எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 1 Unit 1 : Number System
பாடச்சுருக்கம்
● இயல் எண்கள், பூச்சியம் மற்றும் குறை எண்களின் தொகுப்பு முழுக்களாகும்.
● ஒரு எண் கோட்டில், பூச்சியத்திற்கு இடது புறமாக அனைத்துக் குறை முழுக்களும், வலது புறமாக அனைத்து மிகை முழுக்களும் முறையாகக் குறிக்கப்பட்டிருக்கும்.
● இரு மிகை முழுக்களின் கூடுதல் மிகையாகவும், இரு குறை முழுக்களின் கூடுதல் குறையாகவும் இருக்கும்.
● ஒரு மிகை முழுவையும், குறை முழுவையும் கூட்டுவதற்கு அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து, பெரிய எண்ணின் குறியை இட வேண்டும்.
● முழுக்கள், கூட்டல் செயலியின் கீழ் அடைவுப் பண்பையும், பரிமாற்றுப் பண்பையும், சேர்ப்புப் பண்பையும் பெற்றுள்ளது.
● இரு மிகை முழுக்களின் பெருக்கலும், இரு குறை முழுக்களின் பெருக்கலும் ஒரு மிகை எண்ணாகும்.
● வெவ்வேறு குறிகளையுடைய இரு முழுக்களின் பெருக்கல் ஒரு குறையெண்ணாகும்.
● முழுக்கள், பெருக்கல் செயலியின் கீழ் அடைவுப் பண்பு, பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
● முழுக்களின் கூட்டல் சமனி 0 ஆகும்.
● முழுக்களின் பெருக்கல் சமனி 1 ஆகும்.
இணையச் செயல்பாடு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி -1:
கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜீயோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு - எண்ணியல்” என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். பருவம் - 1 ஐத் தேர்ந்தெடுக்கவும்.
படி - 2:
ஒவ்வொரு இயலுக்கும் பலபணித்தாள்கள் இருக்கும். அவற்றில் “எண்ணியல்” என்றபணித்தாளைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எண்கோட்டின் மூலமாகக் கூட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. நழுவலை நகர்த்தி எண்களை மாற்றவும். நீ விடைகளைக் காணலாம்.
செயல்பாட்டிற்கான உரலி
எண்ணியல்: https://ggbm.at/f4w7csup
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.