தாவரவியல் - உடலப் புற அமைப்பியல் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
உடலப் புற அமைப்பியல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தினைக்
கற்போர்
• பூக்கும் தாவரங்களின்
பாகங்களை அறிந்து கொள்ளுதல் ,
•
உடலப்
புற அமைப்பியலையும், இனப்பெருக்கப் புற அமைப்பியலையும் வேறுபடுத்துதல்,
•
வேரின்
வகைகளையும், அவற்றின் உருமாற்றங்களையும் ஒப்பிடுதல்,
•
தண்டின்
உருமாற்றங்களையும், அவற்றின் பணிகளையும் புரிந்து கொள்ளுதல்,
•
இலையின்
அமைப்பையும், பணிகளையும் பகுத்துணர இயலும்.
பாட
உள்ளடக்கம்
3.1 வளரியல்பு
3.2 வாழிடம்
3.3 வாழ்காலம்
3.4 பூக்கும் தாவரத்தின் பாகங்கள்
3.5 வேரமைவு
3.6 தண்டமைவு
3.7 இலை
ஒரு உயிரினத்தின் பல்வேறு புறப்பண்புகளைப் பற்றி படிப்பது
புற அமைப்பியலாகும். தாவரப் புற அமைப்பியல்
என்பது தாவரங்களின் வடிவம், அளவு, அமைப்பு மற்றும் அவற்றின் பாகங்களை (வேர், தண்டு,
இலை, பூக்கள், கனிகள், விதைகள்) பற்றி படிப்பதாகும். தாவர வகைப்பாட்டைப் பற்றி அறிந்து
கொள்வதற்குத் தாவரப் புற அமைப்பியல் இன்றியமையாததாகும். பயிர் விளைச்சலைத் தீர்மானிக்கும்
முக்கியக் காரணியாகவும், வாழும் மற்றும் அழிந்த தொல் தாவரங்களின் குறிப்பிட்ட வாழ்விடம்
மற்றும் பரவலைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், இனப் பரிணாமக் குழுமத்தைப் புரிந்து கொள்வதற்கும்
தாவரத்தின் புறப்பண்புகள் துணைபுரிகின்றன.
புற
அமைப்பியலை இருபெரும் பிரிவுகளின் கீழ் பயிலலாம்
அ) உடலப்புற அமைப்பியல்
(Vegetative Morphology)
- இதில் வேரமைவு, தண்டமைவு, இலையமைவு ஆகியவை அடங்கும்.
ஆ) இனப்பெருக்கப்
புற அமைப்பியல் (Reproductive Morphology) - இதில் மலர் / மஞ்சரி, கனி, விதை போன்றவை அடங்கும்.
உடலப்
புற அமைப்பியல்:
உடலப் புற அமைப்பியல் என்பது தாவரத்தின் வடிவம், அளவு, அமைப்பு, அதன் பாகங்களைப்
(வேர், தண்டு, இலை) பற்றி படிப்பதாகும். தாவரப் புற அமைப்பியலைப் புரிந்துகொள்ள கீழ்க்கண்டவற்றை
அறிந்து கொள்வது அவசியம். (1) வளரியல்பு (2) வாழிடம் (3) வாழ்காலம்.