தாவரவியல் - வேரின் பண்புகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
பசுமையற்ற, உருண்ட, கீழ்நோக்கி (நேர் புவிநாட்டம்) மண்ணில் வளரும் தாவரத்தின் அச்சு வேர் எனப்படும். மண்ணில் இடப்பட்ட விதையிலிருந்து முதலில் வரும் பகுதி முளைவேர் எனப்படும். நீர் மற்றும் சத்துக்களை மண்ணிலிருந்து உறிஞ்சுவதும், தாவரத்தை நிலைநிறுத்துவதும் வேரின் வேலையாகும்.
வேரின் பண்புகள் (Characteristic features of the root)
• வேர் தாவர அச்சின் கீழ்நோக்கி வளரும் பகுதியாகும்.
• பொதுவாகப் பச்சையம் இல்லாததால் பசுமையற்றது.
• கணுக்கள், கணுவிடைப் பகுதிகள் மற்றும் மொட்டுகள் அற்றது (சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் ரூட்டேசி குடும்பத்தாவர வேர்களில் காணப்படும் மொட்டுகள் உடல இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றன).
• இவை வேர்த்தூவிகளைக் கொண்டிருக்கும். (மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்ச)
• இவை நேர் புவி நாட்டமும், எதிர் ஒளிநாட்டமும் கொண்டவை.