லென்சின் திறன்
ஒரு ஒளிக்கதிர் லென்சின் மீது
படும்போது அக்கதிரானது குவிக்கப்படும் அல்லது விரிக்கப்படும் அளவானது லென்சின்
குவியத்தொலைவைப் பொறுத்தது. லென்சு ஒன்று தன்மீது விழும் ஒளிக்கதிர்களைக்
குவிக்கும் (குவிலென்சு) அல்லது விரிக்கும் (குழிலென்சு) அளவு லென்சின் திறன்
எனப்படுகிறது. எனவே, லென்சின் திறன் என்பது ஒரு லென்சின் குவிக்கும் அல்லது விரிக்கும் திறன்
என வரையறுக்கப்படுகிறது. லென்சின் திறன் என்பது எண்ணளவில் அந்த லென்சின் குவியத்
தொலைவின் தலைகீழ்மதிப்பிற்குச் சமம் என வரையறுக்கப்படுகிறது.
P = 1/f
……. (2.6)
லென்சின் திறனின் SI அலகு ‘டையாப்டர்’ ஆகும். இது ‘D’ என்ற
எழுத்தால் குறிக்கப்படுகிறது. லென்சின் குவியத் தொலைவு மீட்டர் (m) என்ற அலகாலும், லென்சின் திறனானது டையாப்டர் (D)
என்ற அலகாலும் குறிக்கப்படும் போது 1D = 1 m-1
ஒரு டையாப்டர் என்பது, ஒரு மீட்டர்
குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன் ஆகும்.
குறியீட்டு மரபின் படி, குவிலென்சின் திறன்
நேர்க்குறியாகவும், குழிலென்சின் திறன் எதிர்க் குறியாகவும்
கொள்ளப்படுகிறது.