லென்சுகள் - குறியீட்டு மரபு | 10th Science : Chapter 2 : Optics
குறியீட்டு மரபு
லென்சுகளின் கதிர் வரைபடங்களில்
பல்வேறு தொலைவுகளை அளவிடுவதற்குக் கார்டீசியன் குறியீட்டு மரபு
பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீட்டு மரபின் படி,
1. பொருள் எப்போதும்
லென்சிற்கு இடப்பக்கம் வைக்கப்பட வேண்டும்.
2 அனைத்து
தொலைவுகளும், ஒளியியல் மையத்திலிருந்தே அளக்கப்பட வேண்டும்.
3. படுகதிரின்
திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும்.
4. படுகதிரின்
திசைக்கு எதிர்த்திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எதிர்குறியாகக் கொள்ள
வேண்டும்.
5. முதன்மை
அச்சுக்குச் செங்குத்தாக மேல் நோக்கி அளக்கப்படும் அளவுகளை நேர்குறியாகக் கொள்ள
வேண்டும்.
6. முதன்மை
அச்சுக்குச் செங்குத்தாகக் கீழ்நோக்கி அளக்கப்படும் அளவுகளை எதிர்குறியாகக் கொள்ள
வேண்டும்.