முதல் நிலை பணிகள், இரண்டாம் நிலை பணிகள் - தண்டின் பணிகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
தண்டின் பணிகள் (Functions of the stem)
முதல் நிலை பணிகள்
1. தாவரத்திற்கு நிலை ஆதாரத்தை வழங்கி இலைகள், மலர்கள் மற்றும் கனிகளைத் தாங்க உதவுகின்றது.
2. வேரிலிருந்து நீரையும், கனிமங்களையும் மற்ற பகுதிகளுக்குக் கடத்த உதவுகிறது.
3. இலைகள் தயாரிக்கும் உணவைத் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
இரண்டாம் நிலை பணிகள்
1. உணவு சேமிப்பு: எடுத்துக்காட்டு: சொலானம் டியூபரோசம் (உருளைக்கிழங்கு), கொலகேஷியா
(சேனைக்கிழங்கு), ஜிஞ்சிஃபெர் அஃபிசினேல் (இஞ்சி)
2. நீள் வாழ்தல்
/ இனப்பெருக்கம்: எடுத்துக்காட்டு:
ஜிஞ்சிஃபெர் அஃபிசினேல், குர்குமா லாங்கா.
3. நீர் சேமிப்பு: எடுத்துக்காட்டு: ஒபன்ஷியா (சப்பாத்திக் கள்ளி)
4. மிதவைத்தன்மை: எடுத்துக்காட்டு: நெப்டுனியா (நீர் தொட்டாற்சிணுங்கி)
5. ஒளிச்சேர்க்கை: எடுத்துக்காட்டு: ஒபன்ஷியா, ரஸ்கஸ், யுஃபோர்பியா
(கள்ளி).
6. பாதுகாப்பு: எடுத்துக்காட்டு: சிட்ரஸ் (எலுமிச்சை), போகன்வில்லா,
அக்கேஷியா (கருவேலம்).
7. ஆதாரம்: எடுத்துக்காட்டு: பாஸிஃபுளோரா, வைடிஸ்,
சிஸ்சஸ் குவாட்ராங்குலாரிஸ் (பிரண்டை).