0.427 லிருந்து 0.640 ஆக உயர்ந்தது. இது கிட்டத்திட்ட 50 சதவீதம் அதிகரித்து, மில்லியன் மக்களின் வறுமையை போக்கி நாட்டின் குறிப்பிடத்தக்க குறியீடாக உள்ளது.

இந்தியா கடுமையான சட்ட முறையையும், அதிகமான ஆங்கில மொழி பேசுபவர்களையும் கொண்டுள்ளது. மேலும், தகவல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நிறுவனங்களிடமிருந்து உள்நோக்கி முதலீடுகளை ஈர்க்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய மற்றும் கவர்ச்சிகரமான வெற்றியை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, உலகளாவிய மென்பொருள் வணிகங்களுக்கான ஒரு மையமாக பெங்களூரின் விரைவான தோற்றம் சாட்சியாக உள்ளது.


Tags : Gross Domestic Product | Economics மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction : Developmental Path based on GDP and Employment Gross Domestic Product | Economics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம் : வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு - மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்