லென்சுகள்
இரு பரப்புக்களுக்கு இடைப்பட்ட
ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் 'லென்சு’ எனப்படும். இப்பரப்புகள் இரண்டும் கோளகப்
பரப்புகளாகவோ அல்லது ஒரு கோளகப் பரப்பும், ஒரு சமதளப்
பரப்பும் கொண்டதாகவோ அமைந்திருக்கும். பொதுவாக லென்சுகள் 1. குவிலென்சு
2 குழிலென்சு என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
இவை இருபுறமும் கோளகப் பரப்புகளைக்
கொண்டது. இவை மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும். இவற்றின்
வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன. எனவே
இவை 'குவிக்கும் லென்சுகள்' என்று
அழைக்கப்படுகின்றன.
இவை இருபுறமும் உள் நோக்கிக்
குழிந்த கோளகப் பரப்புகளைக் கொண்டது. இவை மையத்தில் மெலிந்தும், ஓரங்களில்
தடித்தும் காணப்படும். இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் விரிந்து
செல்கின்றன. எனவே இவை 'விரிக்கும் லென்சுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
பிறவகை
லென்சுகள்
தட்டக் குவிலென்சு : ஓர் இருபுற குவிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக
அமைந்திருந்தால் அது தட்டக் குவிலென்சு எனப்படும்.
தட்டக் குழிலென்சு : ஓர் இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக
அமைந்திருந்தால் அது தட்டக் குழிலென்சு எனப்படும்.
பல்வேறு வகையான லென்சுகள் படம் 2.2-இல்
காட்டப்பட்டுள்ளன.