குவிலென்சின்
வழியாக ஒளிவிலகல்
வெவ்வேறு தொலைவுகளில் பொருள்
வைக்கப்படும் போது, கு வி லென் சினால் உருவாக்கப்படும் பிம்பங்கள் குறித்து விரிவாகக்
காண்போம்.
பொருள் ஈறிலாத் தொலைவில்
வைக்கப்படும் போது, முதன்மைக் குவியத்தில் மெய்ப்பிம்பம் உருவாக்கப்படுகிறது. பிம்பத்தின்
அளவு பொருளின் அளவைவிடப் பலமடங்கு சிறியதாக இருக்கும்.
பொருளானது வளைவு மையத்திற்கு
அப்பால் வைக்கப்படும் போது, சிறிய தலைகீழான, மெய்ப் பிம்பமானது லென்சின்
மறுபுறம் வளைவு மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும்
இடையே தோன்றுகிறது. (படம் 2.7)
பொருளொன்று குவிலென்சின் வளைவு
மையத்தில் வைக்கப்படும் போது,
அதே அளவிலான, தலைகீழான, மெய்ப்பிம்பம்
லென்சின் மற்றொரு பக்கத்தின் வளைவு மையத்தில் கிடைக்கிறது. (படம் 2.8)
பொருளொன்று, குவிலென்சின் வளைவு
மையத்திற்கும், முக்கிய குவியத்திற்கும் இடையே வைக்கப்படும்
போது அளவில் பெரிய , தலைகீழான, மெய்ப்பிம்பம்
லென்சின் மறுபுறத்தில் வளைவு மையத்திற்கு அப்பால் உருவாகிறது. (படம் 2.9)
பொருளொன்று, குவிலென்சின்
முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும் போது, அளவில் பெரிய
தலைகீழான, மெய்ப்பிம்பம் ஈறிலாத் தொலைவில்
உருவாக்கப்படுகிறது. (படம் 2.10)
பொருளொன்று, குவிலென்சின்
முதன்மைக் குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே
வைக்கப்படும் போது, அளவில் பெரிய, நேரான
மாயப்பிம்பத்தைப் பொருள் இருக்கும் அதே பக்கத்தில் உருவாக்குகிறது. (படம் 2.11)