கேள்வி பதில்கள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 (கூட்டல் பண்புகள்) | 7th Maths : Term 1 Unit 1 : Number System
பயிற்சி 1.1
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) (-30) + _____ = 60
[ விடை : 90 ]
(ii) (-5) + _____ = -100
[ விடை : -95 ]
(iii) (-52) + (-52) = _____
[ விடை : -104 ]
(iv) _____ + (-22) = 0
[ விடை : 22 ]
(v) _____ + (-70) = 70
[ விடை : 140 ]
(vi) 20 + 80 + _____ = 0
[ விடை : -100 ]
(vii) 75 + (-25) = _____
[ விடை : 50 ]
(viii) 171 + _____ = 0
[ விடை : -171 ]
(ix) [ (-3) + (-12) ] + (-77) = _____ + [ (-12) + (-77) ]
[ விடை : -3 ]
(x) (-42) + [ _____ + (-23) ] = [ _____+15 ] + _____
[ விடை : +15; -42; -23 ]
2. சரியா, தவறா எனக் கூறுக.
(i) (-32) இன் கூட்டல் எதிர்மறை -32
[ விடை : தவறு ]
(ii) (-90) + (-30) = 60
[ விடை : தவறு ]
(iii) (-125) + 25 =-100
[ விடை : சரி ]
3. கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக
(i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக. 8 மற்றும் -12
தீர்வு
8 + (-12) = -4
(ii) எண்கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக. (-3) மற்றும் (-5)
தீர்வு
(-3) + (-5) = -8
(iii) (-100) + (-10) = -110
(iv) 20 + (-72) = -52
(v) 82 + (-75) = 7
(vi) -48 + (-15) = -63
(vii) -225 + (-63) = -288
4. தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.
தீர்வு
தாள் I = -25
தாள் II = -13
குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் = தாள் I + தாள் II
= (- 25) + (-13)
= -38
5. ஒரு வினாடி வினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெபெண்கள் +30, -20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் -20, 0, +30 எனில், வெற்றிபெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?
தீர்வு
குழு A = (+30) + (-20) + 0 = 10
குழு B = (-20) + (0) + (+30) = 10
குழு A = குழு B [ஆம், முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலும்.]
6. (11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?
தீர்வு
சேர்ப்பு விதி :
(A + B) + C = A + (B + C)
(11 + 7) + 10 = 18 + 10 = 28
11 + (7 + 10) = 11 + 17 = 28
சேர்ப்பு விதியின் கீழ் இவை சமம்.
7. கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க.
தீர்வு.
0 + 2 = 2
1 + 1 = 2
(-1) + 3 = 2
(-2) + 4 = 2
(-3) + 5 = 2
ஃ 0 + 2, 1 + 1, (-1) + 3, (-2) + 4, (-3) + 5 (ஏதேனும் ஒன்று )
கொள்குறி வகை வினாக்கள்
8. நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +18°C ஆகும். வெப்பநிலை மணிக்கு 3°C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை -12°C ஆக இருக்கும்.
(i) 12 நள்ளிரவு
(ii) 12 நண்பகல்
(iii) 10 மு.ப
(iv) 10 பி.ப
[ விடை : (iii) 10 மு.ப ]
9. குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.
(i) -9 + (- 5) + 6
(ii) 18 + (-12) - 6
(iii) -4 + 2 + 10
(iv) 10 + (-4) + 8
[ விடை : (i) -9 + (-5) + 6 ]
10. (-10) + (+7) = ________
(i) +3
(ii) -3
(iii) -17
(iv) +17
[ விடை : (ii) – 3 ]
11. (-8) + 10 + (-2) =
(i) 2
(ii) 8
(iii) 0
(iv) 20
[ விடை : (iii) 0 ]
12. 20 + (-9) + 9 =
(i) 20
(ii) 29
(iii) 11
(iv) 38
[ விடை : (i) 20 ]
விடைகள்
பயிற்சி 1.1
1. (i) 90 (ii) −95 (iii) −104 (iv) 22 (v)140 (vi) −100 (vii) 50 (viii) –171 (ix) −3 (x) 15, −42 , −23
2. (i) தவறு (ii)தவறு (iii) சரி
3. (i) −4 (ii) −8 (iii) −110 (iv) –52 (v)7 (vi) −63 (vii) −288
4. –38
5.
6.
கொள்குறி வகை வினாக்கள்
8. (iv) 10 முப
9. (i) –9+(–5)+6
10.(ii) –3
11. (iii) 0
12. (i) 20