Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | கால்வானிக் மின்கலம் குறியீடு

மின் வேதியியல் - கால்வானிக் மின்கலம் குறியீடு | 12th Chemistry : UNIT 9 : Electro Chemistry

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 9 : மின் வேதியியல்

கால்வானிக் மின்கலம் குறியீடு

நேர்மின்முனை அரை மின்கலமானது உப்புப்பாலத்திற்கு இடது புறத்திலும், எதிர்மின்முனை அரை மின்கலமானது உப்புப்பாலத்திற்கு வலது புறத்திலும் எழுதப்படுகின்றன. நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகள் முறையே இடது ஓரத்திலும், வலது ஓரத்திலும் எழுதப்படுகின்றன.

கால்வானிக் மின்கலம் குறியீடு

கால்வானிக் மின்கலமானது மின்கல குறியீட்டின் மூலம் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக டேனியல் மின்கலமானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

Zn (s) Zn2+ (aq) || Cu2+ (aq) |Cu (s)

மேற்காண் குறியீட்டில், ஒற்றை செங்குத்துக் கோடானது (│) நிலைமை எல்லையையும், இரட்டை செங்குத்து கோடானது (||) உப்புப் பாலத்தையும் குறிப்பிடுகிறது.

நேர்மின்முனை அரை மின்கலமானது உப்புப்பாலத்திற்கு இடது புறத்திலும், எதிர்மின்முனை அரை மின்கலமானது உப்புப்பாலத்திற்கு வலது புறத்திலும் எழுதப்படுகின்றன.

நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகள் முறையே இடது ஓரத்திலும், வலது ஓரத்திலும் எழுதப்படுகின்றன.

மின்கலத்தின் emf மதிப்பானது மின்கல குறியீட்டின் வலது புறத்தில் எழுதப்படுகிறது.


எடுத்துக்காட்டு

கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

2 Cr (s) + 3Cu2+ (aq) → 2Cr3+ (aq) + 3Cu (s)

மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மேலும் அரை வினைகளை எழுதுக

நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்: 2Cr (s) → 2Cr3+ (aq)  + 6e-                  ....(1)

எதிர்மின்வாய் ஒடுக்கம்: 3Cu2+ (aq) + 6e- → 3 Cu (s)      ..... (2)

மின்கலக் குறியீடு

Cr (s) | Cr3+ (aq) || Cu2+ (aq) | Cu(s)

Tags : Electro Chemistry மின் வேதியியல்.
12th Chemistry : UNIT 9 : Electro Chemistry : Galvanic cell notation Electro Chemistry in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 9 : மின் வேதியியல் : கால்வானிக் மின்கலம் குறியீடு - மின் வேதியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 9 : மின் வேதியியல்