தாவரவியல் - வேரின் பகுதிகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
வேரின் பகுதிகள் (Regions of root)
வேர்முனை பாரங்கைமா செல்களால் ஆன குவிந்த ஓர் அமைப்பினால் சூழப்பட்டிருக்கும். இதனை வேர் மூடி என்பர். இது வளராக்கத் திசுக்களை பாதுகாக்கிறது.
பண்டானஸ் (தாழை) தாவரத்தில் பல்லடுக்கு வேர்மூடி காணப்படுகிறது. பிஸ்டியா ஐக்கோர்னியா போன்ற நீர்வாழ் தாவரங்களில் வேர்மூடிக்கு பதில் வேர்ப்பைகள் உள்ளன. வேர்மூடியிலிருந்து சில மில்லி மீட்டருக்கு மேலுள்ள வேர்ப்பகுதியை அதன் வளராக்கத் தன்மையின் அடிப்படையில் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கலாம்.
1. வளராக்கத்திசு மண்டலம்
2. நீட்சி மண்டலம்
3. முதிர்ச்சி மண்டலம்.