குழிலென்சின்
வழியாக ஒளிவிலகல்
குழிலென்சின் முன்பாக வாய்ப்புள்ள
இரண்டு நிலைகளில் பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பங்கள் குறித்துக்
காண்போம்.
பொருளொன்று, குழி லென்சின்
முன்பாக, ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, நேரான, மிகச்சிறிய மாயப்பிம்பம் குழிலென்சின்
முதன்மைக் குவியத்தில் உருவாக்கப்படுகிறது.
பொருளொன்று குழிலென்சிற்கு முன்பாக, அளவிடக்கூடிய
தொலைவில் வைக்கப்படும் போது, குழிலென்சின் ஒளியியல்
மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும் இடையே நேரான,
சிறிய மாயப்பிம்பத்தை உருவாக்குகிறது.
லென்சிற்கும் பொருளுக்கும் இடையே
உள்ள தொலைவு குறையும் போது, பிம்பத்திற்கும் லென்சிற்கும் இடையே உள்ள தொலைவும் குறைகிறது. மேலும்
பிம்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனைப் படம் 2.14 ல்
காணலாம்.