Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | இலையின் பண்புகள்

தாவரவியல் - இலையின் பண்புகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

   Posted On :  17.05.2022 02:19 am

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

இலையின் பண்புகள்

இலைகள் தண்டின் பசுமையான, மெல்லிய, தட்டையான, பக்கவாட்டில் தோன்றும் புறத்தோன்றி வளரிகளாகும்.

இலை (Leaf)

இலைகள் தண்டின் பசுமையான, மெல்லிய, தட்டையான, பக்கவாட்டில் தோன்றும் புறத்தோன்றி வளரிகளாகும். ஒளிச்சேர்க்கை மற்றும் நீராவிப்போக்கு நடைபெறும் முக்கியப் பகுதியாக இலைகள் விளங்குகின்றன. தாவரத்திலுள்ள அனைத்து இலைகளும் சேர்ந்த தொகுப்பிற்கு இலைத்தொகுதி என்று பெயர். 

 


I. இலையின் பண்புகள்:

1. இலைகள் தண்டின் பக்கவாட்டு வளரிகள் ஆகும்.

2. இவை தண்டின் கணுவிலிருந்து உருவாகின்றன.

3. இவை தண்டின் புறத்தோன்றிகளாக உருவாகின்றன.

4. இவை வரையறுக்கப்பட்ட வளர்ச்சியினைக் கொண்டுள்ளன.

5. நுனிமொட்டு அற்றவை.

6. இவை மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளன. அவை முறையே இலையடிப்பகுதி, இலைக்காம்பு மற்றும் இலைப்பரப்பு ஆகும்.

7. இலைப்பரப்பில் வாஸ்குல இழைகளைப் பெற்ற முக்கிய அமைப்பு ஊடுருவி பரவிச் செல்கின்றன. இவற்றிற்கு நரம்புகள் என்று பெயர்.

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Characteristics of leaf in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : இலையின் பண்புகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்