தாவரவியல் - செடிகள் வளரியல்பு | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
வளரியல்பு
(Habit)
ஒரு தாவரத்தின் பொது வடிவம் வளரியல்பு எனக் குறிக்கப்படுகிறது.
வளரியல்பைப் பொறுத்து தாவரங்கள் சிறுசெடிகள், புதர்ச் செடிகள், கொடிகள், மரங்கள் எனவகைப்படுத்தப்பட்டுள்ளன.
I.
சிறு செடிகள் (Herbs):
இவை மென்மையான தண்டு கொண்ட குறைந்த கட்டைத்தன்மை அல்லது
கட்டைத்தன்மையற்ற செடிகளாகும். எடுத்துக்காட்டு : பில்லான்தஸ் அமாரஸ், கிளியோம் விஸ்கோசா.
இவைகளின் வாழ்நாளைப் பொறுத்து இவை ஒருபருவத் தாவரம், இருபருவத் தாவரம் மற்றும்
பல் பருவத் தாவரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பல்லாண்டுவாழ் சிறு செடியானது குமிழம், கந்தம், மட்டநிலத்தண்டு (ரைசோம்), கிழங்கு போன்ற சிறப்பான தரைகீழ்த்
தண்டுகளைக் கொண்டுள்ளன. இந்தத் தரைகீழ் சிறப்பு தகவமைப்புகளைக் கொண்ட சிறுசெடிகள் நிலத்தடி தண்டுடைய தாவரங்கள் (Geophytes) என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு:
அல்லியம் சீபா
II.
புதர்ச்செடிகள் (Shrubs):
இவை தரை அருகிலிருந்து தோன்றும் கட்டைத்தன்மையுடைய
பல கிளைகளைக் கொண்டுள்ள பல்லாண்டு வாழ் தாவரங்களாகும். எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ் ரோசா சைனென்ஸிஸ் (செம்பருத்தி)
III.
கொடிகள் (Climbers):
மெலிந்த தண்டுகளைக் கொண்ட, ஆதாரத்தின் மேல் பற்றுருப்புகளைக்
கொண்டு வளரும் தாவரங்கள் கொடிகள் எனப்படும்.
இவற்றை வாழ்நாள் அடிப்படையில் ஒருபருவக் கொடிகள், இருபருவக் கொடிகள், பல்பருவக் கொடிகள்
என்றும், அதன் தண்டின் தன்மையைப் பொறுத்து மென்கொடிகள்,
வன்கொடிகள் என்றும் வகைப்படுத்தலாம்.
வன்கொடி : பற்றுருப்புகளற்று ஆதாரத்தைச் சுற்றி வளரும் வலிய கட்டைத்
தண்டினைக் கொண்ட பல்பருவக் கொடிகள் வன் கொடிகளாகும். வெப்ப மண்டலக் காடுகளில் இவ்வகை
கொடிகள் பரவலாகக் காணப்படுகின்றன. வன்கொடிகள் வெப்ப மண்டலக் காடுகளில் மரமேலடுக்கில்
முக்கிய அங்கமாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: வெண்டிலாகோ (வேம்படம்), எண்டாடா,
போகைன்வில்லா
IV.
மரங்கள் (Trees):