எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - வகுத்தல் பண்புகள் | 7th Maths : Term 1 Unit 1 : Number System
வகுத்தல் பண்புகள்
-5 ஐ 3 ஆல் வகுக்கும்பொழுது, மதிப்பு காண முடியுமா? கிடைக்கும் விடை நிச்சயம் ஒரு முழுவாக இருக்காது. மேலும் முழுக்களின் தொகுப்பு, வகுத்தலின் கீழ் ‘அடைவுப்பண்பை’ நிறைவு செய்யாது. மேலும் 5 எடுத்துக்காட்டுகளின் மூலம் சோதிக்க.
வகுத்தலின் கீழ்ப் பரிமாற்றுப் பண்பினைச் சோதித்து அறிய -5 மற்றும் 3 என்ற முழுக்களை எடுத்துக்கொள்வோம்
(-5) ÷ 3 ≠ 3 ÷ (-5). மேலும் 5 ÷ (-3) ≠ (-3) ÷ 5 மற்றும் (-5) ÷ (-3) ≠ (-3) ÷ (-5)
எனவே, முழுக்களின் தொகுப்பு வகுத்தலின் கீழ் “பரிமாற்றுப்பண்பை” நிறைவு செய்யாது. மேலும் 5 எடுத்துக்காட்டுகளின் மூலம் சோதிக்க.
பரிமாற்றுப்பண்பை நிறைவு செய்யாததால், சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யாது என்பது நாம் அறிந்ததே.
-7 மற்றும் 1 ஐ எடுத்துக்கொள்வோம்.
(-7) ÷ 1 = -7 ஆனால் 1÷ (-7) ≠ -7.
(-6) ÷ (-1) மற்றும் 6 ÷ (-1) என்பதை எடுத்துக்கொள்வோம்.
(-6) ÷ (-1) = 6 மற்றும் 6÷(-1) = -6.
ஒரு முழுவை (-1) ஆல் வகுக்க அதே முழு கிடைக்காது. எனவே முழுக்களின் வகுத்தலானது சமனிப் பண்பை நிறைவு செய்யாது. ஏதேனும் 5 முழுக்களைக் கொண்டு சோதித்துப் பார்க்க.
குறிப்பு
ஒரு முழுவைப் பூச்சியத்தால் வகுப்பது அர்த்தமற்றது. ஆனால் பூச்சியத்தை ஒரு முழுவால் வகுக்கக் கிடைப்பது பூச்சியமாகும்.