லென்சின்
உருப்பெருக்கம்
கோளக ஆடிகளைப் போலவே, கோளக் லென்சுகளும்
உருப்பெருக்கம் செய்கின்றன. பிம்பத்தின் உயரத்திற்கும், பொருளின்
உயரத்திற்கும் இடையே உள்ள தகவு ‘உருப்பெருக்கம்' எனப்படுகிறது. உருப்பெருக்கம் 'm' என்ற எழுத்தால்
குறிக்கப்படுகிறது. பொருளின் உயரத்தை h எனவும், பிம்பத்தின் உயரத்தை h'
எனவும் கொண்டால்,
உருப்பெருக்கமானது, பிம்பத்தின் தொலைவு
மற்றும் பொருளின் தொலைவு ஆகியவற்றைக் கொண்டும் தொடர்பு படுத்தப்படுகிறது.
உருப்பெருக்கத்தின் மதிப்பு 1 ஐ விட அதிகமாக
இருந்தால், பொருளை விடப் பெரிய பிம்பமும், 1 ஐ விட குறைவாக இருந்தால் பொருளை விடச் சிறிய பிம்பமும் கிடைக்கும்.